”நான் சீரியலில் நடிப்பது என் வீட்ல யாருக்குமே தெரியாது” - எதிர்நீச்சல் ஃபர்ஹானா
”நான் சீரியலில் நடித்தது என் குடும்பத்தில் யாருக்குமே தெரியாது. என்னை சீரியலில் பார்த்து விட்ட என்னோட அப்பாவின் நண்பர்கள் அவரிடம் உண்மையை சொல்லிட்டாங்க” - எதிர்நீச்சல் ஃபர்ஹானா
”நான் சீரியலில் நடித்தது என் குடும்பத்தில் யாருக்குமே தெரியாது. என்னை சீரியலில் பார்த்து விட்ட என்னோட அப்பாவின் நண்பர்கள் அவரிடம் உண்மையை சொல்லிட்டாங்க” என எதிர்நீச்சல் சீரியலில் ஃபர்ஹானா கேரக்டரில் நடித்து வரும் ஜிபா தெரிவித்துள்ளார்.
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் சீரியல் அதிகமான ரசிகர்களை கொண்டாடதாக கொண்டாடப்பட்டு வருகிறது. பெண் அடிமைத்தனதுக்கு எதிராக எடுக்கப்பட்டும் வரும் சீரியலுக்கு பெண் ரசிகைகள் ஏராளம். அடக்கு முறை, ஆணாதிகத்தை எதிர்த்து குரல்கொடுக்கும் எதிர்நீச்சல் சீரியலின் ஒவ்வொரு கேரக்டரும் பலரால் ரசிக்கப்பட்டு வருகிறது. இதனால் டிஆர்பி ரேட்டிங்கிலும் எதிர்நீச்சல் சீரியல் முதலிடத்தை தக்க வைத்து கொண்டது. அடுத்தடுத்த டிவிஸ்டுகளை கோண்டுள்ள எதிர்நீச்சல் சீரியலில் ஜீவானந்தத்தின் பி.ஏ.வாக ஜிபா ஷெரின் நடித்துள்ளார். ஹிஜாபுடன் சீரியலில் நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்த ஜிபா சீரியலில் கிடைத்த வாய்ப்பு குறித்து பகிர்ந்து கொண்டார்.
சமூக ஊடகம் ஒன்றிற்கு பேட்டியளித்த ஜிபா ஷெரின், “எதிர் நீச்சல் சீரியலில் நடித்து வரும் வைஷ்ணவி என்னோட ஃபிரண்ட். என்னை நடிக்க சொல்லி அடிக்கடி கேட்பார். ஆனால், ஹிஜாப் போட்டு கொண்டு இருப்பதால் நடிக்க முடியாது என நான் கூறி வந்தேன். ஒரு முறை முஸ்லீம் பெண்ணிற்கான ரோல் இருப்பதாக வைஷ்ணவிக்கு தெரிய வந்துள்ளது. உடனடியாக என்னோட செல்போன் எண்ணை மேனேஜரிடம் கொடுத்துள்ளார். என்னை ஷீட்டிங் ஸ்பாட்டுக்கு அழைத்தனர். நான் அங்கு சென்றதும், நான் ஏற்கெனவே செய்த ரீல்ஸ் மட்டும் பார்த்த திருசெல்வம் சார் என்னை நடிக்க ஒப்புக் கொண்டார். அப்போது ஹிஜாப் எல்லாம் கழட்ட முடியாது. அதனுடன் தான் நடிப்பேன் என்றேன். என்னுடைய முடிவுக்கு எந்த மறுப்பும் சொல்லாமல் திருசெல்வம் சார் ஓகே சொல்லிவிட்டார். முதலில் பெரிய கேமரா, லைட்ஸ் செட்டப் எல்லாத்தையும் பார்த்து பயந்து விட்டேன். அப்பறம் கொஞ்சம் கொஞ்சம் நடிக்க ஆரம்பித்தேன்.
நான் சீரியலில் நடித்தது என் வீட்டில் யாருக்கும் தெரியாது. என் வீட்டில் வீடியோ எல்லாம் எடுக்கக்கூடாது போன்ற கட்டுப்பாடுகள் இருக்கும். நாம் சீரியலில் நடிப்பேன் என்றால் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். வீட்டுக்கு தெரியாமல் டிக்டாக் வீடியோ செய்து இருக்கிறேன். ஆனால் யாருக்கும் தெரியாது. இப்போது எதிர்நீச்சல் சீரியலில் நான் நடித்ததை என் அப்பாவிடம் அவரது நண்பர்கள் சொல்லி விட்டார்கள். அதை நம்பாத என் அப்பா நான் சீரியலில் நடித்து இருக்க மாட்டேன் என்றுள்ளார். என்னிடம் கேட்ட போது தான் நான் சீரியலில் நடித்ததை கூறினேன். சீரியலில் நான் நடிக்கும் கேரக்டர் கேட்டு என் அப்பா ரொம்ப சந்தோஷப்பட்டார்” என்றார்.