RIP Marimuthu : ’வாங்குன வீட்டைப்பத்தியே பேசுவார்.. வீட்டுக்கு குடிபோறதுக்கு முன்னமே போய்ட்டார்’ : கவிதா பாரதி உருக்கம்..
Ethirneechal Marimuthu: இயக்குநர் மாரிமுத்து பல்வேறு படங்களில் நடித்திருந்தாலும், எதிர்நீச்சல் தொடர்தான் இவரின் நடிப்பிற்கு பெரிய அங்கீகாரத்தையும், புகழையும் பெற்று தந்தது.
இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து (56) மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் நாடகம் மூலம் அண்மையில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் மாரிமுத்து. அதிலும், குறிப்பாக சமீபத்தில் வெளியான ‘பரியேறும் பெருமாள்’, ‘கொம்பன்’ ‘ஜீவா’ ஆகிய படங்களில் இவரின் நடிப்பு கவனம் பெற்றது. இவர் ‘கண்ணும் கண்ணும்’ மற்றும் ‘புலி வால்’ ஆகிய திரைப்படங்களை இயக்கியுள்ளார். சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற ’ஜெயிலர்’ படத்தில் நடித்திருந்தார்.
யார் இந்த மாரிமுத்து..?
’அரண்மனை கிளி’ (1993) மற்றும் ‘எல்லாமே என் ராசாதான்’ (1995) போன்ற ராஜ்கிரண் படங்களில் உதவி இயக்குநராக பணியாற்றினார். தொடர்ந்து, தமிழ் சினிமாவின் பிரபலமான இயக்குநர்களான மணிரத்னம், சீமான், வசந்த், எஸ்.ஜே. சூர்யா உள்ளிட்டோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். மாரிமுத்து. அதன்பிறகு, ஓரிரு திரைப்படங்களையும் இயக்கிய இயக்குநர் மாரிமுத்து 'யுத்தம் செய்' திரைப்படம் மூலம் நடிகராக அறிமுகமானார். ஏராளமான திரைப்படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த இவர், தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் ’எதிர் நீச்சல்’ தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அனைத்து தரப்பு மக்களிடம் பிரபலமானார்.