பொங்கல் என்றாலே முதலில் ஞாபகம் வருவது ஜல்லிக்கட்டு தான்.
ஏறுதழுவதல் என்னும் வார்த்தை காலப்போக்கில் ஜல்லிக்கட்டு என மறுவியது.
2014-ம் ஆண்டு காளைகளை துன்புறுத்துவதாக கூறி விலங்குகள் நல வாரியம் வழக்கு தொடுத்தது.
இதனால் 2015-2016 ஜல்லிக்கட்டு நடைபெறவில்லை.
தமிழக இளைஞர்கள், ஜல்லிக்கட்டுக்காக இணைந்து போராடினர்.
இந்த விளையாட்டின்மீது இளைஞர்களுக்கு எவ்வளவு ஆர்வம் இருக்கிறது என்று அந்த போராட்டத்தில் தெரிந்தது.
தமிழகத்தில் பல இடங்களில் ஜல்லிக்கட்டு நடந்தாலும், மக்கள் விரும்பி பார்ப்பது மூன்று இடங்களில் நடப்பதை தான்.
இன்று(14/01/2025) உலகப்புகழ் பெற்ற அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நடைபெறுகிறது.
15/01/2025-ல் மதுரை பாலமேட்டில் ஜல்லிக்கட்டு நடைபெறும்.
16/01/2025-ல் மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு நடைபெறும்.