பணம் கேட்டு கேம் சேஞ்சர் தயாரிப்பளரை மிரட்டிய 45 பேர்...
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் படத்தின் தயாரிப்பாளரிடம் பணம் கேட்டு அடையாளம் தெரியாத 45 பேர் மிரட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது
கேம் சேஞ்சர்
ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடித்துள்ள கேம் சேஞ்சர் திரைப்படம் கடந்த ஜனவரி 10 ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. இந்தியன் 2 திரைப்படத்தில் பலத்த அடி வாங்கிய ஷங்கர் கேம் சேஞ்சர் படத்தின் வழி கம்பேக் கொடுப்பாரா என்கிற எதிர்பார்ப்பு ரசிகர்கள் இடையில் இருந்தது. ஆனால் பல சிக்கல்கலுக்கு மத்தியில் வெளியாகிய கேம் சேஞ்சர் திரைப்படம் ரசிகர்களிடம் நெகட்டி விமர்சனங்களைப் பெற்று வசூல் பெரும் தொய்வை சந்தித்து வருகிறது.
கேம் சேஞ்சர் பட தயாரிப்பாளருக்கு மிரட்டல்
லைகா ப்ரோடக்ஷன் தயாரிப்பில் ஷங்கர் இயக்கிய இந்தியன் 2 திரைப்படம் நஷ்டத்தில் முடிந்தது. இந்தியன் 3 படம் தொடர்பாக ஷங்கர் மற்றும் லைகா இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் கேம் சேஞ்சர் படத்தை தமிழ்நாட்டில் வெளியிட லைகா ப்ரோடக்ஷன்ஸ் தயாரிப்பாளர் கவுன்சிலில் மனுதாக்கல் செய்ததாக தகவல்கள் வெளியாகினர்.
திரையரங்கில் வெளியாகிய கேம் சேஞ்சர் ரசிகர்களிடம் படு மோசமாக ட்ரோல் செய்யப்பட்டது. முதல் நாளில் உலகளவில் 186 கோடி வசூலித்த கேம் சேஞ்சர் அடுத்தடுத்த நாட்களில் வசூல் பெரும் சரிவை சந்தித்து வருகிறது. இதுமட்டுமில்லாமல் திரையரங்கில் வெளியாகிய அதே நாளில் கேம் சேஞ்சர் படத்தின் எச்.டி குவாலிட்டி படம் ஆன்லைனில் லீக்கானது. இது படத்திற்கு மிகப்பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.
கேம் சேஞ்சர் படத்தின் ரிலீஸூக்கு சில நாட்கள் முன்பு படத்தின் தயாரிப்பாளர் மற்றும் முக்கிய நபர்கள் சிலருக்கு சமூக வலைதளங்கள் மற்றும் வாட்ஸ் அப் வழியாக மிரட்டல்கள் வந்துள்ளன. கேட்ட பணத்தை தராவிட்டால் படத்தை ஆன்லைனில் வெளியிடுவோம் என இந்த கும்பல் தெரிவித்துள்ளார்கள். படம் வெளியாகும் இரண்டு நாட்கள் முன்பு படத்தின் முக்கியமான காட்சி ஒன்றை இணையத்தில் வெளியிட்டுள்ளார்கள். மேலும் படம் வெளியானது அதே நாளில் இணையத்தில் படத்தை லீக் செய்துள்ளார்கள்.
BREAKING: Game Changer team received THREAT🚫⚠️ from 45 people before movie release.
— Manobala Vijayabalan (@ManobalaV) January 13, 2025
Before the release of 'Game Changer', some key people in the film team along with the producers received threats from some people on social media and WhatsApp. They started a fight, saying that…
இதில் சம்பந்தபட்ட 45 பேர்களுக்கு எதிராக படக்குழு சைபர் கிரைம் காவல்துறையிடம் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும் இதுகுறித்து சைபர் கிரைம் காவல் விசாரணை நடத்தி வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளன