மேலும் அறிய

Watch Video: இத்தாலியில் நடந்த கார் டூரில் விபத்தில் சிக்கி உயிர்தப்பிய ஷாருக்கான் பட நடிகை..!

Gayatri Joshi Car Accident: இத்தாலியில் பயணம் மேற்கொண்டுள்ள பிரபல பாலிவுட் நடிகை காயத்ரி ஜோஷி தன் கணவருடன் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

இத்தாலியில் பயணம் மேற்கொண்டுள்ள பிரபல பாலிவுட் நடிகை காயத்ரி ஜோஷி தன் கணவருடன் கார் விபத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கடந்த 2000 ஆம் ஆண்டில் நடந்த ஃபெமினா மிஸ் இந்தியா இன்டர்நேஷனல் போட்டியில் அழகி பட்டத்தை வென்றவர் நாக்பூரை சேர்ந்த காயத்ரி ஜோஷி.  இதனைத் தொடர்ந்து 2004 ஆம் ஆண்டு ஸ்வேட்ஸ் பாலிவுட் திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். விமர்சன ரீதியாக ரசிகர்களிடம் மிகப்பெரிய பாராட்டைப் பெற்ற இந்த படத்தில் அவர் நடிகர் ஷாரூக்கானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் நடித்ததன் மூலம் அறிமுக நடிகைகக்கான சில விருதுகளையும் காயத்ரி ஜோஷி  வென்றிருந்தார். 

ஆனால் அவர் மேற்கொண்டு எந்த படத்திலும் நடிக்கவில்லை. சினிமாவை விட்டு விலகிய காயத்ரி ஜோஷி,   2005 ஆம் ஆண்டு தொழிலதிபர் விகாஸ் ஓபராய் என்பவரை திருமணம் செய்து கொண்டார், மேலும் இந்த தம்பதியினருக்கு இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில் அவர் தற்போது இத்தாலியில் வசிக்கிறார். கடந்த ஆண்டு ஹிருத்திக் ரோஷன் மற்றும் சுசானே கானுடன் ஒரு சந்திப்பில் காயத்ரி ஜோஷி மற்றும் அவரது கணவர் இருவரும் கலந்து கொண்டனர். 

இதனிடையே 2019 ஆம் ஆண்டு கிரெடிட் கார்டு மோசடியில் ரூ.40,000ஐ இழந்ததற்காக தலைப்புச் செய்திகளில் காயத்ரி ஜோஷி மீண்டும் இடம் பிடித்தார். யாரோ ஒருவர் தனது அட்டை விவரங்களைத் திருடி, பின்னர் பணத்தை எடுப்பதற்காக அதை நகல் எடுத்ததாக புகார் அளித்ததாக கூறப்பட்டது. இந்த நிலையில் கணவர் விகாஸ் ஓபராயுடன் இத்தாலியில் வசித்து வருகிறார். அங்கு ஒரு சூப்பர் கார் டூர் நடைபெற்றது. இதில் ஆடம்பரமான கார்கள் அனைத்தும் சாலையில் ஒருபுறத்தில் அணிவகுத்து சென்றது.

இதில் காயத்ரி மற்றும் விகாஸ் இருவரும் லம்போஹினி காரில் பயணம் செய்தனர். அவர்களது காரை ஃபெராரி கார் ஒன்று முந்தி செல்ல முயன்ற போது, சாலையில் பக்கவாட்டில் பயணித்த வேனில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் நடிகை காயத்ரி ஜோஷி மற்றும் விகாஸ் இருவரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். 

இந்த விபத்தில் ஃபெராரி காரில் பயணித்த தம்பதியினர் இருவரும் உயிரிழந்தனர். விபத்து குறித்து பேசிய காயத்ரி ஜோஷி, “நானும் விகாஸும் இத்தாலியில் இருக்கிறோம். நாங்கள் இங்கே ஒரு விபத்தை சந்தித்தோம்.. கடவுள் அருளால் நாங்கள் இருவரும் நலமாக இருக்கிறோம்” என தெரிவித்துள்ளார். ஆனால் அவர் பற்றிய விக்கிப்பீடியா தகவலில் காயத்ரி இறந்து விட்டதாக சிலர் மாற்றியுள்ளது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin : ’’தூங்கி வழிந்த அதிமுக அரசு தூக்கம் தொலைத்த சென்னை’’விளாசும் ஸ்டாலின்Arvind Kejriwal Attack : கெஜ்ரிவால் மீது மர்ம திரவம் வீச்சு அதிர்ச்சி வீடியோ! பின்னணியில் பாஜகவா?Aadhav Arjuna : ”விஜய் வருவது உறுதி..”அடம்பிடிக்கும் ஆதவ் அர்ஜூனா?தலைவலியில் திருமா..கடுப்பில் திமுகPawan Kalyan Controversy : CM Vs DEPUTY CM ”துறைமுகமா? கடத்தல் கூடாரமா?” பவன் கல்யாண் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
School Colleges Leave: 9 மாவட்டங்களில் பள்ளி-கல்லூரிகளுக்கு விடுமுறை.! எங்கு தெரியுமா?
Red Alert:  இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
Red Alert: இன்று இரவு 22 மாவட்டங்களில் மழை இருக்கு: எங்கு ரெட் அலர்ட்?, ஆரஞ்சு அலர்ட்?
"ஒரு காலத்தில் AIDSக்கு மருந்தே இல்ல" சொல்கிறார் மத்திய சுகாதார அமைச்சர் நட்டா!
"BEEF-க்கு தடையா.. காங்கிரஸ் கேட்டா பண்றேன்" பற்ற வைத்த ஹிமந்த பிஸ்வா சர்மா!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
கோடிக்கணக்கில் விற்பனை.. சர்வதேச வர்த்தக கண்காட்சியில் ஏழை கைவினை கலைஞர்கள் அசத்தல்!
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
டெல்டாவை கலங்கடிக்கும் கனமழை! விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.50,000: தமிழக அரசுக்கு புது சிக்கல்! 
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
WhatsApp:சாட் கஸ்டம் லிஸ்டில் புதிய ஃபில்டர் வசதியை அறிமுகம் செய்யும் வாட்ஸ் அப்!அப்டேட் விவரம்!
Annamalai:
"பாஜகவுக்கு பயமில்ல.. திராவிட சித்தாந்தத்தையே பேசும் விஜய்" ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Embed widget