Gentleman 2: நயன்தாரா நடிப்பில் உருவாகும் ஜென்டில்மேன் பார்ட் 2..? ரசிகர்கள் உற்சாகம்..!
ஷங்கரின் முதல் படமான ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாகவும், அதில் நயன்தாரா பிரதான கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்திய திரையுலகின் பிரம்மாண்ட இயக்குனர்களில் ஒருவர் ஷங்கர். இவர் இயக்கிய அனைத்து படங்களும் மாபெரும் வெற்றி பெற்றவை. அவரது முதல் படமான ஜென்டில்மேன் ஒரு மாபெரும் வெற்றிப்படமாக அமைந்தது. இயக்குனர் ஷங்கர் யார் என்று திரும்பி பார்க்க வைத்த படமாகவும் அது அமைந்தது.
இந்த நிலையில், 1993ம் ஆண்டு வெளியான ஜென்டில்மேன் படத்தின் இரண்டாம் பாகம் தற்போது உருவாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 29 ஆண்டுகளுக்கு பிறகு வெளியாகும் இந்த படத்திற்கு நயன்தாரா நாயகியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் நடிகர்கள், நடிகைகள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் படிக்க : Kiruthiga Udhayanidhi: யார்னு தெரியாதவங்க வீட்டுக் கதவையெல்லாம் தட்டிருக்கேன்.. இதுக்காகத்தான்.. கிருத்திகா உதயநிதி ஷேரிங்ஸ்..!
ஷங்கரின் தவிர்க்க முடியாத படமான ஜென்டில்மேன் படத்தை தயாரித்த தயாரிப்பாளர் குஞ்சுமோனே இந்த படத்தையும் தயாரிக்க உள்ளார். ஆனால், ஜென்டில்மேனை இயக்கிய ஷங்கரே இந்த படத்தை இயக்குவாரா? அல்லது வேறு யாரேனும் இயக்க உள்ளனரா? போன்ற தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை. ஜென்டில்மேன் 2ம் பாகம் படத்திற்கு இந்திய சினிமாவின் மாபெரும் வெற்றி பெற்ற பாகுபலி படத்திற்கு இசையமைத்த எம்.எம்.கீரவாணி இசையமைப்பார் என்றும் கூறப்படுகிறது, நயன்தாரா நடிப்பில் ஜென்டில்மேன் 2ம் பாகம் உருவாக உள்ளதாக வெளியாகியுள்ள தகவல்களால் நயன்தாரா ரசிகர்கள் மிகுந்த குஷியில் உள்ளனர்.
ஷங்கரின் முதல்படமான ஜென்டில்மேன் படத்தில் அர்ஜூன் நாயகனாக நடித்திருந்தார். மதுபாலா நாயகியாக நடித்திருந்தார். கவுண்டமணி மற்றும் செந்தில் நகைச்சுவையில் அசத்தியிருப்பார்கள். நம்பியார், மனோராமா மற்றும் வினீத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் உருவாகிய இந்த படம் அர்ஜூன் மற்றும் ஷங்கர் இருவது கேரியரிலும் முக்கிய படமாக அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
Yash Toofan Song : குறுக்குல யாரும் போயிராதீங்க சார்.. கே.ஜி.எஃப் 2 ட்ரெய்லர் தேதியோடு வெளியானது தூஃபான் பாடல்..!
Prashanth marriage : செல்லாத முதல் திருமணம்.. 2-வது திருமணத்திற்கு தயாரான பிரசாந்த்.. பொண்ணு யார் தெரியுமா?
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்