Vijay Anand: சினிமா ரசிகர்களுக்கு பேரதிர்ச்சி.. பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆனந்த் காலமானார்
ரஜினி நடித்த நான் அடிமை இல்லை, நாணயம் இல்லாத நாணயம், சட்டம் ஒரு இருட்டறை உள்ளிட்ட தமிழ் படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார்.
தமிழ் திரையுலகில் 1980களின் காலக்கட்டத்தில் புகழ் பெற்ற இசையமைப்பாளராக திகழ்ந்த விஜய் ஆனந்த் உடல் நலக்குறைவால் காலமானார்.
ரஜினி நடித்த நான் அடிமை இல்லை, நாணயம் இல்லாத நாணயம், சட்டம் ஒரு இருட்டறை உள்ளிட்ட தமிழ் படங்களுக்கு இவர் இசையமைத்துள்ளார். குறிப்பாக நான் அடிமை இல்லை படத்தில் இடம் பெற்ற “ஒரு ஜீவன் தான் உன் பாடல் தான்” பாடல் மூலம் ரசிகர்களிடத்தில் மிகப்பெரிய அளவில் விஜய் ஆனந்த் பிரபலமானார். அவரது மறைவு செய்தி திரையுலகினர் மத்தியில் மிகப்பெரிய அளவில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பலரும் விஜய் ஆனந்த் மறைவுக்கு சமூக வலைத்தளங்கள் வாயிலாக தங்கள் இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இளையராஜா கோலோச்சிய காலக்கட்டத்தில் உள்ளே வந்தவர் தான் விஜய் ஆனந்த். இவர் கன்னட உலகில் புகழ்பெற்ற இசையமைப்பாளராக திகழ்ந்த அவர், 100 படங்களுக்கும் மேலாக இசையமைத்துள்ளார். ஹிந்தியிலிருந்து கன்னடத்துக்குப் போய் அங்கு விஷ்ணுவர்த்தன் நடித்த Nee Bareda Kadambari படத்தை இயக்கிய துவாரகீஷ் அப்படியே கதையோடு அதே படத்தின் இசையமைப்பாளர் விஜயானந்தை தமிழுக்கு அழைத்து வந்தார். தமிழில் ஊருக்கு உபதேசம், வாய் சொல்லில் வீரனடி, காவலன் அவன் கோவலன் உள்ளிட்ட படங்களிலும் இசையமைத்துள்ளார்.