![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Entertainment Headlines July 13: அஜித்தின் எவர்க்ரீன் சாதனை...வசூலைக் குவிக்கும் டாம் குரூஸ்...நானி கொடுத்த அப்டேட்... டாப் சினிமா செய்திகள்!
Entertainment Headlines Today July 13th: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாக காணலாம்.
![Entertainment Headlines July 13: அஜித்தின் எவர்க்ரீன் சாதனை...வசூலைக் குவிக்கும் டாம் குரூஸ்...நானி கொடுத்த அப்டேட்... டாப் சினிமா செய்திகள்! Entertainment Headlines Today July 13th Tamil Cinema News ajith mission impossible 7 nani Hi nanna vairamuthu ethirneechal Entertainment Headlines July 13: அஜித்தின் எவர்க்ரீன் சாதனை...வசூலைக் குவிக்கும் டாம் குரூஸ்...நானி கொடுத்த அப்டேட்... டாப் சினிமா செய்திகள்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/13/61b9995a6a815cd2aa64396270ed57dd1689248056127574_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நானி நடிக்கும் ஹாய் நன்னா படம்... கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு..
நானி நடிக்கும் 30வது படத்துக்கு ‘ஹாய் நான்னா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது. தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. தெலுங்கு படம் என்ற பொதுவாக மசாலா பாணியில் இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்து. ஆனால் நானி, மசாலா பாணி கதைகளை தவிர்த்து தொடர்ந்து நல்ல கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். மேலும் படிக்க
பாக்ஸ் ஆஃபிஸ் அதிருது... கலக்கும் டாம் குரூஸ்... ‘மிஷன் இம்பாசிபிள் 7’ முதல் நாள் இந்திய வசூல் இவ்வளவா!
மிஷன் இம்பாசிபிள் 7ஆம் பாகத்தின் முதல் நாள் இந்திய வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. டாம் குரூஸ் நடிப்பில் மிஷன் இம்பாசிபிள் 7ஆவது பாகமான டெட் ரெக்கானிங் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது. டாம் குரூஸ் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது அவர் நடிப்பில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக வந்து கொண்டிருக்கும் மிஷன் இம்பாசிபிள் சீரிஸ். மேலும் படிக்க
வைரமுத்து பிறந்தநாள்.. முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் வாழ்த்து.. சொன்னது என்ன தெரியுமா?
பாடலாசிரியர் வைரமுத்துவின் 70வது பிறந்தநாளையொட்டி, முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்தார். தமிழ் திரையுலகில் தனது எழுத்து திறமையால் இன்றளவும் தவிர்க்க முடியா ஆளுமையாக திகழும், பாடலாசிரியர் வைரமுத்து இன்று தனது 70வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையொட்டி அவருக்கு தமிழ் திரையுலகை சேர்ந்த இயக்குனர்கள், இசையமைப்பாளர்கள், நடிகர் மற்றும் நடிகைகள் மட்டுமின்றி, பல்வேறு துறைகளை சேர்ந்த நட்சத்திரங்களும் ரசிகர்களும் கூட வைரமுத்துவிற்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர். மேலும் படிக்க
'அதிகரிக்கும் மாணவர்கள் தற்கொலை’ .. அழுத்தமாக பேசியதா ‘பாபா பிளாக் ஷீப்’ படம்?.. முழு விமர்சனம் இதோ..!
அறிமுக இயக்குநர் ராஜ்மோகன் இயக்கத்தில் அபிராமி, ஆர்.ஜே.விக்னேஷ், நரேந்திர பிரசாத், அப்துல் அயாஸ், அம்மு அபிராமி, சேட்டை ஷெரீஃப், வினோதினி, போஸ் வெங்கட், சுப்பு பஞ்சு, ஜி.பி.முத்து உள்ளிட்ட ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள படம் ‘பாபா பிளாக் ஷீப்’. சுதர்சன் சீனிவாசன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார். மேலும் படிக்க
எகிறிய டி.ஆர்.பி! இனி 6 நாட்கள் இல்லை... 7 நாட்களும்...! - தனியார் தொலைக்காட்சியின் அதிரடி ப்ளான்!
தற்போது அதிகமாக டிவி சேனல்கள் ஒளிபரப்பு செய்யப்படுகின்றன. சீரியல்கள் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பு பெறுவதே இதற்கு காரணம். பொதுவாக தொலைக்காட்சிகளில் ஒவ்வொரு சீரியல்களுக்கும் கிடைக்கும் டிஆர்பி ரேட்டிங்கை வைத்து தான் அந்த தொலைக்காட்சி தொடர்கள் ரசிகர்கள் மத்தியில் எந்த அளவிற்கு கொண்டு சேர்ந்துள்ளது என்பதை கணிக்க முடியும். மேலும் படிக்க
வேறு எந்த ஹீரோவும் இத பண்ணல... யாரும் செய்திராத சாதனையை செய்த அஜித்.. பில்லா 2 ஃப்ளாஷ்பேக்!
2007 ஆம் ஆண்டு வெளியான பில்லா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு அதன் இரண்டாம் பாகம் வெளியானது. அஜித்துக்கு மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்த பில்லா படத்தைப் போல் இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியடையும் என எதிர்பார்க்கப் பட்டது. படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்றாலும் இந்தப் படத்திற்காக நடிகர் அஜித் எடுத்துக்கொண்ட சிரத்தை பாராட்டத்தக்கது. மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)