”உன்மேல் நான் கொண்ட காதல்! என்மேல் நீ கொண்ட காதல்!” - சூர்யா ஜோதிகா லவ் ரீகேப்..!
இருவருக்குமிடையிலான உரையாடல் மிக நீண்டதாக இருந்திருக்கிறது. அந்த சந்திப்பிற்கு பிறகு நட்பு வலுவாக தொடங்கியிருக்கிறது
கோலிவுட் வட்டாரத்தில் 15 ஆண்டுகால திருமண பந்தத்திற்கு பிறகும் ஒரு காதல் ஜோடி பலரின் கவனத்தையும் ஈர்த்து வருகிறது என்றால் அது சூர்யா- ஜோதிகா இணையர்தான். ஒருவர் மீது ஒருவருக்கு இருக்கும் காதல், மரியாதை, நட்புணர்வு, புரிதல் இவைகளாலேயே தம்பதிகள் அதிக கவனம் பெருகின்றனர். சூர்யா ஜோதிகாவின் காதல் முதல் கல்யாணம் வரையிலான ஒரு ரீகேப்பை பார்க்கலாம் வாங்க!
”என்னை தொடும் தென்றல் உன்னை தொட வில்லையா?!”
பூவெல்லாம் கேட்டுப்பார் திரைப்படத்தில்தான் சூர்யா மற்றும் ஜோதிகா இருவரும் ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொண்டனர். ஜோதிகா சாதனா மும்பை பெண் என்பதால் , அவருக்கு தமிழ் வசனங்களை கற்றுக்கொடுக்க உதவியுள்ளார் சூர்யா. அதன் பிறகு 2001 ஆம் ஆண்டு ஜோதிகா படப்பிடிப்பு ஒன்றில் இருந்த சமயத்தில் அங்கு சூர்யாவை கண்டுள்ளார். உடனே தனது உதவியாளரை அனுப்பி சூர்யாவை அழைத்து வர சொல்லியிருக்கிறார். அப்போது இருவருக்குமிடையிலான உரையாடல் மிக நீண்டதாக இருந்திருக்கிறது. அந்த சந்திப்பிற்கு பிறகு நட்பு வலுவாக தொடங்கியிருக்கிறது. சூர்யா தனது நெருக்கமான நண்பர்களுடன் செய்யும் பிரைவட் பார்டி அனைத்திற்கு ஜோதிகாவை அழைப்பதை வழக்கமாக வைத்திருந்தாராம்.
”என்மீது காதல் வந்தது எப்போது என்று கொஞ்சம் நீ சொல்வாயா”
சூர்யாவின் நடிப்பில் 2001 ஆம் ஆண்டு வெளியான காக்க காக்க படத்தின் பிரீமியர் ஷோவை ஜோதிகாவும் பார்த்துள்ளார். அப்போது அவரின் நடிப்பு திறமையை கண்ட ஜோதிகா தான் நடிக்க இருக்கும் காக்க காக்க படத்தில் சூர்யாவை நடிக்க வைக்க பரிந்துரை செய்தாராம். காக்க காக்க படத்திற்கு பிறகுதான் இருவருக்கும் இடையே இருந்த அஃபெக்ஷன் காதலாக மாறியுள்ளது. சூர்யாவிற்கு ஜோதிகாவின் டவுன் டு எர்த் குணம் பிடித்து போனதாம், செட்டில் இருக்கும் அனைவரிடமும் மரியாதையுடன் நடந்துக்கொள்வாராம் ஜோதிகா. ஜோதிகாவிற்கு சூர்யாவின் கூச்ச சுபாவம் பிடித்து போனதாக கூறுகிறார். (பெண்களை நிமிர்ந்து பார்த்திடா உன் இனிய கண்ணியம் பிடிக்குதே! ). இந்த படத்திற்கு பிறகு இருவரும் பல ஆண்டுகளால காதலித்து வந்தனர்.
”திருமண மலர்கள் தருவாயா!”
சில பாரம்பரியங்களை பின்பற்றும் சூர்யாவின் தந்தை சிவக்குமார், ஆரம்பத்தில் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததாக கூறப்படுகிறது. பின்னர் இருவருக்கும் இடையிலான காதலின் தீவிரத்தை உணர்ந்த சூர்யாவின் தந்தை திருமணத்திற்கு ஓகே சொல்லி பச்சைக்கொடி காட்டியுள்ளார். அதன் பிறகு கடந்த 2006 ஆம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் தேதி பிரபல பார்க் ஷெரடன் ஹோட்டலில் இவர்களின் திருமணம் பெற்றோர்கள் முன்னிலையில் நடைபெற்றது. அப்போது வெளியான இவர்களின் புகைப்படங்கள் பலராலும் கொண்டாடப்பட்டது.
”என் புருஷன் ஹாப்பியா வச்சிருக்காங்கம்மா”
திருமணத்திற்கு பிறகு ஜோதிகா மும்பையில் இருந்து சென்னைக்கு குடியேறினார். அதன் பிறகு கையில் வைத்திருந்த படங்களை மட்டுமே நடித்துக்கொடுத்தார். அதற்கு பிறகு புதிய படங்களில் எதுவும் கமிட்டாகாமல் குடும்பம் , குழந்தைகள் வளர்ப்பு என கவனம் செலுத்தி வந்தார் ஜோதிகா. குழந்தைகள் ஓரளவிற்கு வளர்ந்த பிறகு மீண்டும் தற்போது திரைத்துறையில் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். தனது 2டி எண்டர்டைன்மண்ட் தயாரிக்கும் படம் மற்றும் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதைகளில் நடிக்க மட்டுமே ஜோதிகா ஆர்வம் காட்டி வருகிறார். சூர்யா ஜோதிகா எடுக்கும் முடிவுகளுக்கு எப்போது பக்க பலமாக இருந்து வருகிறார். தான் ரீ எண்ட்ரி கொடுக்கும் படம் ஒன்றிற்காக ஜோதிகா ராயல் எண்ஃபீல்ட் பைக் ஓட்ட வேண்டியிருந்தது. அதற்காக தனது பிஸி ஷெடியுளிலும் நேரம் ஒதுக்கி தனது மனைவிக்காக நேரம் ஒதுக்கு அவருக்கு கற்றுக்கொடுத்தார். இந்த புகைப்படம் இணையத்தை கலக்கின. சூர்யா- ஜோதிகா இருவரும் ஒருவரை ஒருவர் நேசிக்கும் விதம், மரியாதையுடனான நட்பு , மற்றவர்களுக்கு மிகச்சிறந்த முன் உதாரணம் என ரசிகர்கள் கொண்டாடி வருவதும் குறிப்பிடத்தக்கது.