Ileana D Cruz: முதன்முறையாக காதலர் புகைப்படத்தைப் பகிர்ந்த கர்ப்பிணி இலியானா... குவியும் வாழ்த்துகள்!
”நான் என்னிடமே அன்பாக நடந்து கொள்ள மறக்கும் நாட்களில், இந்த அழகான மனிதன் தான் உறுதுணையாக இருந்தார்” என இலியானா குறிப்பிட்டுள்ளார்.
![Ileana D Cruz: முதன்முறையாக காதலர் புகைப்படத்தைப் பகிர்ந்த கர்ப்பிணி இலியானா... குவியும் வாழ்த்துகள்! Ileana D Cruz shares FIRST PIC with boy friend and says This lovely man has been my rock Ileana D Cruz: முதன்முறையாக காதலர் புகைப்படத்தைப் பகிர்ந்த கர்ப்பிணி இலியானா... குவியும் வாழ்த்துகள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/10/80627d74077b131dcfb5ee94198dc20b1686382323032574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிப்பு தாண்டி நடிகை இலியானா தன் தனிப்பட்ட வாழ்வால் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறார்.
பாய்ஃப்ரெண்ட் ஃபோட்டோ
தற்போது நிறை மாத கர்ப்பிணியாக் இருக்கும் இலியானா தொடர்ந்து தன் கர்ப்பகால புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து தன் ரசிகர்களை மகிழ்வித்து வருகிறார்.
நடிகை இலியானா இதுவரை திருமணம் செய்துகொள்ளாத நிலையில், இந்த ஆண்டு தொடக்கத்தில் தான் கருவுற்றிருப்பதாக தன் சமூக வலைதளப் பக்கத்தில் அறிவித்து தன் ரசிகர்கள் அனைவரையும் இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.
இதனைத் தொடர்ந்து இலியானாவின் பாய் ஃப்ரெண்ட் யார் அவர் திரைத்துறையைச் சேர்ந்தவரா என நெட்டிசன்கள் குழம்பி ஆர்வம் தாளாமல் கடந்த சில மாதங்களாக விவாதித்து வருகின்றனர்.
உருக்கமான பதிவு
இந்நிலையில், நடிகை இலியானா முதன்முறையாக தனது பாய்ஃப்ரெண்ட் உடனான ஃபோட்டோ ஒன்றைப் பகிர்ந்து உருக்கமாக பதிவிட்டுள்ளார்.
”கர்ப்பமாக இருப்பது ஒரு அழகான அழகான பாக்கியம்... இதை அனுபவிக்கும் அளவுக்கு நான் அதிர்ஷ்டசாலியாக இருப்பேன் என நான் நினைக்கவில்லை, உங்களுக்குள் வளரும் ஒரு உயிரை உணர்வது எவ்வளவு இனிமையானது என்பதை என்னால் விவரிக்க முடியவில்லை. பெரும்பாலான நாட்களில் நான் என் வயிறை பார்த்தைபடி கழிக்கிறேன்.
சில நாட்கள் விவரிக்க முடியாத அளவுக்கு கடினமானவையாக உள்ளன. நான் முயற்சி செய்கிறேன். சில நாள்கள் கண்ணீருடன் செல்கிறது. அதன் பிறகு குற்ற உணர்வு வருகிறது. நான் நன்றியுள்ளவளாக இருக்க வேண்டும், அற்பமான விஷயங்களுக்கு அழக்கூடாது.
நான் வலுவாக இருக்க வேண்டும்.
மேலும் நான் எப்படிப்பட்ட தாயாக இருப்பேன் என்று எனக்குத் தெரியாது. ஆனால் நான் இந்த சிறிய உயிரை மிகவும் நேசிக்கிறேன். இப்போதைக்கு அது போதும் என்று நினைக்கிறேன்” எனக் கூறியுள்ளார்.
மேலும் தன் பாய் ஃப்ரெண்ட் பற்றிக் குறிப்பிட்டு “நான் என்னிடமே அன்பாக நடந்து கொள்ள மறக்கும் நாட்களில், இந்த அழகான மனிதன் தான் உறுதுணையாக இருந்தார். நான் உறுதி இழக்கும்போது அவர் என்னை தாங்கிப் பிடித்து கண்ணீரைத் துடைத்தார். மேலும் என்னை சிரிக்க வைப்பதற்காக முட்டாள்தனமான நகைச்சுவைகளையும் செய்தார். இந்தத் தருணத்தில் எனக்கு எது தேவை என அவருக்குத் தெரியும், இனி எனக்கு எதுவும் கடினமாக இருக்கப்போவதில்லை” என காதல் பொங்க பதிவிட்டுள்ளார்.
இந்தப் புகைப்படத்தில் இவர்களது முகம் மங்கலாக தெரியும் நிலையில் மீண்டும் இலியானாவின் ரசிகர்கள் அவரது பாய் ஃப்ரெண்ட் இவரா, அவரா என கமெண்ட் செக்ஷனில் விவாதித்து வருகின்றனர். சென்ற வாரம் இதேபோல் இலியானா தன் நிச்சயதார்த்த மோதிரத்தைப் பகிர்ந்து ரசிகர்களை இதேபோல் விவாதத்தில் ஆழ்த்தினார். மேலும் தங்கள் டேட்டிங் இரவு குறித்தும் மகிழ்ச்சியுடன் பகிர்ந்திருந்தார்.
பிரபல நடிகை கத்ரீனா கைப்பின் சகோதரர் செபஸ்டியனை இலியானா காதலித்து வருவதாக தொடர்ந்து கிசுகிசுக்கள் எழுந்து வருகின்றன. ஆனால் இதுவரை இதனை இரு தரப்பினரும் உறுதி செய்யவில்லை.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)