நாங்க எல்லாம் இளிச்சவாயனா...சசிகுமாரை விமர்சித்து ப்ளூ சட்டை மாறன் பதிவு
Blue Sattai maran : நடிகர் சசிகுமாரை விமர்சித்து சினிமா ஆர்வலர் ப்ளூ சட்டை மாறனின் எக்ஸ் தள பதிவு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது

நடிகராக ஜொலிக்கும் சசிகுமார்
சுப்ரமணியபுரம் படத்தின் மூலமாக மிக முக்கியமான இயக்குநராக மதிக்கப்பட்டார் சசிகுமார். சமீப காலங்களில் அவர் படங்களை இயக்குவதில்லை என்றாலும் தொடர்ச்சியாக நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அயோத்தி , கருடன் , நந்தன் என சசிகுமார் நடித்த படங்கள் மக்களிடம் விமர்சன ரீதியாக வரவேற்பைப் பெற்று வருகின்றன. அந்த வகையில் சசிகுமார் நடித்து சமீபத்தில் திரையரங்கில் வெளியாகியுள்ள டூரிஸ்ட் ஃபேமிலி திரைப்படம் குடும்ப ரசிகர்களிட பாராடுக்களை பெற்றுள்ளது
டூரிஸ்ட் ஃபேமிலி
அறிமுக இயக்குநர் அபிஷன் ஜீவின் இயக்கத்தில் உருவாகியுள்ள காமெடி டிராமா திரைப்படம் டூரிஸ்ட் ஃபேமிலி. சசிகுமார் , சிம்ரன் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். யோகி பாபு , எம்.எஸ் பாஸ்கர் , மிதுன் ஜெய் , பக்ஸ் பகவதி பெருமாள், ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். எம்.ஆர்.பி என்டர்டெயின்மெண்ட் மற்றும் மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளது. தமிழகத்தில் குடிபெயரும் ஈழத் தமிழ் குடும்பத்தை மையமாக வைத்து காமெடி டிராமா திரைப்படமாக உருவாகியிருக்கிறது டூரிஸ்ட் ஃபேமிலி. சூர்யாவின் ரெட்ரோ படத்துடன் வெளியான போதிலும் டூரிஸ்ட் ஃபேமிலி படத்திற்கு ஃபேமிலி ஆடியன்ஸிடம் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது
நாங்கள் இளிச்சவாயனா ? ப்ளூ சட்டை மாறன் விமர்சனம்
தனக்கு இருந்த கடன் பிரச்சனைகளை தீர்க்கவே தான் நடிப்பில் அதிகம் கவனம் செலுத்தியதாக சசிகுமார் பல நிகழ்ச்சிகளில் தெரிவித்துள்ளார். " கடன் பிரச்சனையை தீர்க்கதான் படங்களில் நடித்தேன். ஒரு சில படங்களில் நடிக்கும்போது இந்த படம் ஓடாது என்று தெரிந்தும் நடித்தேன். கடன் பிரச்சனை தீர்ந்த பின் தான் எனக்கு பிடித்த படங்களில் நடித்தேன். " என சசிகுமார் தெரிவித்துள்ளார். இதனை குறிப்பிட்டு சினிமா ஆர்வலர் ப்ளூ சட்டை மாறன் சசிகுமார் விமர்சிக்கும் விதமாக பதிவிட்டுள்ளார். " கடனை தீர்க்க.. ஓடாது என தெரிந்தும் மொக்கை படங்களில் நடித்தீர்களே.. உங்களை நம்பி.. அதை பணம் தந்து பார்த்தவர்கள் எல்லாம் இளிச்சவாய் முட்டாள்கள். அப்படித்தானே?" என அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்த பதிவிற்கு ரசிகர்கள் கடுமையாக தங்கள் எதிர்ப்பை தெரிவித்து வருகிறார்கள்.
கடனை தீர்க்க.. ஓடாது என தெரிந்தும் மொக்கை படங்களில் நடித்தீர்களே..
— Blue Sattai Maran (@tamiltalkies) May 3, 2025
உங்களை நம்பி.. அதை பணம் தந்து பார்த்தவர்கள் எல்லாம் இளிச்சவாய் முட்டாள்கள். அப்படித்தானே? pic.twitter.com/pEbjlMIiND





















