தந்தையின் மரணம்.. கொலையான தாய்.. ட்ரெண்டாகும் பிக்பாஸ் அமீர்.. ரசிகர்கள் உருக்கம்
ஒரு வயதில் தனது தந்தையை இழந்த அமீர் 16 வயதில் தாயையும் இழந்தார். தந்தை இயற்கை மரணமடைய தாய் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து அவரும், அவரது அண்ணனும் ஒரு ஆசிரமத்தில் வளர்ந்தனர்.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது. பொதுவாக பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றவர்களில் தங்களது மனம் கவர்பவர்களுக்கு ரசிகர்கள் ஆர்மி ஆரம்பிப்பது எப்போதும் வழக்கம்.
ஓவியாவில் ஆரம்பித்த இந்த பழக்கமானது ஐந்து சீசன்களாக தொடர்ந்துவருகிறது. எப்போது பிரபலமான முகங்களுடன் களைகட்டும் பிக்பாஸ் வீடு இந்த சீசனில் பெரிதாக பிரபலம் இல்லாதவர்களைக் கொண்டிருக்கிறது. இருந்தாலும் சுவாரசியத்திற்கு குறையில்லாமல் சென்று கொண்டிருக்கிறது நிகழ்ச்சி. இரண்டாவது வைல்ட் கார்டு போட்டியாளராக நடன இயக்குநர் அமீர் பிக்பாஸ் வீட்டுக்குள் சென்றிருக்கிறார். பிரபுதேவாவின் தீவிர ரசிகரான இவர் ஏடிஎஸ் க்ரூ ஊட்டி என்ற நடன குழுவை உருவாக்கியவர்.
விஜய் டிவியில் நடந்த கிங்ஸ் ஆஃப் டான்ஸ், டான்ஸ் வெர்சஸ் டான்ஸ் உள்ளிட்ட பல்வேறு நடன போட்டிகளில் பங்கேற்று அவரது குழு பல்வேறு பரிசுகளை பெற்றிருக்கிறது. அதுமட்டுமின்றி அமீர் சில திரைப்படங்களுக்கு நடன அமைப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார்.
ஆனால் பிக்பாஸ் வீட்டுக்குள் இவர் சென்றதும், அங்கு அமீரன் செயல்பாடுகளும் மக்கள் மத்தியில் இவருக்கு அறிமுகம் கிடைத்திருக்கிறது. அதேசமயம் அமீரின் சிறுவயது வாழ்க்கை ரணங்கள் சூழ்ந்ததாக இருந்திருக்கிறது என்பதை அவரது நண்பர் ஒருவர் வெளிப்படுத்தியிருக்கிறார். ஒரு வயதில் தனது தந்தையை இழந்த அமீர் 16 வயதில் தாயையும் இழந்தார். தந்தை இயற்கை மரணமடைய தாய் கொலை செய்யப்பட்டார். இதனையடுத்து அவரும், அவரது அண்ணனும் ஒரு ஆசிரமத்தில் வளர்ந்தனர். ராணுவத்தில் சேர ஆசைப்பட்டு பாதுகாப்பு துறை படித்த அவரை காலம் நடன அமைப்பாளராக மாற்றியிருக்கிறது.
சிறிய வயதிலேயே தந்தையையும், தாயையும் இழந்து தனியாளாக போராடி தற்போது ஒரு நிலைக்கு வந்திருக்கும் அமீருக்கு பலர் தங்களது ஆதரவை தெரிவிக்க ஆரம்பித்திருக்கின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: சீமான் மீது திமுக ஐடி விங்க் சார்பில் புகார்: மேடையில் செருப்பை காட்டிய விவகாரம்!
‛6 மணிக்கு மேல போனா சோறு இல்ல...’ -நடிகர் விஜய் தந்தை எஸ்.ஏ.சி பேச்சு!