உங்க தன்னடகத்திற்கு அளவு இல்லையா...பேட்டியாளரிடம் திமிராக பதில் சொன்ன விஜய் சேதுபதி
சமீபத்திய பேட்டி ஒன்றில் கலந்துகொண்ட விஜய் சேதுபதி பேட்டியாளரின் கேள்விக்கு பதில் சொன்ன விதம் ரசிகர்களிடம் விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறது

மற்ற நடிகர்களைப் போல் இல்லாமல் தன் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசக்கூடியவர் நடிகர் விஜய் சேதுபதி. சில நேரங்களில் மனதை கவரும் அவரது பேச்சு சில நேரங்களில் முகம் சுளிக்கவும் வைக்கிறது. அந்த வகையில் சமீபத்தில் தி ஹாலிவுட் ரிப்போர்டர் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பத்திரிகையாளரின் கேள்விக்கு அவர் பதிலளித்த விதம் ரசிகர்களுக்கு கசப்பான ஒரு அனுபவமாக அமைந்துள்ளது.
காந்தி டாக்ஸ் படக்குழு பேட்டி
விஜய் சேதுபதி நடிப்பில் வரும் ஜனவரி 30 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் காந்தி டாக்ஸ். அரவிந்த் சாமி , அதிதி ராவ் ஹைதரி ஆகியோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். கிஷோர் பாண்டுரங் பெலேகர் இப்படத்தை இயக்கியுள்ளார். ஏ.ஆர் ரஹ்மான் இசையமைத்துள்ளார். வசனமே இல்லாமல் முழுக்க முழுக்க மெளனப் படமாக உருவாகியுள்ளதே காந்தி டாக்ஸ் படத்தின் சிறப்பு. இப்படத்திற்காக தி ஹாலிவுட் ரிப்போர்டர் இந்தியா யூடியூப் சேனலுக்கு விஜய் சேதுபதி மற்றும் படக்குழுவினர் பேட்டி அளித்தனர். இந்த நேர்காணலில் வசனங்கள் இல்லாமல் நடிப்பதால் முகத்தில் ரியாக்ஷன்களை வலுக்கட்டாயமாக காட்டவேண்டிய சூழல் ஏற்பட்டதா என பேட்டியாளர் கேள்வி எழுப்பினார்.
ரூடாக பேசிய விஜய் சேதுபதி
இந்த கேள்விக்கு விஜய் சேதுபதி " நான் எந்த படத்திற்கும் திட்டமிட்டு நடிக்க செல்வதில்லை. எந்த வித ஐடியாவும் இல்லாமல் ஒரு படத்தின் செட்டிற்கு செல்கிறேன். அந்த காட்சிக்கு ஏற்ற மனநிலையில் இருந்தே நான் நடிக்க முயல்கிறேன். நான் நடிப்பது மிக எளிமையாக தெரியலாம் ஆனால் என் நடிப்பு வெளியே தெரியாமல் இருக்க நான் ரொம்ப கஷ்டப்படுகிறேன். நான் நடிப்பது வெளியே தெரிந்துவிட்டால் நால் பலவீனமானவனாக ஆகிவிடுகிறேன். எந்த மாதிரியான கதையாக இருந்தாலும் என்னால் அதற்கு ஏற்ற வகையில் தகவமைத்துக் கொள்ள முடியும் " என்று விஜய் சேதுபதி கூறினார்.
இதற்கு அந்த பேட்டியாளர் 'நீங்கள் தான் மிஸ்டர் வெர்சடைல் ஆச்சே' என்று கூற அதற்கு விஜய் சேதுபதி விஜய் சேதுபதி கடுமையாக எனக்கு எந்த லேபிளும் தேவையில்லை என்று கடுமையாக பதிலளித்தார். பாராட்டும் விதமாகவே தான் அப்படி சொன்னதாக அந்த பேட்டியாளர் அவருக்கு விளக்கினார். அருகில் இருந்த நடிகை அதிதி ராவ் ஹைதரியும் உங்களுக்கு கிடைக்கும் பாராட்டை ஏற்றுக்கொள்ளுங்கள் என கூறினார்.
ஆனால் தனக்கு எந்த விதமான பட்டமும் தேவையில்லை என்றும் தான் முடிந்த அளவிற்கு ஒரு கதையை கேட்டு அது தனக்கு பிடித்திருந்தால் அதில் நடிப்பதாகவும். அந்த படம் பணம் சம்பாதிக்கிறதா இல்லையா என்பதைப் பற்றி எனக்கு கவலையில்லை. என்னால் முடிந்த அளவு நேர்மையாக அந்த கதையை எனது நடிப்பில் வழியாக கடத்த முயல்கிறேன். என் நடிப்பைப் பற்றிய பட்டங்கள் எனது நடிப்பை பாதிக்கின்றன. " என விஜய் சேதுபதி கூறினார்.
இந்த காணொளியைப் பார்த்த ரசிகர்கள் விஜய் சேதுபதி இவ்வளவு எரிச்சலாக பதிலளித்திருக்க தேவையில்லை என கூறி வருகிறார்கள். தன்னடக்கமாக இருக்கிறார் என்றாலும் அதை இவ்வளவு அகங்காரத்துடன் வெளிப்படுத்த தேவையில்லை என விஜய் சேதுபதி நடந்துகொண்டது குறித்து பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.





















