Entertainment Headlines: தலைவர் 170 ஷூட்டிங் ஸ்டார்ட்.. விபத்தில் சிக்கிய பிரபல நடிகை.. இன்றைய சினிமா செய்திகள் இதோ..!
Entertainment Headlines Oct 04: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாகக் காணலாம்.
- “கலைஞரால் கர்நாடகாவுக்கே ஓடிவிடலாம் என நினைத்தேன்” - நடிகர் ரஜினிகாந்த் எழுதிய கடிதம்
மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை கொண்டாடும் சூழலில், அவருடனான நினைவுகளை திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் நடிகர் ரஜினிகாந்த் பகிர்ந்துள்ளார். அதில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியால் மீண்டும் கர்நாடகாவிற்கே ஓடிவிடலாம் என நினைத்ததாக, நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். அவருடைய இதயத்தில் எனக்கென்று ஒரு தனி இடம் இருந்தது. அதனால் தான் எந்த ஒரு விழாவிலும் என்னை அவர் அருகில் அமர வைத்து மகிழ்வார் என்பதை நினைக்கும் பொழுது எனக்கு மிகவும் பெருமையாக இருக்கின்றது” என நடிகர் ரஜினிகாந்த் பேசியுள்ளார். மேலும் படிக்க
- “கேமரா..கிளாப்..ஆக்ஷன்” .. ஸ்மார்ட் லுக்கில் ரஜினி.. தொடங்கியாச்சு “தலைவர் 170” ஷூட்டிங்..!
நடிகர் ரஜினிகாந்த் நடிக்கவுள்ள 170வது படத்தின் ஷூட்டிங் தொடங்கியுள்ளதாக லைகா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. டி.ஜே.ஞானவேல் இப்படத்தை இயக்குகிறார். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் துஷாரா விஜயன், மஞ்சு வாரியர், ரித்திகா சிங், ராணா டகுபதி, ஃபஹத் ஃபாசில், அமிதாப்பச்சன் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்த படம் அடுத்தாண்டு தீபாவளிக்கு வெளியாகும் என கூறப்படுகிறது. கடந்த 3 நாட்களாக இப்படத்தின் அப்டேட் வெளியாகி வந்த நிலையில் இன்றைய தினம் ரஜினியின் கெட்டப் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- ஆதி குணசேகராக வருகை தந்த வேல ராமமூர்த்தி.. ஒருநாள் சம்பளமே இவ்வளவா? - வைரலாகும் தகவல்..!
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஆதிகுணசேகரன் கேரக்டரில் நடிக்கவுள்ள எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி சம்பளம் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது. வேல ராமமூர்த்திக்கு நாள் ஒன்றுக்கு ரூ.40 ஆயிரம் வழங்கப்படுவதாக கூறப்படுகிறது. மாதத்திற்கு 15,20 நாட்கள் மொத்தமாக கால்ஷீட் கொடுக்க வேண்டும் என்பதால் இந்த சம்பளம் பேசப்பட்டதாக சொல்லப்படுகிறது. இதன்மூலம் சீரியலில் ஹீரோ, ஹீரோயின்களை விட அதிக சம்பளம் வாங்கும் நபராக வேல ராமமூர்த்தி மாறியுள்ளார். மேலும் படிக்க
- “உன்னை நினைத்து பெருமைப்படுகிறேன்”.. சித்தார்த்தை நெகிழ்ந்து பாராட்டிய சிம்பு..!
சித்தா திரைப்படத்தைப் பார்த்த நடிகர் சிலம்பரசன் படத்தின் இயக்குநர் அருண்குமார் மற்றும் சித்தார்த்தை புகழ்ந்து பதிவிட்டுள்ளார். சித்தார்த், மலையாள நடிகை நிமிஷா சஜயன் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள். திபு நினன் தாமஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்திருந்தார். சித்தார்த்தின் தயாரிப்பு நிறுவனமான எடாகி இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இப்படத்தை பார்த்த சிலம்பரசன், “சித்தா திரைப்படம் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியதாக இருக்கிறது. மிகத் தீவிரமான ஒரு கதையை முடிந்த அளவிற்கு மென்மையாகவும் தெளிவாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது. இயக்குநர் அருண்குமார் மற்றும் இந்தத் திரைப்படத்தை தேர்வு செய்து அதை தயாரித்ததற்காக நடிகர் சித்தார்த்தை நினைத்து பெருமைப்படுகிறேன்” என கூறியுள்ளார். மேலும் படிக்க
- இத்தாலியில் நடந்த கார் டூரில் விபத்தில் சிக்கி உயிர்தப்பிய ஷாருக்கான் பட நடிகை..!
இத்தாலியில் பயணம் மேற்கொண்டுள்ள பிரபல பாலிவுட் நடிகை காயத்ரி ஜோஷி தன் கணவருடன் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விபத்து குறித்து பேசிய காயத்ரி ஜோஷி, “நானும் விகாஸும் இத்தாலியில் இருக்கிறோம். நாங்கள் இங்கே ஒரு விபத்தை சந்தித்தோம்.. கடவுள் அருளால் நாங்கள் இருவரும் நலமாக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார். மேலும் படிக்க