மேலும் அறிய

Friday Ott Release : அதான் மழ விட்டிருச்சே...ஓடிடியில் வெளியாகும் இந்த படங்களை பார்த்து மகிழுங்கள்...

Friday October 18 Movie Release : இந்த வாரம் அக்டோபர் 18 வெள்ளியன்று ஓடிடி தளங்களில் வெளியாகும் படங்களைப் பார்க்கலாம்

ரஜினியின் வேட்டையன் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. அடுத்து அக்டோபர் 18 ஆம் தேதி விமல் நடித்துள்ள ஸ்டார் திரைப்படம் வெளியாக இருக்கிறது. இந்த மாத இறுதியில் தீபாவளியை முன்னிட்டு அமரன் , பிளடி பெக்கர் , பிரதர் உள்ளிட்ட படங்கள் வெளியாக இருக்கின்றன. எல்லா பக்கமும் கடும் மழை பெய்து வரும் நிலையில் வீட்டில் இருந்தபடி ஓடிடியில் வெளியாகும் இந்த புதிய படங்களை நீங்கள் பார்க்கலாம்.

 

லப்பர் பந்து - Lubber Panthu (தமிழ்)

ஹரிஷ் கல்யாண் , அட்டகத்தி தினேஷ் நடித்து கடந்த செப்டம்பர் மாதம் திரையரங்கில் வெளியான படம் லப்பர் பந்து. கிரிக்கெட் , அரசியல் , காதல் , ஃபேமிலி செண்டிமெண்ட் என எல்லா அம்சங்களையும் கொண்ட சிறப்பான வெற்றிப்படமாக அமைந்துள்ளது லப்பர் வந்து. திரையரங்கில் 25 நாட்களுக்கு மேல் ஓடி தற்போது அக்டோபர் 18 ஆம் தேதி டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக இருக்கிறது.

 

ஸ்நேக்ஸ் & லேடர் - Snakes & Ladder ( தமிழ்)

 

கார்த்திக் சுப்பராஜின் ஸ்டோன் பெஞ்ச் தயாரிப்பில் உருவாகியிருக்கும் புதிய வெப் சீரிஸ் ஸ்நேக்ஸ் & லேடர். குழந்தைகளை மையப்படுத்திய  டார்க் காமெடி கலந்த விறுவிறுப்பான மர்மத் தொடராக உருவாகியிருக்கும் இந்த சீரிஸ் மொத்தம் 9 எபிசோட்களாக வெளியாகிறது. அக்டோபர் 18 ஆம் தேதி அமேசான் பிரைமில் இந்த தொடர் வெளியாகும்.

 

1000 பேபீஸ் -  1000 Babies (மலையாளம்)

 

நடிகர் ரஹ்மான் நடித்து நீனா குப்தா இயக்கியுள்ள மலையாள வெப் சீரிஸ் 1000 பேபீஸ். இந்த தொடரின் மூலம் முதல்முறையாக ஓடிடி தளத்தில் கால் பதிக்கிறார் ரஹ்மான். ஒரே நேரத்தில் பல்வேறு பச்சிளம் குழந்தைகள் ஒரு மருத்துவமனையில் இறந்துபோக அதை விசாரணை செய்யும் காவல் அதிகாரியாக வருகிறார் ரஹ்மான். மிஸ்டரி த்ரில்லராக உருவாகி இருக்கும் இந்த தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் அக்டோபர் 18 ஆம் தேதி வெளியாகிறது

 

சோல் ஸ்டோரீஸ் - Soul Stories ( மலையாளம்)

சனில் களத்தில் இயக்கியிருக்கும் இந்த மலையாளத் தொடர் பெண்களை மையப்படுத்திய கதைகளை பேசுகிறது. அனார்கலி மரிக்கார், கோபிகா மஞ்சுஷா, வஃபா கதீஜா, ஆர்.ஜே.கார்த்திக், ஆஷா பாடத்தில் மற்றும் ரெஞ்சி பணிக்கர் உள்ளிட்டவர்கள் இத்தொடரில் நடித்துள்ளார்கள். அக்டோபர் 18 ஆம் தேதி மனோரமா மேக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

தலைப்பு செய்திகள்

"முடிந்தால் இதைச் செய்து காட்டுங்கள்!"... சவால்விட்ட சிவாஜி... எம்ஜிஆர் கொடுத்த பதில்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
வேகமெடுக்கும் காவேரி பிரச்சனை..கர்நாடக திரையரங்குகளில் இருந்து நீக்கப்படும் ஜனநாயகன்
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
மூன்று தீபாவளி வரை ஹவுஸ்ஃபுல்... இதுவரை எந்த தமிழ் படமும் முறியடிக்காத சாதனை!
Sasikumar:
Sasikumar: "விஜய் முதலமைச்சரானதில் ஒரே ஒரு வருத்தம்தான்.." இயக்குனர் சசிகுமார் சொன்னது ஏன்?

வீடியோ

Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
சிஎம் விஜய் கர்நாடகாவிற்கு வர வேண்டாம் - டி.கே.சிவக்குமார் திடீர் அறிவிப்பு - காரணம் என்ன.?
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
செந்தில் பாலாஜியை கைது செய்ய தடை.! முன் ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு
MK Stalin: TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
TVK ஆட்சி அமைந்ததில் இருந்தே தடங்கல்தான்..! அவகாசம் நீட்டிக்கப்பட வேண்டும் - அரசுக்கு ஸ்டாலின் கோரிக்கை
L Subramaniam: இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
இந்திய வயலின் ஜாம்பவானுக்கு மிகப்பெரிய கவுரவம்; இலங்கையின் உயரிய மரியாதையை பெற்ற எல். சுப்பிரமணியம்
Income Tax Return: இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
இன்றே கடைசி..! வருமான வரி தாக்கல் செய்யாவிட்டால் ரூ.5000 அபராதம் - கூடுதல் அவகாசம் யாருக்கு?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
அந்தர் பல்டி அடித்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்.. டம்மியாகவே வைத்திருக்கும் தவெக - காரணம் என்ன?
BMW iX3 Unveiled: ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
ஆத்தாடி ஆத்தா.! ஒரே சார்ஜில் 805 கிமீ மைலேஜா.?! BMW iX3 EV SUV அறிமுகம்; கார் சந்தையில் புரட்சி
Hyundai Neira EV: சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
சபாஷ்..சரியான போட்டி.! கியா கேரன்ஸ்-க்கு நேரடி சவால்.! தட்டித் தூக்குமா ஹூண்டாய் நீரா E-MPV.?
Embed widget