மேலும் அறிய

Thalaivar 171 : 'தலைவர் 171' படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லன் இவரா? - கம்பேக் கொடுக்கும் பிரபல நடிகர்..

லோகேஷ் கனகராஜ்  - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாக இருக்கும் 'தலைவர் 171 ' படத்தில் வில்லனாக இணைய உள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  

லோகேஷ் கனகராஜ்  - ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாக இருக்கும் 'தலைவர் 171 ' படத்தில் வில்லனாக இணைய உள்ள நடிகர் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.  

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த ஆக்ஸ்ட் மாதம் வெளியான 'ஜெயிலர்' திரைப்படம் மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. கலவையான விமர்சனங்களை பெற்ற போதும் பாக்ஸ் ஆபிஸில் 700 கோடி வரை வசூலை செய்து சாதனை படைத்தது. நடிகர் ரஜினிகாந்துக்கு இப்படம் சிறந்த ஒரு கம்பேக் படமாக அமைந்தது. 

ஜெயிலர் படத்தின் வெற்றிக்கு பிறகு 'தலைவர் 170' படத்தில் மிகவும் பிஸியாக ஈடுபட்டுள்ளார் நடிகர் ரஜினிகாந்த். பிரபலமான இயக்குநர் டி.ஜே. ஞானவேல் இயக்கும் இப்படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'தலைவர் 171' திரைப்படத்தில் நடிக்க உள்ளார். 

Thalaivar 171 : 'தலைவர் 171' படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லன் இவரா? - கம்பேக் கொடுக்கும் பிரபல நடிகர்..

லோகேஷ் கனகராஜ் - ரஜினிகாந்த் :

லோகேஷ் கனகராஜ் - நடிகர் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவாகவுள்ள 'தலைவர் 171' படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் அறிவிப்பு வெளியான நாள் முதல் இருந்து எதிர்பார்ப்பு எகிறி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்க உள்ளார். மேலும் நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார் என வெளியான தகவல் உண்மையா என்பது தெரியவில்லை. அதே போல இப்படத்தில் நடிக்க இருக்கும் மற்ற நடிகர்கள் குறித்த விவரங்களும் வெளியாமல் சஸ்பென்ஸாகவே இருக்கிறது

'தலைவர் 171' வில்லன் :

அந்த வகையில் தலைவர் 171 படத்தில் இணையும் வில்லன் குறித்த தகவல் ஒன்று தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 'யூனிவர்சிட்டி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமாகி திருட்டு பயலே, நான் அவன் இல்லை உள்ளிட்ட சூப்பர் ஹிட் படங்களில் ஹரோவாக நடித்து, காக்க காக்க படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்த நடிகர் ஜீவன் தான் 'தலைவர் 171' வில்லனாக தேர்ந்து எடுக்கப்பட்டுள்ளார் என்ற தகவல் வெளியாகி உள்ளது. 

Thalaivar 171 : 'தலைவர் 171' படத்தில் சூப்பர் ஸ்டாருக்கு வில்லன் இவரா? - கம்பேக் கொடுக்கும் பிரபல நடிகர்..

பிரேக் எடுத்த ஜீவன் :

சினிமாவில் மிகவும் பிரபலமான நடித்து வந்த நடிகர் ஜீவன் திடீரென நடிப்பில் இருந்து பிரேக் எடுத்துக் கொள்ள அதுவே அவருக்கு சரியான வாய்ப்புகள் அமையாமல் போக காரணமானது. மிகவும் திறமையான நடிகராக இருந்த போதும் நடிகர் ஜீவனால் ஸ்டார் நடிகராக ஜொலிக்க முடியாமல் போனது.

தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்க இருக்கும் தலைவர் 171 படத்தில் நடிப்பதன் மூலம் நடிகர் ஜீவனுக்கு நல்ல ஒரு கம்பேக் கிடைத்து மீண்டும் பார்முக்கு வருவார் என் மிகவும் ஆவலுடன் அவரின் ரசிகர்கள் எதிர்பார்க்கிறார்கள். 

நடிகர் ஜீவன், ஜோதிடம் மீது அதிகம் நம்பிக்கை கொண்டவர் என்றும் எது செய்தாலும் ஜோதிடம் பார்த்து செய்வார் என்றும் கூறப்படுகிறது. வந்த வாய்ப்புகளை எல்லாம் தட்டி கழிக்க அதுவே அவருக்கு வாய்ப்புகள் கிடைக்காமல் போவதற்கும் காரணமாக போனது என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

தலைப்பு செய்திகள்

பென்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் LCU கதாப்பாத்திரங்கள் - நிவின் பாலி சொன்ன சீக்ரெட்...
பென்ஸ் திரைப்படத்தில் இடம்பெறும் LCU கதாப்பாத்திரங்கள் - நிவின் பாலி சொன்ன சீக்ரெட்...
Jailer 2 : அந்த ஒரு காட்சியை நீக்க சொன்ன சென்சார் போர்ட்..முடியாது என்ற நெல்சன்..ஆர்டர் போட்டர் ரஜினி
Jailer 2 : அந்த ஒரு காட்சியை நீக்க சொன்ன சென்சார் போர்ட்..முடியாது என்ற நெல்சன்..ஆர்டர் போட்டர் ரஜினி
Karthik Subbaraj: விக்ரமுடன் மீண்டும் இணையும் கார்த்திக் சுப்பராஜ்.. இந்த முறை தியேட்டர் தான்.. அதுவும் இந்த படம் தான்!
Karthik Subbaraj: விக்ரமுடன் மீண்டும் இணையும் கார்த்திக் சுப்பராஜ்.. இந்த முறை தியேட்டர் தான்.. அதுவும் இந்த படம் தான்!
இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய்..அட்லீ தயாரிப்பில் விஜய் சேதுபதி..நாளை வெளியாகும் 3 படங்கள்
இயக்குநராக அறிமுகமாகும் ஜேசன் சஞ்சய்..அட்லீ தயாரிப்பில் விஜய் சேதுபதி..நாளை வெளியாகும் 3 படங்கள்

வீடியோ

VS Babu in Hospital : ICU-வில் V.S பாபு.. சுவாச கருவியில் தீவிர சிகிச்சை! HOSPITAL பரபரப்பு அறிக்கை
Tiruvotriyur CRIME : மிரட்டிய போலீஸ்! பேட்டி கொடுத்த மறுநாளே இளைஞர் கொலை! திருவொற்றியூரில் பயங்கரம்!
Oothangarai News : பள்ளி மாணவியிடம் அத்துமீறல்! பேருந்தை மறித்து கண்டக்டரை ஓட ஓட அடித்த பொதுமக்கள்!
Vijay London Trip : Phone போட்ட ஆளுநர்! ”லண்டனுக்கு போகாதீங்க ” பயணத்தை மாற்றிய CM விஜய்
SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Vijay Speech: ”திமுகவின் பரம்பரை சொத்து..! ஒருமையில் பேசும் ஸ்டாலின்” - முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு
Vijay Speech: ”திமுகவின் பரம்பரை சொத்து..! ஒருமையில் பேசும் ஸ்டாலின்” - முதலமைச்சர் விஜய் குற்றச்சாட்டு
திமுகவை சொன்ன இபிஎஸ்-க்கு எதுக்கு கோவம் வருது.. ஒரே வார்த்தை சொல்லி ஸ்டாலினை காலி செய்த விஜய்.!
திமுகவை சொன்ன இபிஎஸ்-க்கு எதுக்கு கோவம் வருது.. ஒரே வார்த்தை சொல்லி ஸ்டாலினை காலி செய்த விஜய்.!
Dharapuram By Election: என்னை கேவலமா பேசுறாங்க.. நான் எந்த தப்பும் பண்ணல.. விஜய் முன்னால் கண்ணீர் விட்ட சத்யபாமா!
Dharapuram By Election: என்னை கேவலமா பேசுறாங்க.. நான் எந்த தப்பும் பண்ணல.. விஜய் முன்னால் கண்ணீர் விட்ட சத்யபாமா!
Ration Card: 1.58 கோடி ரேஷன் அட்டைகள் முடக்கமா? யாருக்கு பொருட்கள் கிடைக்காது - தமிழ்நாடு அரசு புது விளக்கம்
1.58 கோடி ரேஷன் அட்டைகள் முடக்கமா? யாருக்கு பொருட்கள் கிடைக்காது - தமிழ்நாடு அரசு புது விளக்கம்
Ind Vs WI: சூறாவளியாய் வெளுக்கும் மேற்கிந்திய தீவுகள் - இந்திய அணி கன்ட்ரோல் செய்யுமா? கோலி விட்ட கேட்ச்
சூறாவளியாய் வெளுக்கும் மேற்கிந்திய தீவுகள் - இந்திய அணி கன்ட்ரோல் செய்யுமா? கோலி விட்ட கேட்ச்
TVK: கூட்டணி சேர்ந்து கத்தினாலும், கதறினாலும் ஒன்னும் நடக்காது.. திமுக, அதிமுகவை வெளுத்து வாங்கிய தவெக!
TVK: கூட்டணி சேர்ந்து கத்தினாலும், கதறினாலும் ஒன்னும் நடக்காது.. திமுக, அதிமுகவை வெளுத்து வாங்கிய தவெக!
TN Weather News: கனமழை பொளக்க போகுது..! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை
கனமழை பொளக்க போகுது..! இன்று எந்தெந்த மாவட்டங்களுக்கு வார்னிங் - சென்னை? தமிழக வானிலை
Dengue: தமிழ்நாட்டை அச்சுறுத்தும் டெங்கு.. தூங்குகிறதா சுகாதாரத்துறை? ஸ்பீட் ஏத்துங்க அருண்ராஜ் சார்!
Dengue: தமிழ்நாட்டை அச்சுறுத்தும் டெங்கு.. தூங்குகிறதா சுகாதாரத்துறை? ஸ்பீட் ஏத்துங்க அருண்ராஜ் சார்!
Embed widget