Guru Sri Ganesan Passed Away: மேடையில் சரிந்து விழுந்து இறந்த பிரபல பரதநாட்டிய கலைஞர் - சோகத்தில் கலையுலகம்
மலேசிய குடிமகனும், புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞருமான ஸ்ரீ கணேசன் மரணமடைந்துள்ள சம்பவம் கலையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மலேசிய குடிமகனும், புகழ்பெற்ற பரதநாட்டிய கலைஞருமான ஸ்ரீ கணேசன் மரணமடைந்துள்ள சம்பவம் கலையுலகில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
60 வயதுடைய நடனக் கலைஞரான ஸ்ரீ கணேசன் மலேசிய பரதநாட்டிய நடன சங்கத்தின் தலைவராக பணியாற்றியதோடு மட்டுமல்லாமல் கோலாலம்பூரில் உள்ள ஸ்ரீ கணேசாலயாவின் தலைவராகவும் இருந்துள்ளார். இதனிடையே புவனேஸ்வரில் உள்ள கடந்த மூன்று நாட்களாக பஞ்சா கலா மண்டபத்தில் நடன நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.
வெள்ளிக்கிழமை நிறைவு விழா நடந்த நிலையில், நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது குத்துவிளக்கு ஏற்ற மேடைக்கு ஏறிய ஸ்ரீ கணேசன் திடீரென சரிந்து விழுந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மற்ற விருந்தினர்கள் மற்றும் நடன கலைஞர்கள் உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
ஸ்ரீ கணேசனை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். திடீர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துவிட்டதாக கூறப்படுகிறது. ஸ்ரீ கணேசனின் உடல் இன்று பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது.