![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Premji Amaran: 'கணவர் பிரேம்ஜியுடன் சேர்ந்து விட்டேன்’ .. போட்டோ வெளியிட்ட பிரபல பாடகி - குழப்பத்தில் ரசிகர்கள்
பிரேம்ஜியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட பிரபல பாடகி வினைட்டா, அவரை கணவர் என குறிப்பிட்டதால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.
![Premji Amaran: 'கணவர் பிரேம்ஜியுடன் சேர்ந்து விட்டேன்’ .. போட்டோ வெளியிட்ட பிரபல பாடகி - குழப்பத்தில் ரசிகர்கள் Famous singer vinaita recent instagram post rejoin with husband Premji amaran fans shocking Premji Amaran: 'கணவர் பிரேம்ஜியுடன் சேர்ந்து விட்டேன்’ .. போட்டோ வெளியிட்ட பிரபல பாடகி - குழப்பத்தில் ரசிகர்கள்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/23/0ebc9bae99faf97ad0f0cea4b963ed6b1674447228946572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிரேம்ஜியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்ட பிரபல பாடகி வினைட்டா, அவரை கணவர் என குறிப்பிட்டதால் ரசிகர்கள் குழப்பமடைந்தனர்.
பிரேம்ஜி:
தமிழ் சினிமாவில் பன்முக திறமைகள் கொண்டவர்களில் ஒருவரான கங்கை அமரனின் இளைய மகன் பிரேம்ஜி. அண்ணன் வெங்கட்பிரபு இயக்கிய சென்னை 600028 படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தான் ரசிகர்களிடத்தில் பிரபலமானார். நடிப்பு, பாடகர், இசை என தன் பங்கிற்கு திறமைகளை வெளிப்படுத்தி வருகிறார். தொடர்ந்து சந்தோஷ் சுப்பிரமணியம், சத்யம், சரோஜா, மங்காத்தா, கோவா, ஒன்பதில் குரு, சேட்டை, பிரியாணி, மாஸ், யட்சன், சென்னை 28 -2, ஜோம்பி,மாநாடு, பிரின்ஸ் உள்ளிட்ட பல படங்களில் பிரேம்ஜி நடித்துள்ளார்.
குறிப்பாக வெங்கட்பிரபு இயக்கும் படங்களில் எல்லாம் பிரேம்ஜிக்கு ஹீரோவுக்கு இணையான கேரக்டர் கொடுக்கப்படும். இதனை ரசிகர்கள் கிண்டல் செய்தாலும் அவர் எதையும் கருத்தில் கொள்வதில்லை. 43 வயதான பிரேம்ஜி இதுவரை திருமணம் செய்துக் கொள்ளவில்லை. அவருக்கு திருமணம் செய்து வைக்கும் பணிகளில் அவரது குடும்பத்தினர் ஈடுபட்டு வரும் நிலையில், பிரேம்ஜி காதலித்து வருவதாகவும் ஒரு தகவல் உலா வருகிறது.
View this post on Instagram
மீண்டும் கணவர் பிரேம்ஜியுடன்:
அந்த வகையில் கடந்தாண்டு பிப்ரவரி மாதம் கில்லாடி, ஆதலால் காதல் செய்வீர் உள்ளிட்ட திரைப்படங்களில் பாடி இருக்கும் பாடகி வினைட்டா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பிரேம்ஜியுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை பகிர்ந்திருந்தார். என் கைகளுக்கு இடையில் இருட்டினில் உன்னுடன் நடனமாடுகிறேன் என தெரிவித்திருந்தார். இதனால் பிரேம்ஜி கமிட்டட் ஆகிவிட்டார் என ரசிகர்கள் முடிவு செய்தனர். ஆனால் அதெல்லாம் ஒன்றும் இல்லை என அவர் இந்த தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் பிரேம்ஜி அடிக்கடி யாராவது ஒருவரை கலாய்த்து பதிவுகளை வெளியிட்டுவார். இந்த நிலையில், வினைட்டா மீண்டும் இன்ஸ்டாகிராமில் ஸ்டோரி பக்கத்தில் பிரேம்ஜியுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டிருந்தார். இருவரும் கட்டியணைத்தபடி இருக்கும் அந்த போட்டோவில் “மீண்டும் என் புருஷனுடன் இணைந்து விட்டேன்” என பதிவிட்டதோடு, “என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான்” என்ற பாடலையும் அவர் பதிவிட்டிருந்தார். இதனைப் பார்த்து ஷாக்கான ரசிகர்கள் பிரேம்ஜியும் வினைட்டாவும் ரகசியமாக திருமணம் செய்துக் கொண்டார்களா என்ற கேள்வியை எழுப்பியுள்ளனர்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)