மேலும் அறிய

Fahadh Faasil OTT Release | மாலிக் ஓடிடி ரிலீஸ்.. நஸ்ரியாவின் காதல்.. மனம் திறந்து மடல் எழுதிய பஹத் பாசில்!

நடிகர் பஹத் பாசில் தனக்கு நேர்ந்த விபத்து, மாலிக் திரைப்பட வெளியீடு, நஸ்ரியா உடனான காதல் என பலவற்றை மனதார பகிர்ந்துள்ளார்.

மலையாளத்தில் முன்னணி நடிகர்களில் ஒருவர் பஹத் பாசில். அசாத்திய நடிப்பு மூலம் தனக்கென ரசிகர் கூட்டத்தை வைத்துள்ளார். இவர் தமிழில் வேலைக்காரன், சூப்பர் டீலக்ஸ் படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் மலையாளத்தில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மாலிக் திரைப்படம் ஓடிடியில் வெளியாகவுள்ளது. தியேட்டர் எப்போது திறக்கப்படும் என தெரியாத நிலையில் அதற்காக காத்திருப்பது நியாயமில்லை என மாலிக் இயக்குநர் ஆண்டோ ஜோசப் குறிப்பிட்டுள்ளார்.

சி யூ சூன், ஜோஜி போன்ற பஹத்தின் படங்கள் ஓடிடியில் வெளியானாலும் அது ஓடிடிக்கென்றே உருவாக்கப்பட்ட திரைப்படங்கள். ஆனால் பிரம்மாண்டமாக தியேட்டர் கொண்டாட்டத்துக்காக எடுக்கப்பட்ட மாலிக்கும் ஓடிடிக்குள் வருவது ரசிகர்களை மட்டுமின்றி பஹத் பாசிலையும் சோர்வடைய வைத்துள்ளது. இந்நிலையில் ஒரு நீண்ட அறிக்கையை நடிகர் பஹத் வெளியிட்டுள்ளார். அதில் தனக்கு நேர்ந்த விபத்து, மாலிக் திரைப்பட வெளியீடு, நஸ்ரியா உடனான காதல் என பலவற்றை மனதார பகிர்ந்துள்ளார். மாலிக் வெளியீடு குறித்து குறிப்பிட்டுள்ள பஹத்,  மாலிக்கின் ஓடிடி வெளியீட்டு முடிவை கனத்த இதயத்துடன் இயக்குநர், தயாரிப்பாளர், தொழில்நுட்ப வல்லுநர்கள், நடிகர்கள் எடுத்துள்ளனர்.

Fahadh Faasil OTT Release | மாலிக் ஓடிடி ரிலீஸ்.. நஸ்ரியாவின் காதல்.. மனம் திறந்து மடல் எழுதிய பஹத் பாசில்!

மாலிக்கை உருவாக்கி முடிக்க அனைவரும் ஒருவருட காலத்திற்கு மேல் செலவிட்டுள்ளனர். என்னுடைய சமீபத்திய சில படங்கள் ஓடிடி ரிலீஸுக்காகவே எடுக்கப்பட்டது. ஆனால் மாலிக் தொடக்கம் முதலே பிரம்மாண்ட தியேட்டர் அனுபவத்தை கொடுக்க வேண்டும் என்ற திட்டத்தில் உருவாக்கப்பட்டது. 100% தியேட்டர் ரிலீஸ்தான் என நான் தயாராகவே இருந்த ஒரு திரைப்படம். இப்போது எடுக்கப்பட்ட ஓடிடி முடிவு அனைவராலும் எடுக்கப்பட்டது. இந்தப் படத்தை மிகுந்த ஆர்வத்துடன் பார்க்கும்படி அனைவரையும் தனிப்பட்ட முறையில் கேட்டுக்கொள்கிறேன்.

உண்மையை சொல்ல வேண்டுமென்றால், தியேட்டர்கள் இயல்புநிலைக்கு வரும் வரை என்னால் காத்திருக்க முடியாது, ஆனால் இன்று ஒவ்வொரு தனிமனிதனும் இயல்புநிலையை மீண்டும் பெற போராடுகிறார்கள். இந்த நேரத்தில் என்னால் ஒரு உறுதியை அளிக்க முடியும், அடுத்த முறை உங்களை தியேட்டரில் சந்திக்கும் போது உங்களுக்கு சிறந்த தியேட்டர் அனுபவத்தை கொடுப்பேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

Fahadh Faasil OTT Release | மாலிக் ஓடிடி ரிலீஸ்.. நஸ்ரியாவின் காதல்.. மனம் திறந்து மடல் எழுதிய பஹத் பாசில்!

இதுமட்டுமின்றி பெங்களூர் டேஸ் குறித்தும் நஸ்ரியாவுடனான காதல் குறித்தும் அவர் குறிப்பிட்டுள்ளார். அதில் பெங்களூரு டேஸ் படம் வெளியாகி 7 வருடம் ஆகிவிட்டது. அந்த நாட்கள் நல்ல நினைவுகளை கொண்டு வருகிறது. நஸ்ரியவுடனான பயணம், ஒரு மோதிரத்துடன் கையால் எழுதப்பட்ட கடிதத்தை கொடுத்தேன். அவர் சரி, இல்லை என எதுவும் கூறவில்லை. ஒரு வித குழப்பத்திலேயே நான் இருந்தேன். நஸ்ரியாவின் விடாமுயற்சியே அவர்களை இறுதியாக ஒன்றிணைத்தது. என பல விஷயங்களை பஹத் பகிர்ந்துள்ளார்.

Master Chef Telugu | நானும் ஆங்கர்தான் : விஜய்சேதுபதிக்கு போட்டியாக களமிறங்கும் தமன்னா..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!

Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி

Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு

யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 

ABP Premium

வீடியோ

Yescon 2025 : சென்னையில் நாளை முதல்.. YESCON - 2025 மாநாடு துவக்கி வைக்கும் நிதியமைச்சர்செ.பாலாஜி..பொன்முடி வரிசையில்..  துரைமுருகன் வீட்டில் ED ரெய்டு!  பரபரக்கும் வேலூர்ஸ்டாலின் vs இபிஎஸ் vs விஜய் ! களமிறங்கிய MASTER MINDS ! 2026-ல் அரியணை யாருக்கு?FORM-க்கு வரும் அதிமுக : வழிகாட்டும் MASTERMIND : திமுகவுக்கு பக்கா ஸ்கெட்ச்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
China Virus: கொரோனாவை மிஞ்சும்HMPV வைரஸ்? கதிகலக்கத்தில் சீனா: அறிகுறிகள் என்ன? எப்படி பரவுகிறது? முழு விபரம்!
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Minister ponmudi: அமலாக்கத்துறை சோதனை... நழுவி சென்ற அமைச்சர் பொன்முடி
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
Coimbatore: 8 மணி நேர போராட்டம்! தூக்கி நிறுத்தப்பட்ட டேங்கர் லாரி.. மக்கள் நிம்மதி பெருமூச்சு
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
யார் அந்த சார்? ‘இனி இதுதான் நடக்கும்’ - நேரடியாக இபிஎஸ்க்கு எச்சரிக்கை விடுத்த அமைச்சர் சேகர் பாபு 
UDISE Report: அதிரடியாக வகுத்த 6 திட்டங்கள்! ஆர்வமுடன் பள்ளிசெல்லும் குழந்தைகள்- தமிழக அரசு  பெருமிதம்!

IND vs AUS: ரஞ்சி வீரர்கள் எதுக்கு இருக்காங்க? இனியாவது வாய்ப்புத் தருமா பிசிசிஐ?

சூப்பர்ஸ்டார்னா சும்மாவா? ப்ரெஞ்சு படத்துலயே ரஜினிதான் மாஸ் - ஆர்ப்பரிக்கும் ரசிகர்கள்

எனக்கு யார் வந்திருக்கிறார்கள் என தெரியவில்லை: ரெய்டு குறித்து துரைமுருகன் பேட்டி

Embed widget