![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Oscars: தனியாக அமரவைக்கப்பட்ட ஆஸ்கர் வென்ற முதல் கறுப்பினப் பெண்: வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும் உரை!
Oscars 2024: இந்த ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் இன்னும் சில மாதங்களில் அறிவிக்கப்பட இருக்கும் நிலையில் ஆஸ்கர் விருது வென்ற கலைஞர்களின் உரைகளை தொடராக பார்க்கலாம்!
![Oscars: தனியாக அமரவைக்கப்பட்ட ஆஸ்கர் வென்ற முதல் கறுப்பினப் பெண்: வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும் உரை! famous oscar speech of first black woman Hattie Mcdaniel Oscars: தனியாக அமரவைக்கப்பட்ட ஆஸ்கர் வென்ற முதல் கறுப்பினப் பெண்: வரலாற்றில் என்றும் நினைவுகூரப்படும் உரை!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/25/2f7b5223afcc2ae13ba8d040b7bc48e31706144014273572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
1939ஆம் ஆண்டு சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது வென்ற முதல் கறுப்பினப் பெண்ணான ஹேட்டீ மெக்டானியலின் (Hattie McDaniel) புகழ்பெற்ற உரை:
ஆஸ்கர் 2024
2024ஆம் ஆண்டுக்கான ஆஸ்கர் விருதுகள் வரும் மார்ச் மாதம் அறிவிக்கப்பட இருக்கின்றன. எந்த நடிகர்கள், எந்த படங்கள் விருதுகளை தட்டிச் செல்லும் என்பதை தெரிந்துகொள்வது எவ்வளவு சுவாரஸ்யமானதோ, அதே அளவுக்கு சுவாரஸ்யமானது விருது வென்ற கலைஞர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்ட சில நிமிடங்களில் பேசும் வார்த்தைகள்.
வரலாறு முழுவதும் பலவிதமான சமூக பிரசனைகள், அடக்குமுறைகள், மனித நேயத்திற்கான குரல்கள் இந்த மேடையில் ஒலித்திருக்கின்றன. உலகத்தின் மிகப்பெரிய அங்கீகாரம் என்று கருதப்படும் இந்த விருது வழங்கும் நிகழ்ச்சி விமர்சனங்களுக்கு அப்பாற்பட்டது இல்லை, எனினும் பல முக்கியமான குரல்கள் இந்த மேடையில் முதல் முறையாக ஒலித்திருக்கின்றன. அந்த வகையில் சிறந்த துணை நடிகைக்கான ஆஸ்கர் விருது வென்ற முதல் கறுப்பின நடிகையான ஹேட்டி டானியலின் உரை முக்கியமானது.
என் இனத்திற்கு கடமைப்பட்டிருப்பேன்
1939ஆம் ஆண்டு வெளியான கான் வித் தி விண்ட் (Gone With The Wind) படத்தில் மாமி என்கிற கதாபாத்திரத்தில் ஹேட்டீ மெக்டானியல் நடித்திருந்தார். இந்தக் கதாபாத்திரத்திற்காக சிறந்த துணை நடிகருக்கான ஆஸ்கர் விருது அவருக்கு கிடைத்தது. தனது விருதை பெற்றுக்கொண்ட ஹேட்டீ மெக்டானியல் ”இந்த விருதுக்காக என்னை தேர்வு செய்தவர்கள் அனைவருக்கும் நான் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது என் வாழ்க்கையில் மறக்க முடியாத ஒரு நாளாக மாறியிருக்கிறது. நான் உங்கள் அனைவருக்கும் தெரிவித்துக் கொள்கிறேன், எதிர்காலத்தில் நான் செய்யும் ஒவ்வொரு செயலுக்கும் இந்த விருதை ஒரு வழிகாட்டுதலாக எடுத்துக் கொள்வேன். என் இனத்துக்கும் சினிமாவுக்கும் என்றும் கடமைப்பட்டவளாக நான் இருப்பேன். என் மனம் நிறைந்திருக்கிறது. உங்கள் அனைவருக்கும் எனது நன்றி” என்று கண்கலங்கியபடி தனது உரையை முடித்துக் கொண்ட ஹேட்டீ, மேடையை விட்டு இறங்கினார்.
மனம் திறந்து தனது நன்றியைத் ஹேட்டீக்கு இந்த விருது அறிவிக்கப்படுவதற்கு ஒரு சில நிமிடங்கள் முன்னால் சென்று பார்த்தோமானால், ஹேட்டீ மெக்டானியலை கூட்டத்தில் இருந்து விலகி தனியாக ஒரு டேபிளில் அமர்ந்திருப்பதை நாம் பார்க்கலாம்.
ஆம், தனது திறமைக்காக பாராட்டப்பட்டு அங்கீகாரம் பெறும் அந்த நொடியிலும் தனது நிறத்தின் காரணத்தால் தனது மற்ற படக்குழுவினரை விட்டு ஒதுக்கி வைக்கப்பட்டு தனியாக ஒரு டேபிளில் அமர வைக்கப்பட்டார் ஹேட்டீ மெக்டானியல். முன்பே சொன்னது போது ஆஸ்கர் விருது ஒன்றும் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டது இல்லை!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)