Pichaikkaran 2: பிச்சைக்காரன் 2 முதல் நாள் வசூல் இவ்வளவா? டோலிவுட்டிலும் வரவேற்பு... மாஸ் காட்டும் விஜய் ஆண்டனி!
சுமார் 20 கோடிகள் செலவில் எடுக்கப்பட்டுள்ள பிச்சைக்காரன் 2 படத்தை விஜய் ஆண்டனி இயக்கி, நடித்து, இசையமைத்துள்ளார்.
நேற்று திரையரங்குகளில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான பிச்சைக்காரன் 2 திரைப்படம் முதல் நாள் நல்ல வசூலை எட்டியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
2016ஆம் ஆண்டு விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியாகி பிச்சைக்காரன் படம் மிகப்பெரும் வெற்றி பெற்ற நிலையில், அதன் தொடர்ச்சியாக பிச்சைக்காரன் 2 தற்போது வெளியாகியுள்ளது.
அம்மா சென்டிமென்ட்டை மையமாக வைத்து வெளியான பிச்சைக்காரன் படம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், தெலுங்கில் ‘பிச்சகாடு’ என்ற பெயரிலும், இந்தியில் ‘ரோட்சைட் ரவுடி’ என்ற பெயரிலும் இந்தப் படம் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியாகி வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் பிச்சைக்காரன் 2 படம் தங்கை செண்டிமெண்ட், மூளை மாற்று அறுவை சிகிச்சை என செண்டிமெண்ட், ஆக்ஷன், த்ரில்லர் கலந்து விஜய் ஆண்டனியின் இயக்கத்திலேயே வெளியாகியுள்ளது. நேற்று தெலுங்கிலும் பிச்சகாடு 2 என்ற பெயரில் இப்படம் வெளியானது.
தமிழைவிட இப்படத்துக்கு தெலுங்கில் பிரம்மாண்ட ஓப்பனிங் அமைந்துள்ளதாக நேற்றே தகவல் வெளியானது . இந்நிலையில் பிச்சைக்காரன் 2 திரைப்படம் தமிழ், தெலுங்கு மொழிகளில் சேர்த்து முதல் நாள் 6 கோடிகள் வரை வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
முதல் நாளான நேற்று தமிழில் 2.55 கோடிகளும், தெலுங்கில் 3.45 கோடிகளும் வசூலித்துள்ளதாக பாக்ஸ் ஆஃபிஸ் தகவல்களை வெளியிடும் sacnilk தளம் தகவல் பகிர்ந்துள்ளது.
#Pichaikkaran2 India Net Collection
— Sacnilk Entertainment (@SacnilkEntmt) May 20, 2023
Day 1: 6 Cr
Total: 6 Cr
India Gross: 7.05 Cr
Details: https://t.co/how6fDdMTB
சுமார் 20 கோடிகள் செலவில் எடுக்கப்பட்டுள்ள இந்தப் படம் முதல் நாளே 6 கோடிகள் வரை வசூலித்துள்ளது கவனமீர்த்துள்ளது. மேலும் இன்றும் நாளையும் வார விடுமுறை நாளான நாளையும் நல்ல வசூலை படம் ஈட்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக பிச்சைக்காரன் 2 திரைப்படம்தன் ஆய்வுக்கூடம் படத்தி்ன் கதை எனவும், இதற்காக விஜய் ஆண்டனி ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் எனவும் கூறி ராஜகணபதி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில், தன் படம் வெளியாவதைத் தடுக்க வேண்டுமென்ற நோக்கத்துடன் வழக்கு தொடரப்பட்டுள்ளதாகவும், தனக்கு பொருளாதார ரீதியாக இழப்பு மற்றும் மன உளைச்சல் ஏற்பட்டுள்ளதாக விஜய் ஆண்டனி ஏற்கெனவே தெரிவித்திருந்தார்.
மேலும் முன்னதாக மலேசியாவின் லங்காவி தீவில் முன்னதாக இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கிய நிலையில், மூக்கு, தாடை எலும்பு பகுதிகளில் தனக்கு பலத்த காயம் ஏற்பட்டதாகவும், பெரும் அறுவை சிகிச்சை தனக்கு நிறைவடைந்ததாகவும் விஜய் ஆண்டனி பகிர்ந்திருந்தார்.
இந்நிலையில், இப்படி பல பிரச்னைகளைக் கடந்து வெளியாகியுள்ள பிச்சைக்காரன் 2 படம், கலவையான விமர்சனங்கள் கடந்து மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்று திரையரங்குகளில் ஓடி வருகிறது.