Entertainment Headlines May 20: வசூலை அள்ளும் பிச்சைக்காரன் 2.. மாடர்ன் லவ், மாமன்னன் வடிவேலு..! டாப் சினிமா செய்திகள்..!
Entertainment Headlines: சினிமாவில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகள் காணலாம்.
![Entertainment Headlines May 20: வசூலை அள்ளும் பிச்சைக்காரன் 2.. மாடர்ன் லவ், மாமன்னன் வடிவேலு..! டாப் சினிமா செய்திகள்..! Entertainment Headlines Today May 20th Tamil Cinema News Latest Vadivelu Balumahendra Picahikkaran 2 Vijay Antony Modern Love Chennai Trisha Entertainment Headlines May 20: வசூலை அள்ளும் பிச்சைக்காரன் 2.. மாடர்ன் லவ், மாமன்னன் வடிவேலு..! டாப் சினிமா செய்திகள்..!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/20/2dce3673a34cfd43d2a43043ec5a08191684581716232574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பிச்சைக்காரன் 2 முதல் நாள் வசூல் இவ்வளவா? டோலிவுட்டிலும் வரவேற்பு... மாஸ் காட்டும் விஜய் ஆண்டனி!
நேற்று திரையரங்குகளில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படம் முதல் நாள் நல்ல வசூலை எட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அம்மா செண்டிமெண்டை மையப்படுத்தி பிச்சைக்காரன் படம் வெளியாகி ஹிட் அடித்த நிலையில், பிச்சைக்காரன் 2 தங்கை செண்டிமெண்ட், மூளை மாற்று அறுவை சிகிச்சை என செண்டிமெண்ட், ஆக்ஷன், த்ரில்லர் கலந்து விஜய் ஆண்டனியின் இயக்கத்திலேயே வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
‘ஒன்னுமே இல்லாம போறேன்.. ஆனா பிடிச்சத செய்யறேன்..’ பாலு மகேந்திராவின் 84-வது பிறந்தநாள் இன்று..
ஒளி ஓவியன் பாலு மகேந்திராவின் 84-வது பிறந்தநாள் இன்று. அவரை பற்றிய ஒரு சிறிய தொகுப்பை காணலாம். இலங்கையில் மட்டக்களப்பு அருகில் உள்ள கிராமத்தில் 1939-ல் பிறந்தவர் பாலு மகேந்திரா. 1977-ல் வெளியான 'கோகிலா' என்ற கன்னடப் படம் தான் பாலு மகேந்திராவின் முதல் படம். இத்திரைப்படம் தான் பாலுமகேந்திராவுக்கு முதல் தேசிய விருதை பெற்றுத் தந்தது. தமிழில் பாலு மகேந்திரா இயக்கிய முதல் படம் அழியாத கோலங்கள். மேலும் படிக்க
வெளியானது வடிவேலுவின் குரலில், மாமன்னன் படத்தின் முதல் பாடல் ராசாகண்ணு..
மாரி செல்வராஜ் இயக்கியிருக்கும் மாமன்னன் திரைப்படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டது. இந்த வருடத்தில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படங்களின் வரிசையில் மாமன்னன் படமும் ஒன்று. மாமன்னன் திரைப்படத்தின் போஸ்டர்கள் சமூக வலைதளத்தில் வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தை அதிகரித்துள்ளது. குறிப்பாக இந்தப் படத்தில் வடிவேலுவின் கதாபாத்திரத்தைப் பற்றித் தெரிந்துகொள்ள அனைவரும் மிக ஆர்வமாக காத்திருக்கிறார்கள். மேலும் படிக்க
மாடர்ன் லவ் சென்னை....எப்படி இருக்கிறது அக்ஷய் சுந்தர் இயக்கிய மார்கழி?
மார்கழி பதின்வயதில் வரும் முதல் காதலை மிக அழகாக சொல்லியிருக்கும் ஒரு படம். படத்தின் தொடக்கத்தில் இருந்து கடைசிவரை வரும் இளையராஜாவின் பாடல் ஒன்று இந்த மொத்த படத்தை குறிப்பாக நமக்கு உணர்த்திவிடுகிறது. இளம் பருவத்தில் முதல் காதல் வரும்போது நம் அனைவருக்கும் ஏதாவது ஒரு பாடல் இருக்குமில்லையா? காதல் வந்ததால் அந்தப் பாடல் பிடித்ததா இல்லை பாடல் பிடித்ததால் காதல் வந்ததா என்றுகூட சில நேரம் குழப்பமாகிவிடும். மேலும் படிக்க
இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரமா.. லியோ படத்தைத் தொடர்ந்து த்ரிஷா நடிக்கும் அடுத்த படம்
லியோ படத்தைத் தொடர்ந்து தூங்காநகரம் திரைப்படத்தை இயக்கிய கெளரவ் நாராயணன் இயக்கத்தில் நடிக்க இருக்கிறார் நடிகை த்ரிஷா. த்ரிஷா தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ திரைப்படத்தில் விஜயுடன் நடித்து வருகிறார். கிட்டதட்ட 14 ஆண்டுகளுக்குப் பிறகு இவர்கள் இருவரும் இணைந்து நடிக்கிறார்கள். லியோ படத்தைத் தொடர்ந்து த்ரிஷா தூங்காநகரம் படத்தை இயக்கிய கெளரவ் நாராயணன் இயக்கும் படத்தில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
‘யார் மனதையும் புண்படுத்தும்படி இருக்காது’ .. காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் குறித்து இயக்குநர் முத்தையா பேச்சு
காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் படம் யார் மனதையும் புண்படுத்தும்படி இருக்காது என அப்படத்தின் இயக்குநர் முத்தையா தெரிவித்துள்ளார். ஆர்யாவின் 34வது படமாக காதர் பாட்சா என்ற முத்துராமலிங்கம் உருவாகியுள்ளது. டிரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் சார்பில், இயக்குநர் முத்தையா இந்த படத்தை இயக்கியுள்ளார். ஹீரோயினாக சித்தி இத்னானி நடிக்க, ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைத்துள்ளார். மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)