National Award : இந்த ஆண்டு தேசிய விருது யாருக்கு ? நம்ம போட்டியாளர்கள் இவர்கள்தான்
National Award 2025 : இந்த ஆண்டு தேசிய விருது வெல்வதற்கு அதிக சாத்தியம் உடைய நடிகர் நடிகை இசையமைப்பாளர் யார் என்பதைப் பார்க்கலாம்

தேசிய விருதுகள் 2025
2024 ஆம் ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருதுகள் இந்த ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கலாம். கடந்த ஆண்டு தமிழில் வெளியான சில படங்கள் மொழி கடந்த வெற்றிபெற்றன. மேலும் தேசிய விருது வெல்லும் தரத்திற்கு சிறந்த நடிப்பையும் நடிகர்கள் வெளிப்படுத்தியுள்ளார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு தேசிய விருது வெல்ல தகுதியான கலைஞர்களின் ஒரு சிறு பட்டியலைப் பார்க்கலாம்
மகாராஜா
நிதிலன் ஸ்வாமிநாதன் இயக்கத்தில் கடந்த ஆண்டு வெளியான மகாராஜா திரைப்படம் மக்களிடம் பரவலான வரவேற்பைப் பெற்றது. விஜய் சேதுபதியின் 50 ஆவது படமாக வெளியான மகராஜா விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றிபெற்றதோடு சீனாவில் இப்படம் வெளியாகியது. அந்த வகையில் சிறந்த இயக்குநருக்கான பிரிவில் இயக்குநர் நிதிலன் ஸ்வாமிநாதன் மற்றும் சிறந்த நடிகருக்கான பிரிவில் விஜய் சேதுபதியும் இடம்பெறுவார்கள் என எதிர்பார்க்கலாம்.
ஜமா
தெருக்கூத்து கலைஞர்களைப் மையமாக வைத்து உருவான படம் ஜமா. பாரி இளவழகன இப்படத்தை இயக்கி நடித்திருந்தார். தன் உயிரை விட உயர்வாக இந்த கலையை கருதும் கலைஞர்கள் தங்கள் தனிப்பட்ட வாழ்க்கையில் கடைபிடிக்கும் ஏற்றத்தாழ்வுகளை மிக நுட்பமாக காட்டியது ஜமா திரைப்படம். கலை மற்றும் கலாச்சாரத்தைப் பற்றிய படத்திற்கான பிரிவில் இந்த படம் தேசிய விருதுக்கு தேர்வாகும் என எதிர்பார்க்கலாம்.
வாழை
மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான வாழைத் திரைப்படம் கடந்த ஆண்டின் மிகப்பெரிய வெற்றிப்படங்களில் ஒன்றாக அமைந்தது. வாழை சுமக்கும் தொழிலாளிகளைப் பற்றிய உண்மை சம்பவத்தை மையமாக வைத்து உருவான படம் வாழை. சிவனைந்தான் என்கிற சிறுவனின் பார்வையில் சொல்லப்பட்ட இக்கதை பார்வையாளர்களை கண் கலங்கவைத்தது. வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிபெற்றது. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான பிரிவில் வாழை படத்தின் நடித்த பொன்வேல் தேர்வாவார் என எதிர்பார்க்கலாம்
கங்குவா - மிலன்
சூர்யா நடித்து கடந்த ஆண்டு வெளியான கங்குவா திரைப்படம் எதிர்பார்த்த அளவு வெற்றிபெறவில்லை. இருந்தாலும் இந்த படத்தில் கலை இயக்குநர் மிலனின் பணி வியக்கத்தக்கது. படத்தின் மிகப்பெரிய பாசிட்டிவாக படத்தின் ஆர்ட் டிசைனிங் குறிப்பிடப் பட்டது. விடாமுயற்சி படத்தின்போது மிலம் உயிரிழந்தார். மிலன் விட்டுச் சென்ற பணிகளை அவரது மனைவி மரியா மிலன் தொடர்ந்து வருகிறார். இந்த ஆண்டு தேசிய விருதுகளில் மிலனுக்கு நிச்சயம் பெரிய அங்கீகாரம் கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்
அமரன்
எந்த படத்திற்கு விருது கிடைக்கிறதோ இல்லையோ அமரன் படம் நிச்சயம் குறைந்தபட்சம் இரண்டு விருதுகளையாவது தட்டிச்செல்லும்.
மேஜர் முகுந்தாக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்திய சிவகார்த்திகேயன். இந்துவாக சாய் பல்லவி , ஜி.வி பிரகாஷின் இசை , இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி , என ஒரு படத்தின் அனைத்து பிரிவைச் சேர்ந்தவர்களும் தேசிய விருதுக்கு தகுதியாவர்கள்.






















