HBD Shriya Saran: ‘நான் ஒரு மின்னல் தாங்கோ’ .. ரசிகர்களின் மனம் கவர்ந்த நடிகை ஸ்ரேயா சரண் பிறந்தநாள் இன்று..!
Shriya Saran : ரசிகர்களை தனது வசீகரமான அழகால் கிரங்கடித்த ஸ்ரேயா இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகைகளில் ஒருவரான ஸ்ரேயா சரண் தமிழ், மட்டுமின்றி தெலுங்கு, ஹிந்தி என பிற மொழி திரைப்படங்களிலும் முன்னணி நடிகர்களின் ஜோடியாக நடித்து பிரபலத்தின் உச்சியில் இருந்தவர். ரசிகர்களை தனது வசீகரமான அழகால் கிரங்கடித்த ஸ்ரேயா இன்று தனது 41வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
ஹரித்வாரில் பிறந்த வளர்ந்த ஸ்ரேயா சரண் ஒரு தேர்ந்த கதக் மற்றும் ராஜஸ்தானி நடன கலைஞர். அந்த வகையில் அவர் பல நடன நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளார். அப்படி ஒரு நடன நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போது தான் அவருக்கு ராமோஜி பிலிம்ஸ் தனது இஷ்டம் திரைப்படத்தில் நடிக்க ஸ்ரேயாவுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
இளமையான நடிகை :
தனது 41 வயதில் கூட இன்றைய இளம் நடிகைகளுக்கு டஃப் கொடுக்கும் அளவுக்கு ஸ்லிம்மாக, இளமையாக காட்சி அளிக்கிறார். சிவாஜி, அழகிய தமிழ் மகன், கந்தசாமி, மழை, திருவிளையாடல் ஆரம்பம், தோரணை, ஆர்.ஆர்.ஆர், த்ரிஷ்யம் என பல வெற்றிப்படங்களில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியவர் திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து கொண்டார். சிறந்த நடிகைக்கான பல விருதுகளையும் குவித்துள்ளார்.
திருமண வாழ்க்கை :
2018ம் ரஷ்ய டென்னிஸ் பிளேயர் ஆண்ட்ரே கோஸ்சீவ் என்பவரை திருமணம் செய்து கொண்டு வெளிநாட்டில் செட்டிலானார். இந்த தம்பதியினருக்கு அழகான பெண் குழந்தை ஒன்று பிறந்தது. ஸ்ரேயா தனது கணவர் மற்றும் மகளுடன் வெகேஷன் செல்லும் போது எடுத்துக் கொண்ட ஏராளமான புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து ரசிகர்களை மனங்களை கொள்ளை கொண்டு லைக்ஸ்களை அள்ளிவிடுவார். அவ்வப்போது அவரின் ஹாட் கிளிக்ஸ்களும் ரசிகர்களின் கவனம் ஈர்க்கும்.
திரையுலக என்ட்ரி :
2001ம் தெலுங்கு திரையுலகில் 'இஷ்டம்' திரைப்படம் மூலம் அறிமுகமானார். தமிழில் ஒரு துணை கதாபாத்திரமாக 'எனக்கு 20 உனக்கு 18' படத்தில் அறிமுகமானார். ஜெயம் ரவியின் ஜோடியாக 'மழை' திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக நடித்த முதல் படத்திலேயே ரசிகர்களின் கவனம் ஈர்த்தார். அதன் வெற்றி ஸ்ரேயாவுக்கு அடுத்தடுத்து அழகிய தமிழ் மகன், சிவாஜி, கந்தசாமி என ஏராளமான பட வாய்ப்புகளை குவித்தது. ரஜினிகாந்த், விஜய், தனுஷ், விஷால், ஜெயம் ரவி, விக்ரம் என முன்னணி நட்சத்திரங்களின் ஜோடியாக திரையை வண்ண மயமாக்கினார்.
நடிப்பை தாண்டியும் ஸ்ரேயா சரண் பல பிரபலமான நிறுவனங்களின் பிராண்ட் அம்பாஸிடராகவும் இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இன்றும் ஒரு சில திரைப்படங்களை மற்றும் தேர்ந்து எடுத்து வருகிறார்.