(Source: Poll of Polls)
Most Paid Actress : பிரியாமணி முதல் சமந்தா வரை... ஓடிடியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியல்
ஓடிடியில் அதிக சம்பளம் வாங்கும் நடிகைகளில் பட்டியல் வெளியாகியுள்ளது
பெண்களை மையமாக வைத்து பல்வேறு படங்கள் , வெப்சீரிஸ்கள் ஓடிடியில் வெளியாகி வரும் நிலையில் அதிக சம்பளம் வாங்கும் டாப் ஐந்து நடிகைகளைப் பார்க்கலாம்.
அதிக சம்பளம் வாங்கும் டாப் ஐந்து நடிகைகள்
சினிமாவில் எப்போது நடிகைகளின் சம்பளம் நடிகர்களின் சம்பளம் பலமடங்கு குறைவாகவே இருந்திருக்கிறது. எவ்வளவு பெரிய ரோலாக இருந்தாலும் அந்த படத்தில் கதநாயகனாக நடிக்கும் நடிகரின் சம்பதளத்தில் பாதிதான் நடிகை பெறுவார். இப்படியான நிலையில் ஓடிடி தளங்களில் வருகை நடிகைகளுக்கு சாதகமாக அமைந்துள்ளது. பெண்களை மையமாக வைத்து பல்வேறு படங்களும் , வெம் சீரிஸ்களும் தொடர்ச்சியாக வெளியாகி வருகின்றன. முன்னணி நடிகைகள் முதல் புதுமுக நடிகைகள் வரை இதில் நடித்து வருகிறார்கள். கதையில் நடிக்க தங்களுக்கு இருக்கும் டிமாண்டின் அடிப்படையில் தங்களது சம்பளத்தை நடிகைகள் பெற்று வருகிறார்கள். ஓடிடி தளத்தில் நேரடியாக வெளியாகும் படங்களில் நடிப்பதற்கு அதிக சம்பளம் வாங்கும் டாப் 5 நடிகைகளைப் பார்க்கலாம்
பிரியாமணி
நடிகை பிரியாமணி இந்த பட்டியலில் ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளார். அமேசான் பிரைமில் வெளியான ’தி ஃபேமிலி மேன் “ 1 மற்றும் 2 ஆவத் சீசனில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார் பிரியாமணி. இந்த தொடருக்காக 10 இல் இருந்து 20 லட்சம் வரை அவர் சம்பளமாக பெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
ராஷி கன்னா
பாலிவுட் நடிகர் ஷாஹித் கபூர் மற்றும் விஜய் சேதுபதி இணைந்து நடித்து கடந்த ஆண்டு வெளியானத் தொடர் ஃபார்ஸி. இந்த தொடரில் ராஷி கன்ன கதாநாயகியாக நடித்திருந்தார். இந்த தொடரில் நடித்ததற்காக அவர் 1.5 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றுள்ளதாக தெரிகிறது.
சுஷ்மிதா சென்
மிஸ் யுனிவர்ஸ் புகழுக்கு சொந்தக்காரரான நடிகை சுஷ்மிதா சென் இந்த வரிசையில் 3 ஆவது இடத்தை பிடித்துள்ளார். சமீபத்தில் இவரது நடிப்பில் ஆர்யா வெப் சீரிஸின் மூன்றாவது சீசன் வெளியானது. முன்னதாக தாலி என்கிற படத்தில் சுஷ்மிதா சென் திருநங்கை வேடத்தில் நடித்திருந்தார். ஓடிடியில் வெளியாகும் படங்களுக்கு 2 கோடி வரை அவர் சம்பளமாக வாங்குவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ராதிகா ஆப்தே
தொடர்ச்சியாக வெப் சீரிஸ் மற்றும் படங்களில் நடித்து வருபவர் நடிகை ராதிகா ஆப்தே. பா ரஞ்சித் இயக்கிய கபாலி படத்தில் நடித்து தமிழ் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தார். ஓடிடியில் நடிப்பதற்கு 4 கோடி வரை ராதிகா அப்தே சம்பளமாக பெறுவதாக கூறப்படுகிறது.
சமந்தா
இந்த வரிசையில் நடிகை சமந்தா முதல் இடத்தைப் பிடித்துள்ளார். அமேசான் பிரைமில் வெளியான தி ஃபேமிலி மேன் தொடரில் நடித்ததற்காக இவருக்கு 4 கோடி சம்பளமாக வழங்கப்பட்டதாம். தற்போது ராஜ் மற்றும் டிகே இயக்கும் சிட்டடெல் தொடரில் நடித்து வருகிறார். அமேசான் பிரைம் தயாரித்திருக்கும் இந்த பிரம்மாண்டனமான தொடரில் நடிக்க 10 கோடி ரூபாய் சமந்தாவுக்கு சம்பளமாக கொடுக்கப் பட்டதாக கூறப்படுகிறது.