மேலும் அறிய

Ethirneechal Marimuthu : சென்னையை நோக்கிய கனவுப் பயணம்.. எதிர்நீச்சல் மாரிமுத்து இயக்கிய படங்கள் பற்றி தெரியுமா?

இயக்குநராகும் கனவில் சென்னைக்கு வந்த மறைந்த நடிகர் ஜி மாரிமுத்துவின் பயணம் பற்றி தெரியுமா?

ரசிகர்கள் அனைவராலும் நடிகராக அறியப்பட்ட ஜி.மாரிமுத்து முதன்முதலாக சென்னைக்கு தனது சொந்த ஊரான தேனியில் இருந்து ஓடிவந்தது, இயக்குநர் ஆகவேண்டும் என்கிற கனவை நிஜமாக்கத்தான்.

மாரிமுத்து இயக்கிய இரண்டு திரைப்படங்கள் கண்ணும் கண்ணும் மற்றும் புலிவால்.

ஜி. மாரிமுத்து

இயக்குநரும், நடிகருமான மாரிமுத்து (56) மாரடைப்பால் சென்னையில் இன்று காலமானார். சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் நாடகம் மூலம் அண்மையில் மக்கள் மத்தியில் பிரபலமடைந்தவர் நடிகர் மாரிமுத்து. அதிலும், குறிப்பாக  ‘பரியேறும் பெருமாள்’,  ‘கொம்பன்’ ‘ஜீவா’ ஆகிய படங்களில் இவரின் நடிப்பு கவனம் பெற்றது.   

சமீபத்தில் நெல்சன் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றிபெற்ற ’ஜெயிலர்’ படத்தில் நடித்திருந்தார். 

இன்று காலை ‘எதிர் நீச்சல்’ சீரியல் டப்பிங் பணியில் பேசிக்கொண்டிருந்தபோது நடிகர் மாரிமுத்து திடீரென மயக்கம் போட்டு விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த சக சீரியல் ஊழியர்கள் அருகில் இருந்த சூர்யா ஆஸ்பத்திரிக்கு மாரிமுத்து கொண்டுசெல்ல, நெஞ்சு வலி காரணமாக இறந்து விட்டதாக மருத்துவர்கள் உறுதி செய்தனர்.  இன்று மாலை அவரது உடலை சொந்த ஊரான மதுரை தேனி வருச நாட்டுக்கு கொண்டு செல்ல இருக்கிறார்கள். 

இயக்குநராகும் கனவு

தேனியை சொந்த ஊராக கொண்ட மாரிமுத்து இயக்குநராக வேண்டும் என்கிற கனவில் தனது வீட்டைவிட்டு ஓடி சென்னை வந்து சேர்ந்தார். சில காலங்கள் வைரமுத்துவுடன் பழக்கம் ஏற்பட்டு ராஜ்கிரண் நடித்த அரன்மனைக் கிளி மற்றும் எல்லாமே என் ராசாதான் உள்ளிட்ட படங்களில் பணியாற்றினார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் வசந்த் இயக்கிய ஆசை திரைப்படத்திலும், சிலம்பரசன் இயக்கிய மன்மதன் திரைப்படத்திலும், உதவி இயக்குநராக பணியாற்றினார். தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான மனிரத்னம், எஸ்.ஜே சூர்யா உள்ளிட்டவர்களுடன் பணியாற்றியுள்ளார்.

கண்ணும் கண்ணும்

2008-ஆம் ஆண்டு தனது முதல் படமான கண்ணும் கண்ணும் படத்தை இயக்கியவர் மாரிமுத்து. பிரசன்னா, உதயதாரா, வடிவேலு உள்ளிட்டவர்கள்   நடித்த இந்தப் படம் பெரிய அளவில் வெற்றிபெறாவிட்டாலும் விமர்சன ரீதியாக வரவேற்கப்பட்டது. குறிப்பாக இந்தப் படத்தில் இடம்பெற்ற வடிவேலுவின் ‘கிணத்த காணாம் “ காமெடி  ரசிகர்களிடையே பயங்கரமான ரீச் ஆனது

புலிவால்

விமல் , பிரசன்னா, இனியா, ஓவியா  , சூரி உள்ளிட்டவர்கள் நடித்து  கடந்த 2014-ஆம் ஆண்டு வெளியான புலிவால் திரைப்படத்தை இயக்கினார் மாரிமுத்து. தனது இரண்டாவது படத்தின் வசூல் ரீதியிலான தோல்வியைத் தொடர்ந்து இயக்கத்தை கைவிட்ட மாரிமுத்து தொடர்ந்து படங்களில் நடிக்க தொடங்கினார்.

Ethirneechal Marimuthu Passes away: இயக்குநரும், நடிகருமான எதிர்நீச்சல் மாரிமுத்து காலமானார்.. அதிர்ச்சியில் திரையுலக ரசிகர்கள்..!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

ஹெல்மெட் போட்டா தங்க காசு! NEW YEAR சர்ப்ரைஸ்! துள்ளிக் குதித்த வாகன ஓட்டிகள்Zomato Search in 2024 | ”எனக்கு Girlfriend வேணும்” மிரளவைத்த YOUNGSTERS! ஷாக்கான Zomato |‘’முகுந்தனுக்கு பதவி உறுதி!’’  அடித்து சொன்ன ராமதாஸ்   அதிர்ச்சியில் பாமகவினர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
அமைச்சர் துரைமுருகன் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை: குவிக்கப்பட்ட துப்பாக்கி ஏந்திய போலீஸ் - வேலூரில் பரபரப்பு
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
Rohit Sharma: முடிவுக்கு வந்தது சகாப்தம்? பும்ராவிடம் கேப்டன்சி! பெஞ்சில் உட்கார்ந்த தலைவன் ரோகித்!
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
வீட்ல இருங்க! பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன் இன்று விநியோகம்
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Tamilnadu Roundup: பொங்கல் பரிசு டோக்கன் விநியோகம்! துரைமுருகன் வீட்டில் ரெய்டு - தமிழ்நாட்டில் 10 மணி வரை!
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!
Vijayakanth: விஜயகாந்த் பார்த்து பார்த்து கட்டிய வீட்டின் கிரகப்பிரவேசம் - எப்போது? வெளியான தகவல்!
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ரயிலில் மதுரைக்கு பார்சலில் வந்த 240 கிலோ கணேஷ் புகையிலை பறிமுதல்
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
ஸ்பீடு பிரேக்கரில் ஏறி இறங்கிய ஆம்புலன்ஸ்! உயிரிழந்தவர் உயிர் பெற்ற அதிசயம்! அதிர்ச்சியில் மருத்துவர்கள்!
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
பெண்கள் இருக்கும் வீடுகளில் ஜன்னல் இருக்கக்கூடாது: ஆப்கனில் தலிபான் அரசு புது உத்தரவு 
Embed widget