மேலும் அறிய

18 ஆண்டுகளுக்குப் பிறகு தனது படத்தை ப்ரோமோட் செய்யப்போகும் அஜித் !

18 ஆண்டுகளுக்குப் பிறகு அஜித் ‘DareDevil’ பட புரமோஷனில் பங்கேற்பாரா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

நடிகர் அஜித்தின் அடுத்த படமான ‘டேர்டெவில்’ குறித்த அறிவிப்பு வெளியானது முதலே படம் தொடர்பான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது. ‘குட் பேட் அக்லி ’ படத்தின் மூலம் அஜித்துடன் இணைந்து வெற்றி பெற்ற இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் மீண்டும் அவரை இயக்குகிறார். இந்தப் படத்தின் மூலம் அஜித்தின் மனைவி ஷாலினி அஜித் குமார் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

18 ஆண்டுகளுக்குப் பின் ப்ரோமோஷனின் களமிறங்கும் அஜித் 

இதனிடையே, ‘டேர்டெவில்’ படத்தின் புரமோஷன் நிகழ்ச்சிகளில் அஜித் கலந்துகொள்ள வாய்ப்புள்ளதாக திரையுலக வட்டாரங்களில் தகவல்கள் வெளியாகி வருகின்றன. குறிப்பாக, படத்தின் தயாரிப்பு பொறுப்பு ஷாலினி அஜித் குமாரின் தயாரிப்பு நிறுவனத்தின் கீழ் நடைபெறுவதால், அஜித் இந்த முறை தனது படத்தை ப்ரோமோஷ் செய்ய தானே களத்தில் இறங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அஜித்தைப் பொறுத்தவரை, திரைப்பட புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளாமல் இருப்பது பல ஆண்டுகளாக அவரது நடைமுறையாக இருந்து வருகிறது. அஜித் கடைசியாக நேரடியாக ஒரு படத்தை புரமோட் செய்தது 2007-ம் ஆண்டு வெளியான ‘Billa’ படத்திற்காகத்தான். அதன்பிறகு தனது படங்களின் விளம்பர நிகழ்ச்சிகள், பத்திரிகையாளர் சந்திப்புகள் உள்ளிட்டவற்றில் அவர் பெரும்பாலும் பங்கேற்கவில்லை

2025-ல் வெளியான ‘குட் பேட் அக்லி ’ படத்திற்கும் அஜித் எந்தவொரு வழக்கமான புரமோஷன் நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளவில்லை. அந்தப் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ஏப்ரல் 13 அன்று ஹைதராபாத்தில் நடைபெற்ற வெற்றி விழாவிலும் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் உள்ளிட்ட படக்குழுவினர் பங்கேற்ற நிலையில், அஜித் அங்கு இடம்பெறவில்லை.

இந்த நிலையில், ‘டேர்டெவில்’ படத்திற்காக மட்டும் அஜித் தனது கொள்கையை மாற்றிக் கொள்ள இருப்பதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இதனை அஜித் தனது மனைவி ஷாலினிக்காகவே செய்வதாகவும் சினிமா வட்டாரங்களில் கூறப்படுகிறது. 

2007-ம் ஆண்டுக்குப் பிறகு நீண்ட இடைவெளிக்குப் பின்னர் அஜித் மீண்டும் ஒரு திரைப்படத்தை நேரடியாக புரமோட் செய்ய வந்தால், அது அவரது ரசிகர்களுக்கு மட்டுமின்றி தமிழ் சினிமாவிலும் குறிப்பிடத்தக்க நிகழ்வாக அமையும்.

He covers Tamil cinema, film and OTT reviews, entertainment news, and key developments across the film industry for ABP Nadu. He explores film criticism, storytelling, performances, and the evolving landscape of cinema and streaming platforms. He has produced and conducted interviews with film-industry personalities, including director Thiyagarajan Kumararaja and playback singer Chinmayi. Beyond journalism, he pursues his passion for writing, filmmaking, and creative storytelling. He also co-authored the Tamil non-fiction book Noruṅgum Puvi Arangal (Breaking Planetary Boundaries).

Read More
Advertisement

தலைப்பு செய்திகள்

Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
Jailer 2: ரஜினியின் ஜெயிலர் 2 படத்தில் பிரபல நடிகரின் காட்சிகள் திடீர் நீக்கம்! என்ன காரணம்?
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
விஜய் நல்லது பண்ணாரு.. புகழ்ந்தது ஒரு தப்பா.. தற்குறிகள்ன்னு திட்டுறாங்க.. அனிதா குப்புசாமி வேதனை!
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
Karthigai Deepam: கடத்தப்பட்ட சதீஷ்... தேடிவந்த கார்த்திக்.. ஷாக்கான மாயா! கார்த்திகை தீபத்தில் இன்று
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
பார்ட் 2 என்றாலே சரக்கு தீர்ந்துப்போச்சுனு சொல்லுவாங்க..ஜெயிலர் 2 படம் ஏன்..விளக்கம் கொடுத்த ரஜினி
Advertisement
Advertisement
Advertisement

வீடியோ

Samantha ZOY Launch: பெண்கள் ஆரோக்கியத்தில் புதிய புரட்சி! நடிகை சமந்தாவின் ZOY லான்ச்
Navanethem pillay : மண்டேலாவுக்காக வாதாடிய தமிழச்சி! ஈழத்தமிழர்களுக்காக குரல் அமைதிக்கான நோபல் பரிசு யார் இந்த நவநீதம் பிள்ளை?
Elon musk Rahul Gandhi : ”நிஜ பாஸ் யார்?இன்னொருத்தர் இருக்காரு”கொளுத்தி போட்ட மஸ்க்-ராகுல்
Thoothukudi Police Issue :
Elon musk on Ambani : இந்தியாவின் BOSS அம்பானியா? மோடி மீது எலான் மஸ்க் அட்டாக்! ஸ்டார்லிங்க்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
Rice Price: எகிறும் அரிசி விலை.. வியாபாரிகளின் பதுக்கல்தான் காரணமா? உடனடி ஆக்ஷனில் இறங்குவாரா விஜய்?
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
DMK: நிதி கொடுக்காத மோடி.. இன்று போட்டோவுக்கு போஸ்.. விஜய்யை சாடிய ராஜீவ் காந்தி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
VS Babu Health Condition: வி.எஸ்.பாபுவின் தற்போதைய நிலை என்ன? சொல்லுங்க.. தமிழக அரசுக்கு அதிமுக கேள்வி!
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
தமிழ்நாடு நெக்ஸ்ட் லெவல்! ரூ.13,000 கோடியில் திட்டங்கள், வேலைவாய்ப்பு.. முதல்வர் விஜய் குறித்து பிரதமர் மோடி பேசியது என்ன? முழு விவரம்
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
IND vs WI: 224 ரன்கள் டார்கெட்.. அபிஷேக், இஷான் அபாரம்! இந்த முறையும் எட்டிப்பிடிக்குமா வெஸ்ட் இண்டீஸ்?
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
ரூ.10 லட்சத்துக்கு கீழ் கார் வாங்க மக்கள் தயக்கம் ஏன்? 6 ஆண்டு டேட்டா சொல்லும் ஆச்சரிய தகவல்!
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
CM Vijay: மேடையிலேயே முதல்வர் விஜய் வைத்த அதிரடி கோரிக்கை.. மோடியின் ரியாக்ஷன்.. அதிர்ந்த அரங்கம்
"பெண்கள் நின்றால் பஸ் நிக்காதா?" - மகளிர் இலவச பேருந்தின் கொடூர முகம்! கொந்தளிக்கும் மக்கள்
Embed widget