மேலும் அறிய

Entertainment Headlines: சமுத்திரக்கனி ஆவேசம்.. ட்ரெண்டிங்கில் நயன்.. தலைவர் 171 வில்லன்.. சினிமா ரவுண்ட் அப்!

Entertainment Headlines Nov 30: இன்றைய நாளில் சினிமாவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளை கீழே காணலாம்.

ராஜமவுலி முதல் அல்லு அர்ஜூன் வரை.. வாக்களித்த திரை பிரபலங்கள்!

தெலுங்கானா சட்டமன்ற தேர்தலில் பாகுபலி இயக்குநர் ராஜமவுலி, ஆஸ்கர் வென்ற எம்.எம்.கீரவாணி, நடிகர்கள் ராணா டகுபதி, வெங்கடேஷ், சிரஞ்சீவி, அல்லு அர்ஜூன் உள்ளிட்டோர் வாக்களித்து ஜனநாயக கடமையை ஆற்றினர்.  ​தெலுங்கானாவில் மொத்தமுள்ள 119 தொகுதிக​ளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மொத்தமாக 2,290 வேட்பாளர்கள் களம் காண்பதால் மக்கள் ஆதரவு யாருக்கு என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெ​ற்று​ வருகிறது. இன்று பதிவாகும் வாக்குகள் டிசம்பர் 3 ஆம் தேதி எண்ணப்படுகிறது. மேலும் படிக்க

‘ஏசி வேணும்னா ஏதாவது மண்டபத்துக்கு போங்க.. ஏன் தியேட்டருக்கு வந்து திட்டுறீங்க’ - நடிகர் எஸ்.வி.சேகர் ஆதங்கம்

தான் சென்சார் போர்டில் இருக்கும்போது வாங்காத திட்டுகளே இல்லை என பட விழா ஒன்றில் நடிகர் எஸ்.வி.சேகர் தெரிவித்துள்ளார்.  சென்னை சாலிகிராமத்தில் உள்ள பிரசாத் லேப்பில், ‘எமகாதகன்’ என்ற படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் எஸ்.வி.சேகர், சென்சார் போர்டு விவகாரம் பற்றி பேசினார். அதில், “நான் சென்சார் போர்டில் இருக்கும்போது வாங்காத திட்டுகளே இல்லை. இன்னைக்கு எல்லாருக்கும் யு சர்ட்டிபிகேட் வாங்க வேண்டும் என்பது ஆசை. மேலும் படிக்க 

'இந்த வருத்தம் தெரிவிக்கிற சீனெல்லாம் இங்க செல்லாது’ - ஞானவேல் ராஜாவை சரமாரியாக சாடிய சமுத்திரக்கனி!

’பருத்தி வீரன்’ படம் தொடர்பாக இயக்குநர் அமீருக்கும், தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கும் இடையேயான பிரச்னை கடந்த சில வாரங்களாக பூதகரமாக வெடித்து வருகிறது. இதுதொடர்பாக, கடந்த சில நாட்களுக்கு முன்பு, தனியார் யூடியூப் சேனலுக்கு பேட்டியளித்த ஞானவேல்ராஜா, இயக்குநர் அமீரை திருடன் எனவும், வேலை தெரியாதவர், என் காசில் தொழிலை கற்றுக்கொண்டார் என தரக்குறைவாக விமர்சித்தார். இதனால் அவருக்கு ரசிகர்கள் முதல் திரைபிரபலங்கள் வரை பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க

விஜயகாந்தின் உடல்நிலை மோசமாக இதுதான் காரணமா? - வெளியான புதிய தகவல்

கழுத்து எலும்பு தேய்மானமே விஜயகாந்தின் இந்த நிலைமைக்கு காரணம் என அவரது நண்பர்கள் கூறியுள்ளதாக தகவல் ஒன்று இணையத்தில் உலா வருகிறது. நடிகரும், தேமுதிக கட்சி தலைவருமான விஜயகாந்த் உடல்நல குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், ” விஜயகாந்தின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் காணப்பட்டது. எனினும், கடந்த 24 மணி நேரத்தில் அவரது உடல்நிலை நீராக இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிரது. மேலும் படிக்க

'தலைவர் 171' படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லன் இவரா? - கம்பேக் கொடுக்கும் பிரபல நடிகர்..

லோகேஷ் கனகராஜ்  - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாக இருக்கும் 'தலைவர் 171 ' படத்தில் வில்லனாக இணைய உள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆக்ஸ்ட் மாதம் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. கலவையான விமர்சனங்களை பெற்ற போதும் பாக்ஸ் ஆபிஸில் 700 கோடி வரை வசூலை செய்து சாதனை படைத்தது. நடிகர் ரஜினிகாந்துக்கு இப்படம் சிறந்த ஒரு கம்பேக் படமாக அமைந்தது. மேலும் படிக்க

பருத்திவீரன் வழக்கு..இப்படித்தான் சூர்யா பெயர் சேர்க்கப்பட்டது - காரணத்தை உடைத்த அமீர்

ஒட்டுமொத்த தமிழ் சினிமாவிலும் தற்போது பேசப்பட்டு வரும் விஷயம் 17 ஆண்டுகளுக்கு முன்னர் இயக்குநர் அமீரின் பருத்திவீரன் படம் தொடர்பாகத்தான்.17 வருடங்களுக்கு முன்னர் வெளியான இந்த படத்தின் பின்னணியில் இப்படியான பிரச்னைகள் இருப்பது தற்போது கிளம்பியுள்ள புகைச்சலுக்குப் பின்னர்தான் மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. சமீபத்தில் நடந்த நடிகர் கார்த்தியின் 25 திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு அமீர் வரவில்லை. மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்புAdani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
Pakistan Shooting: பாகிஸ்தானில் வேன் மீது துப்பாக்கிச்சூடு.! குறைந்தது 38 பேர் பலி.!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
“என்னை நேசிக்கும் தமிழக மக்களுக்கு நன்றி” - சிறையில் இருந்து வெளியே வந்தார் நடிகை கஸ்தூரி!
Sabarimala Temple: சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? -  கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
சபரிமலையில் குழந்தைகளை தவறவிட்டால் என்ன செய்வது? - கேரள போலீஸின் புதிய திட்டம் இதுதான்
“என்னை காதலி” ...  பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
“என்னை காதலி” ... பெண்ணை கடுமையாக தாக்கும் இளைஞர் - அதிர்ச்சி வீடியோ
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!
Embed widget