மேலும் அறிய

தொடர்புகொள்ளவே முடியாத சென்டினலீஸ் பழங்குடிகளும் வடக்கு சென்டினல் தீவும்! புதிர் தேசம் பத்தி தெரியுமா?

வடக்கு சென்டினல் தீவின் பரப்பளவு வெறும் 59.6 சதுர கிலோமீட்டர் தான். ஒப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மான்ஹாட்டன் தீவின் அளவை ஒத்தது.

தொழில்நுட்பம் நாளுக்கொரு வளர்ச்சி கண்டு கொண்டிருக்கிறது. உலக மக்கள்  அணு ஆயுதப் போர் வரக்கூடாது என்ற அச்சத்தில்  இருக்கின்றனர். ஆனால் இதே 2022ல் ஒரு பழங்குடியின குழு ஆதிகால வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறது. இந்த உலகின் எந்த முன்னேற்றங்கள், போர்களும், மதங்களும், பிரச்சினைகளும், நோய்களும், அரசியலும் அவர்களே நெருங்க முடியவில்லை. யார் அவர்கள் எனக் கேட்கிறீர்களா? அவர்கள் தான் வங்கக் கடலில் அந்தமான் தீவுகள் கூட்டப் பகுதியில் அமைந்திருக்கும் வடக்கு சென்டினல் தீவைச் சேர்ந்த தி சென்டினலீஸ் ட்ரைப் என்று அழைக்கப்படும் சென்டினல் பழங்குடிகள்.

வடக்கு சென்டினல் தீவின் பரப்பளவு வெறும் 59.6 சதுர கிலோமீட்டர் தான். ஒப்பிட்டுச் சொல்ல வேண்டும் என்றால் அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உள்ள மான்ஹாட்டன் தீவின் அளவை ஒத்தது.

சென்டினல் பழங்குடிகளின் தோற்றம்

இந்த உலகில் இதுவரை நாகரிக சமூகத்தால் நெருங்கவே இயலாத ஒரே ஒரு பழங்குடி இனம் இருக்கிறது என்றால் அது சென்டினல் பழங்குடி இனம் தான். இவர்கள் 60,000 ஆயிரம் ஆண்டுகள் வரலாறு கொண்டவர்கள் எனக் கருதப்படுகிறது. இவர்களின் தீவை சுற்றி 3 மைல் தூரம் வரை இந்திய கடற்படை பஃப்ஃபர் ஜோனாக கருதுகிறது. சென்டினல் பழங்குடிகள் நெக்ரிடோ இனத்தவர். நெக்ரிடோ பழங்குடிகள் ஆப்பிரிக்காவை பிறப்பிடமாகக் கொண்டவர்கள். இவர்கள் இந்தியாவுக்கு 60 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் இந்தோனேசியா வழியாக வந்தவர்களாக அறியப்படுகிறார்கள்.

இவர்களின் மொழி சென்டினலீஸ் என்று கூறப்படுகிறது. ஆனால் இவர்கள் யாருடனும் தொடர்பு கொள்வதில்லை என்பதால் இவர்களின் மொழி வகைப்படுத்தபடாத மொழியாகவே உள்ளது.

இந்த பழங்குடிகள் தங்கள் எல்லையைக் காப்பதில் வீராதி வீரகள். பலமுறை இவர்கள் இருக்குமிடத்தை அடைய நாகரிக சமூக மக்கள் முயன்றுள்ளனர். ஆனால் ஒவ்வொரு முறையும் தோல்வியுடன் தான் திரும்பியுள்ளனர். 1974ல் ஒரே ஒரு முறை இவர்கள் சுற்றுலா பயணிகளிடமிருந்து உணவுப் பண்டங்களை பெற்றுக் கொண்டனர். ஆனால் 1992ல் இந்திய அரசு பொதுமக்கள், சுற்றுலா பயணிகள் சென்டினல்களை அணுக முற்படக் கூடாது என்று தடை விதித்தது. அதற்கு இரண்டு காரணங்கள் உண்டு. ஒன்று சென்டினல்களால் மக்கள் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம். இன்னொன்று நம்மால் சென்டினல்களுக்கு நோய்த் தொற்று அபாயம் ஏற்படலாம். தடுப்பூசிகள், சிகிச்சைகள் என எதுவும் பழக்கப்படாத அந்த மக்களுக்கு மனிதர்கள் மூலம் நோய் தாக்கம் ஏற்பட்டால் அவர்கள் மொத்தமாகவே அழியக்கூடும் என்பதால் இந்தத் தடை விதிக்கப்பட்டது.

சென்டினல்களின் வாழ்க்கை முறை:

சென்டினல்கள் கற்கால வாழ்க்கையைத் தான் இன்னும் வாழ்கின்றனர். வேட்டையாடுகின்றனர். கடல் உணவை சேகரிக்கின்றனர். இவர்களின் ஆயுதம் வில்லும் அம்பும் தான். இவர்கள் வீடுகளில் கூரையாக வைக்கோலும், இலைகளும் தான் வேயப்பட்டுள்ளன. மரத்திலான அம்புகளைப் பயன்படுத்தியவர்கள் சமீபமாக உலோக நுணி கொண்ட அம்புகளைப் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. 1981 ஆம் ஆண்டு சென்டினல் தீவில் தரை தட்டி கரை ஒதுங்கிய கப்பலில் இருந்து இவர்கள் உலோகங்களை எடுத்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 1974ல் இந்தத் தீவில் நேஷனல் ஜாக்ரஃபிக் சொசைட்டி சில அலுமினிய பாத்திரங்களை விட்டுச் சென்றது. அவற்றையும் சென்டினல்கள் எடுத்து பயன்படுத்துவதாகக் கூறப்படுகிறது.

தொடர்புகொள்ளவே முடியாத சென்டினலீஸ் பழங்குடிகளும் வடக்கு சென்டினல் தீவும்! புதிர் தேசம் பத்தி தெரியுமா?

ஆறாம் அறிவு கொண்டவர்கள்:

சென்டினல்கள் ஆறாம் அறிவு கொண்டவர்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது. 2004 டிசம்பர் 26ல் மிகப்பெரிய சுனாமி சுமத்ரா, அந்தமான், நிகோபார் தீவுகளை தாக்கியது. அதில் ஆயிரக்கணக்கானோர் இறந்தனர். இந்திய ராணுவம் ஹெலிகாப்டர் மூலம் பழங்குடியின மக்களை கண்காணிக்க ஆய்வு நடத்தியது. அப்போது சென்டினல்கள் பத்திரமாக இருந்தனர். அதனை ஏரியல் வியூவாக பார்த்து வந்த இந்திய ராணுவம் ஆச்சர்யப்பட்டது. சென்டினல்கள் பற்றி அரசு அதிகாரிகளும், மானுடவியலாளர்களும் கூறுகையில் அவர்கள் தங்கள் சக்தி மூலம் அசம்பாவிதம் வருவதை உணர்ந்து தற்காத்துக் கொண்டனர் என்றனர். ஆசிஷ் ராய் என்ற மானுடவியலாளரும் சென்டினல்களுக்கு ஆறாம் அறிவு இருக்கிறது எனக் கூறுகிறார். அவர்களால் காற்றின் வாசத்தை உணர முடியும் என்று கூறுகின்றனர்.

வெளிநபர்களை வரவேற்பதில்லை:

சென்டினல்கள் எப்போதுமே வெளிநபர்களை வரவேற்பதில்லை. 1871ல் 86 பயணிகள், 20 சிப்பந்திகளுடன் ஒரு கப்பல் சென்டினல் தீவில் தரைதட்டி நின்றுவிட்டது. மூன்று நாட்களாக அந்தக் கப்பல் அங்கே மாட்டிக் கொண்டது. அப்போது சென்டினல்கள் அந்தக் கப்பலில் இருந்தவர்கள் வில் அம்பு கொண்டு தாக்கினர். தகவலறிந்து ராயல் நேவி ( பிரிட்டிஷ் கப்பல்) மீட்புப் பணிக்காக சென்றது. அப்போது மாரிஸ் வைஅல் போர்ட்மேன் என்ற கடற்படை அதிகாரி அந்தமான் நிகோபர் காலனியை தன்வசப்படுத்தினார். அவருடைய தலைமையில் சென்டினல் தீவிற்குள் ராணுவம் சென்றது. அதற்குள் அங்கிருந்தவர்கள் தப்பிச் சென்றனர். அங்கிருந்து ஒரு வயதான தம்பதியையும், இரு குழந்தைகளையும் மட்டும் கடற்படை சிறைபிடித்துச் சென்றது. ஆனால் போர்ட் ப்ளேர் வருவதற்குள்ளதாகவே அந்த வயதான தம்பதி நோய்வாய்ப்பட்டு இறந்தனர். இதனால் குழந்தைகள் மீண்டும் தீவிலேயே இறக்கிவிடப்பட்டனர். ஆனால் அவர்களின் கதி என்னவானது என்ற தகவல் இல்லை.

2018 சம்பவம்:

2018ல் ஜான் ஆலன் சாவ் என்ற இளைஞர் சென்டினல்களை நெருங்க முற்பட்டார். 26 வயதான அந்த இளைஞர் 7 மீனவர்களுடன் அப்பகுதிக்குச் சென்றார். அப்போது சென்டினல்கள் ஜானை அம்பு எய்து கொன்றனர். ஜான் ஆலனின் உடலை அந்த பழங்குடியினர் இழுத்துச் சென்றனர். 

தொடர்புகொள்ளவே முடியாத சென்டினலீஸ் பழங்குடிகளும் வடக்கு சென்டினல் தீவும்! புதிர் தேசம் பத்தி தெரியுமா?

மதுமாலா சத்தோபத்யாய: சென்டினல்களிடம் நட்பு பாராட்டிய பெண்

1991ல் மதுமாலா சத்தோபத்யாய என்ற பெண் மானுவடவியலாளரும் அவருடைய சகா பண்டிட்டும் சென்டினல் ஒருவரை நெருங்கினர். மதுமாலா ஒரு தேங்காயை அவரிடம் கொடுக்கும் புகைப்படம் ஒன்று உள்ளது. தேங்காய் வைத்திருந்தால் சமாதானத்தோடு வந்திருக்கிறோம் என்று அர்த்தமாம்.

சென்டினல்கள் எதிர்கொள்ளும் சவால்கள்:

சென்டினல்கள் தனித்து ஒதுங்கி வாழ்ந்து வந்தாலும் கூட தொழில்நுட்ப வளர்ச்சி, கழிவுகள், காலநிலை மாற்றம் ஆகியனவற்றால் அவர்களை அறியாமலேயே பாதிக்கப்படிருக்கலாம். ஆகையால் சென்டினல் தீவை பாதுகாப்பதில் இந்திய அரசு வலுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கை உள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
"ரூ.3000 பணத்துக்கு ஏமாறாதீர்கள்; உண்மையான ஹீரோ அன்புமணி தான்!" - சௌமியா அன்புமணி அதிரடி பேச்சு...!
ABP Premium

வீடியோ

’’உங்க இஷ்டத்துக்கு தீர்ப்பு வழங்க முடியுமா?’’ஜனநாயகன் vs நீதிபதிகள் COURT-ல் நடந்தது என்ன? | Jana Nayagan Judgement
Aarti Ravi vs Ravi Mohan | ”சுயமரியாதை பத்தி நீ பேசலாமா?”ஒரு உண்மையை சொல்றேன்”ரவி மோகன் Vs ஆர்த்தி
Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
200 தொகுதிகளையும் தாண்டி திமுக கூட்டணி வெற்றி உறுதி.! அடித்து சொன்ன மு.க. ஸ்டாலின்
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
Parasakthi Review : உங்கள ஒரு ரிட்லி ஸ்காட்னு நினைச்சது தப்புதான் சுதா... பராசக்தி திரைப்பட விமர்சனம்.
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
சென்னையில் திக்.. திக்.. கொத்து கொத்தாக செத்து விழுந்த காகங்கள் - நடப்பது என்ன?
"ரூ.3000 பணத்துக்கு ஏமாறாதீர்கள்; உண்மையான ஹீரோ அன்புமணி தான்!" - சௌமியா அன்புமணி அதிரடி பேச்சு...!
TN RAIN ALERT: இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
இன்று 5 மாவட்டங்களுக்கு டார்கெட்.! நாளை சென்னைக்கு ஸ்கெட்ச் போட்ட புயல் சின்னம்- வானிலை மையம் அலர்ட்
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
சென்னை 28 படத்திற்கு வெங்கட்பிரபு வைத்த உண்மையான பெயர் என்ன?
"மாதம் தோறும் உதவித்தொகை வேண்டுமா? விழுப்புரம் மாவட்ட ஆட்சியரின் அதிரடி அறிவிப்பு - உடனே விண்ணப்பியுங்கள்!"
ஜெயலலிதா மகள் ஜெயலட்சுமிக்கு அதிமுகவில் அவமானம்! எடப்பாடி பழனிசாமி மீது பகிரங்க குற்றச்சாட்டு! பரபரப்பு!
ஜெயலலிதா மகள் ஜெயலட்சுமிக்கு அதிமுகவில் அவமானம்! எடப்பாடி பழனிசாமி மீது பகிரங்க குற்றச்சாட்டு! பரபரப்பு!
Embed widget