Actor Santhanam: ஓ... இவர் தான் நடிகர் சந்தானத்தின் மகனா? வைரலாகும் புகைப்படம்!
விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான சந்தானம் 2004 ஆம் ஆண்டு வெளியான மன்மதன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
நடிகர் சந்தானம் தனது மகனுடன் இருக்கும் சமீபத்திய புகைப்படம் ரசிகர்களிடத்தில் வைரலாகியுள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சபா நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்களிடம் பிரபலமான சந்தானம் நடிகர் சிம்புவின் நெருங்கிய நண்பர் என்பதால் 2004 ஆம் ஆண்டு வெளியான அவர் நடிப்பில் வெளியான மன்மதன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். தொடர்ந்து சச்சின், பொல்லாதவன், சிவா மனசுல சக்தி,பாஸ் என்கிற பாஸ்கரன் போன்ற படங்களின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனக்கென தனி இடத்தைப் பிடித்து காமெடி சூப்பர் ஸ்டாராக உயர்ந்தார்.
நேற்று புதுச்சேரி வந்த நடிகர் திரு.சந்தானம் அண்ணா அவர்களை புதுச்சேரியில் புகழ் பெற்ற சித்தானந்த சாமி கோவிலில் சிறப்பு சாமி தரிசனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது #Santhanam #guluguluteaser @iamsanthanam @KKumaravelMKS @j5qqiVYLqbcS0G3 pic.twitter.com/j6UIZ0fkNa
— சந்தானம் விஜய் (@VijayVi77916386) August 3, 2022
தொடர்ந்து சிம்பு தேவன் இயக்கிய அறை எண் 305ல் கடவுள் படத்தின் மூலம் ஹீரோவான சந்தானம் கண்ணா லட்டு தின்ன ஆசையா, வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்,இனிமே இப்படித்தான், தில்லுக்கு துட்டு, சக்கப்போடு போடு ராஜா, தில்லுக்கு துட்டு 2, ஏ1, டகால்டி, பிஸ்கோத், பாரிஸ் ஜெயராஜ், டிக்கிலோனா, சபாபதி, சமீபத்தில் வெளியான குலு குலு படம் என தற்போது ஹீரோவாகவே தொடர்ந்து நடித்து வருகிறார். அடுத்ததாக இவர் நடிப்பில் ஏஜென்ட் கண்ணாயிரம் படம் வெளியாகவுள்ளது. இவர் தான் 6 படங்களை தயாரித்தும் உள்ளார். ஆனால் ரசிகர்கள் சந்தானம் மறுபடியும் தனது காமெடி பாதைக்கு திரும்ப வேண்டும் என சமூக வலைத்தளங்களில் வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இதற்கிடையில் சமீபத்தில் நடிகர் சந்தானம் புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் கருவடிகுப்பம் சந்திப்பில் உள்ள ஸ்ரீமத் குரு சித்தானந்த கோவிலுக்கு தனது மகனுடன் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். இதன் புகைப்படங்கள் வெளியாகி வைரலாகியுள்ள நிலையில் ஆளே அடையாளம் தெரியாமல் சந்தானம் மகன் வளர்ந்து விட்டதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்