மேலும் அறிய

Venkant prabhu | நுங்கம்பாக்கம் to தேனாம்பேட்டை! வெங்கட்பிரபுவை விரட்டி விரட்டி செல்பி எடுத்த ரசிகர்.!

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் “மாநாடு” . வெளியாகி இரண்டு வாரங்களை எட்டிய நிலையில் படம் தற்போதும் வசூல் வேட்டை நடத்தி வருகிறது.

மாநாடு படம் சிம்புவின் கெரியரில் மட்டுமல்லாது, வெங்கட் பிரபுவின் கெரியரிலும் மிக முக்கியமான படமாக இருக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் படம் வெளியாகியிருந்தாலும் படக்குழுவினரை வியக்க வைக்கும் அளவிற்கான வசூல் வேட்டை நடத்தி வருகிறது. இந்த நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் காரில் செல்லும் இயக்குநர் வெங்கட் பிரபுவை கண்ட அவரின் தீவிர ரசிகர் ஒருவர் , அவரை துரத்தி சென்று செல்ஃபி எடுத்த புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. நுங்கம்பாக்கத்திலிருந்து வெங்கட் பிரபுவை காரின் பின் தொடர்ந்த அந்த இளைஞர், தேனாம்பேட்டை வரையில் சென்று வெங்கட் பிரபுவுடன் செல்ஃபி எடுத்துள்ளார். வெங்கட் பிரபு காரில் அமர்ந்தபடியே போஸ் கொடுக்கும் அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாக ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

சமீபத்தில் மாநாடு திரைப்படத்தின் வெற்றிக்காக ரசிகர்களுக்கு நன்றி தெரிவிப்பதற்காக ட்விட்டர் ஸ்பேஸில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார் வெங்கட் பிரபு . அப்போது ரசிகர் ஒருவர் மாநாடு 2 உருவாக வாய்ப்பிருக்கிறதா என்ற கேள்வி கேட்க , அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு , நிச்சயமாக மாநாடு 2 எடுப்பதற்கான திட்டம் இருக்கிறது. அதில்  மாநாடு படத்தில் பிரபலமான டைம் லூப்பை பயன்படுத்தி மங்காத்தா மற்றும் மாநாடு கதாபாத்திரங்களை ஒன்றாக இணைக்கும் திட்டம் தனக்கு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

தற்போது தனக்கான கமிட்மெண்டுகளை முடித்து மீண்டும் மாநாடு 2 படத்திற்கான படப்பிடிப்புகளை துவங்குவாராம் வெங்கட் பிரபு. மாநாடு திரைப்படத்தை சுரேஷ் காமாட்சி தயாரிக்க , யுவன் சங்கர் ராஜா,இசையமைத்துள்ளார். 'மாநாடு' படத்தில் கல்யாணி பிரியதர்ஷன், பிரேம்கி அமரன், கருணாகரன், எஸ்.ஏ.சந்திரசேகர், ஒய்.ஜி.மகேந்திரன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.படத்தில் சிம்பு அப்துல் காதர் என்னும் இஸ்லாமிய இளைஞராக வலம் வருகிறார். தனது நண்பனுக்காக இரத்த தானம் செய்ய முற்படும் பொழுது , சிம்பு டைம் லூப்பில் மாட்டிக்கொள்கிறார். அப்போது நடக்கும் பிரச்சனைகளும் அதற்கான தீர்வும்தான் படத்தின் கதை.படம் முதல் வாரத்தில் 30 கோடி ரூபாயை தாண்டி வசூல் வேட்டை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

 

தலைப்பு செய்திகள்

Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
Dhanush : 1 கோடி செலவில் ஐடி விங்..நடிகர் தனுஷின் அடுத்த அரசியல் நகர்வு?
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
அந்த படம் வந்தால் எல்லாம் அடங்கிடும்...ட்ரோல்கள் குறித்து லோகேஷ் கனகராஜ்
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘பாரிஸ் கஃபே’ இசை வெளியீட்டு விழா
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு
‘ONE MAN’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Aavin Milk Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்தி அறிவித்த CM விஜய் - ஒரு லிட்டருக்கு எவ்வளவு தெரியுமா?
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
Thirumavalavan: மரண பயத்தை காட்டிய தொண்டர்கள்.. நொந்துபோன திருமாவளவன்.. வீடியோ மூலம் விளக்கம்!
TN Weather News: சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
சென்னை உட்பட 18 மாவட்டங்களில் இடி., மின்னலுடன் இன்று மழை - தமிழக வானிலை அறிக்கை
TN MTC Job: தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
தமிழ்நாடு பேருந்துகளில் உத்தரபிரதேச நடத்துனர்களா? நடந்தது என்ன? யார் மீது தவறு? முழு விவரம்
Gold and silver rate today : இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
இன்று நகை வாங்க சூப்பர் சான்ஸ்.! ஒரே நாளில் திடீர் ட்விஸ்ட்.- இன்றைய விலை நிலவரம் இதோ..
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Train Service: எழும்பூரில் பராமரிப்பு பணி.. செப்டம்பரில் இந்த 4 ரயில் சேவையில் மாற்றம்.. நோட் பண்ணுங்க!
Skoda Superb: 40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
40KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங், ப்ரீமியம் டிசைன், வசதிகள் - ஸ்கோடா சூப்பர்ப் வந்தாச்சு - டெலிவரி எப்போ?
Skoda Slavia: 8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
8 ஸ்பீட் AT ட்ரன்ஸ்மிஷன், மசாஜ் இருக்கைகள், AI அசிஸ்ட், பெரிய ஸ்க்ரீன்கள் - புது ஸ்லாவியா எப்படி இருக்கு?
Embed widget