Sivakarthikeyan: ‘சூப்பர் அண்ணா’ .. மாவீரனுக்காக சிவகார்த்திகேயனின் செய்த செயல்.. பாராட்டும் ரசிகர்கள்..!
மாவீரன் படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் செய்த பயணம் குறித்த தகவல் ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.

மாவீரன் படத்தின் ப்ரோமோஷனுக்காக நடிகர் சிவகார்த்திகேயன் செய்த பயணம் குறித்த தகவல் ரசிகர்களிடையே பெரும் பாராட்டைப் பெற்றுள்ளது.
சாந்தி டாக்கீஸ் நிறுவனம் தயாரிப்பில் மடோன் அஷ்வின் இயக்கத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் ‘மாவீரன்’. இந்த படத்தில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குநர் மிஷ்கின், சுனில் குமார், பாலாஜி சக்திவேல், யோகிபாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். பரத் ஷங்கர் இசையமைத்துள்ள இந்த படம் கடந்த ஜூலை 14 ஆம் தேதி வெளியானது. முதல் பாதி காமெடி, இரண்டாம் பாதி ஆக்ஷன் என ரசிகர்களிடம் கலவையான விமர்சனத்தை மாவீரன் படம் பெற்றுள்ளது.
ஆனாலும் சிவகார்த்திகேயன் படம் என்பதால் கூட்டம் கூட்டமாக மாவீரன் படம் பார்க்க ரசிகர்கள் தியேட்டருக்கு படையெடுத்து வருகின்றனர். இதனால் படத்தின் வசூல் எகிறியுள்ளது. ஏற்கனவே மாவீரனின் டீசர், ட்ரெய்லர், பாடல்கள் என ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்ற படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பு நிலவியது. பிரின்ஸ் படத்தின் தோல்வியால் சோகத்தில் இருந்த சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு மாவீரன் படத்தின் வெற்றி நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் கொடுத்துள்ளது.
மாவீரன் படத்தில் சிவகார்த்தியேகன் காமிக்ஸ் வரைபட கலைஞராக நடித்துள்ளார். மிஷ்கின் அரசியல்வாதியாகவும், அதிதி ஷங்கர் பத்திரிகை துறையில் வேலை பார்ப்பவராகவும் வருகிறார். படத்திற்கு பெரும் பலமாக யோகிபாபு காமெடி அமைந்துள்ளது. மேலும் நீண்ட இடைவெளிக்குப் பின் நடிகை சரிதா இந்த படத்தில் நடித்துள்ளார்.இதனிடையே மாவீரன் படத்தின் படத்தின் ப்ரோமோஷன் பணிகளுக்காக சிவகார்த்திகேயன் பயணம் குறித்த விவரங்கள் வெளியாகியுள்ளது.
அவர் தனது அடுத்தப்படத்தின் படத்திற்காக காஷ்மீரில் நடைபெறும் ஷூட்டிங்கில் கலந்து கொண்டுள்ளார். இதற்கு நடுவில் தான் மாவீரன் ப்ரோமோஷன் பணிகளிலும் கலந்து கொண்டிருந்தார். இதனிடையே சினிமா ட்ராக்கர் மனோபாலா விஜயன், “சிவகார்த்திகேயன் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிக்காக காஷ்மீரில் இருந்து சென்னை, ஹைதராபாத், கொச்சின், பெங்களூர், மலேசியா, துபாய் என பல இடங்களுக்கு சென்றுள்ளார்.
இதேபோல் ரோகிணி, காசி, வெற்றி, பாரத் ஆகிய தியேட்டர்களுக்கு மாவீரன் படத்தின் ரிலீஸ் தேதி அன்று சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து மீண்டும் ஷூட்டிங்கிற்காக காஷ்மீர் சென்றுள்ளார்” என தெரிவித்துள்ளார். இதனைப் பார்த்த ரசிகர்கள் சிவகார்த்திகேயனின் டெடிகேஷன் லெவலை பாராட்டி தள்ளியுள்ளனர்.

