Entertainment Headlines June 10: லைக்ஸ் அள்ளும் போர் தொழில்... மீண்டும் தந்தையான பிரபுதேவா.. இன்றைய டாப் சினிமா செய்திகள்!
Entertainment Headlines: சினிமா உலகில் இன்று நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகள் காணலாம்.
மிரட்டும் திரைக்கதை... போர் தொழில் படம் பார்க்க கூட்டம் கூட்டமாக தியேட்டருக்கு படையெடுக்கும் ரசிகர்கள்..!
நடிகர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியாகியுள்ள போர் தொழில் படம் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றுள்ளது. E4 எக்ஸ்பிரிமெண்ட்ஸ், எப்ரியஸ் ஸ்டுடியோ அப்ளாஸ் எண்டர்டெய்ன்மென்ட் ஆகிய 3 நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள படம் ‘போர் தொழில்’. இந்த படத்தில் அசோக் செல்வன், சரத்குமார், நிகிலா விமல், சரத்பாபு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் படிக்க
நடிகை ரோஜாவுக்கு என்னாச்சு.. திடீரென மருத்துவமனையில் அனுமதி.. அதிர்ச்சியில் ரசிகர்கள்...
நடிகையும், ஆந்திர மாநில அமைச்சருமான ரோஜா சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள தகவல் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தெலுங்கு படங்களின் மூலம் திரையுலகில் நுழைந்த நடிகை ரோஜா தமிழில் ஆர்.கே.செல்வமணி இயக்கிய செம்பருத்தி படத்தின் மூலம் அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி பெற்றது. மேலும் படிக்க
மேடையில் சரிந்து விழுந்து இறந்த பிரபல பரதநாட்டிய கலைஞர் - சோகத்தில் கலையுலகம்
மலேசிய குடிமகனும், புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞருமான ஸ்ரீ கணேசன் மரணமடைந்துள்ள சம்பவம் கலையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 60 வயதுடைய நடனக் கலைஞரான ஸ்ரீ கணேசன் மலேசிய பரதநாட்டிய நடன சங்கத்தின் தலைவராக பணியாற்றியதோடு மட்டுமல்லாமல் கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ கணேசாலயாவின் தலைவராகவும் இருந்துள்ளார். இதனிடையே புவனேஸ்வரில் உள்ள கடந்த மூன்று நாட்களாக பஞ்சா கலா மண்டபத்தில் நடன நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. மேலும் படிக்க
பெண் குழந்தைக்கு தந்தையான பிரபுதேவா? மகிழ்ச்சியில் சுந்தரம் மாஸ்டர் குடும்பம்!
நடிகர் பிரபுதேவா ஹிமானி சிங் எனும் பிசியோதெரபிஸ்டை ரகசியத் திருமணம் செய்துகொண்டதாக கடந்த சில மாதங்களாக தகவல்கள் வெளியாகிவந்த நிலையில், ஏப்ரல் மாதம் தன் பிறந்தநாளின் போது அவர் ஹிமானி சிங் உடன் திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு தரிசனம் செய்ய வருகை தந்து கிசுகிசுக்களுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். மேலும் படிக்க
முதன்முறையாக காதலர் புகைப்படத்தைப் பகிர்ந்த கர்ப்பிணி இலியானா... குவியும் வாழ்த்துகள்!
நடிப்பு தாண்டி நடிகை இலியானா தன் தனிப்பட்ட வாழ்வால் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்.
தற்போது நிறை மாத கர்ப்பிணியாக் இருக்கும் இலியானா தொடர்ந்து தன் கர்ப்பகால புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து தன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார். நடிகை இலியானா இதுவரை திருமணம் செய்துகொள்ளாத நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் கருவுற்றிருப்பதாக தன் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்து தன் ரசிகர்கள் அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார். மேலும் படிக்க