ஸ்கிரிப்ட் பேப்பர் தர மாட்டேன்...அகம்பாவமாக பேசிய வெற்றிமாறன்...கொண்டாடிய ரசிகர்களே கடுப்பான தருணம்
தனது படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு ஸ்கிரிப் பேப்பர் தர மாட்டேன் என இயக்குநர் வெற்றிமாறன் கூறியுள்ளதை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்

விடுதலை 2 க்கு அடுத்தபடியாக இயக்குநர் வெற்றிமாறன் சிம்பு நடிக்கும் படத்தை இயக்கி வருகிறார். இதனிடையில் தயாரித்துள்ள பேட் கேர்ள் திரைப்படம் வரும் செப்டம்பர் 5 ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கிறது. இப்படத்திற்கான ப்ரோமோஷனில் வடசென்னை 2 படத்தைப் பற்றிய தகவல்களையும் அவர் பகிர்ந்துகொண்டார். வெற்றிமாறன் சொன்ன ஒரு சில விஷயங்கள் ரசிகர்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளன
தயாரிப்பு நிறுவனத்தை மூடுகிறோம்
கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பேனி சார்பாக திரைப்படங்களை தயாரித்து வந்த வெற்றிமாறன் தயாரிப்பு நிறுவனத்தை மூடுவதாக அறிவித்துள்ளார். இயக்குநராக இருப்பது சுதந்திரமானது ஆனால் தயாரிப்பாளராக இருப்பது என்பது மிகுந்த சவாலானது என்பதால் இந்த முடிவை அவர் எடுத்துள்ளதாக கூறினார். தனது தயாரிப்பில் பேட் கேர்ள் திரைப்படமே கடைசி படம் என அவர் இறுதி முடிவாக கூறினார்
வடசென்னை 2
சிம்புவை வைத்து வடசென்னையை மையப்படுத்திய கதையை இயக்கி வருகிறார் வெற்றிமாறன. இப்படத்தைப் பற்றி கூறியபோது ' வட சென்னை சிம்புவுக்கு எழுதின கதை. ஆனால் அது நடக்கவில்லை. தனுஷ் நடிப்பதாக முடிவான பின் கதையில் நிறைய மாற்றங்களை செய்தேன். தற்போது சிம்புவை வைத்து நான் இயக்கும் படம் முன்னதாக நான் எழுதிய அதே கதைதான் . இரண்டு கதைகளும் ஒரே காலகட்டத்தில் நடப்பதால் வடசென்னையில் வரும் சில கதாபாத்திரங்கள் இந்த படத்திலும் இடம்பெறுவார்கள் தனுஷை தவிர " என வெற்றிமாறன் தெரிவித்தார்
நடிகர்களுக்கு ஸ்கிரிப் கொடுக்க மாட்டேன்
தனது படங்களில் நடிக்கும் நடிகர்களுக்கு தான் முழுமையான ஸ்கிரிப் பேப்பரை தருவதில்லை என வெற்றிமாறன் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது " என்னுடைய படங்களில் நான் பெரும்பாலும் நடிகர்களுக்கு ஸ்கிரிப் பேப்பர் தரமாட்டேன். ஏனால் நான் திரைக்கதையே எழுதுவதில்லை. எந்த காட்சி எடுக்க போகிறோம் என்ன வசனம் என எதுவுமே அவர்களுக்கு தெரியாது. படப்பிடிப்பு தொடங்கும்போது 150 பக்கத்திற்கான கதை என்னிடம் இருக்கும் அதை வைத்து ஒவ்வொரு காட்சிகளையும் செட்டில் எழுதி நடிகர்களுக்கு கொடுப்பேன். இதனால் சில நடிகர்கள் என் படத்தில் நடிக்க மாட்டார்கள். " என அவர் கூறினார். வெற்றிமாறனின் கருத்தை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் விமர்சித்து வருகிறார்கள். கதையே இல்லாமல் நடிகர்கள் எப்படி நடிப்பார்கள். இதனால் தான் சூர்யாவின் வாடிவாசல் படத்தில் தாமதம் ஏற்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன
நடிகர்களுக்கு ஸ்கிரிப் தரமாட்டேன்




















