11 Years Of Billa 2: வேறு எந்த ஹீரோவும் இத பண்ணல... யாரும் செய்திராத சாதனையை செய்த அஜித்.. பில்லா 2 ஃப்ளாஷ்பேக்!
பில்லா 2 படத்தின் அஜித் குமார் செய்த இந்த ஸ்டண்டை இதுவரை எந்த தமிழ் நடிகரும் செய்ததில்லையாம்
2007 ஆம் ஆண்டு வெளியான பில்லா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 2012 ஆம் ஆண்டு அதன் இரண்டாம் பாகம் வெளியானது. அஜித்துக்கு மிகப்பெரிய அடையாளத்தைக் கொடுத்த பில்லா படத்தைப் போல் இந்தப் படமும் மிகப்பெரிய வெற்றியடையும் என எதிர்பார்க்கப் பட்டது. படம் எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை என்றாலும் இந்தப் படத்திற்காக நடிகர் அஜித் எடுத்துக்கொண்ட சிரத்தை பாராட்டத்தக்கது. இந்தப் படத்தில் அஜித் செய்த ஸ்டண்ட் காட்சிகள் இன்று வரை எந்த நடிகரும் தமிழ் சினிமாவில் செய்தது இல்லை.
ஸ்டண்ட் காட்சிகளில் அதிக சிரத்தை எடுத்துக்கொள்ளும் அஜித்
தனது படங்களில் ஸ்டண்ட் காட்சிகளுக்கு அஜித் கூடுதல் கவணம் எடுத்துக்கொள்பவர். வீரம் படத்தில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் ரயிலில் இருந்து தொங்கிகொண்டு சண்டை போடும் காட்சி அவரது கரீயரில் குறிப்பிடத்தகுந்த சாதனைகளில் ஒன்று. அதேபோல் பில்லா திரைப்படத்திலும் அப்படியான ஒரு சாதனையை செய்திருக்கிறார் அஜித். அது என்னவென்றால் படத்தின் இறுதிகாட்சி ஆகாயத்தில் பறக்கும் ஹெலிகாப்டரில் அமைந்திருக்கும்.
இந்தக் காட்சியில் டூப் இல்லாமல் தானே நடித்திருப்பார் அஜித். மேலும் ஹெலிகாப்டரில் இருந்து வில்லனை கீழே தள்ளிவிட்டு ஒரு கையில் கம்பியைப் பிடித்துக்கொண்டு கெத்தாக நிற்பார் அஜித். ஹாலிவுட்டில் டாம் க்ரூஸ் இதைவிட பெரிய ஸ்டண்ட் எல்லாம் செய்துவிட்டார் என்று தோன்றலாம். ஆனால் தமிழ் சினிமாவில் அல்லது தென் இந்திய சினிமாவில் இந்த ஸ்டண்ட் செய்திருப்பது நடிகர் அஜித் மட்டும்தான் . அத்தனை உயரத்தில் நிலையாக ஒரு கையை மட்டும் ஆதாரமாய் கொண்டு நிற்பது அத்தனை எளிதானது இல்லை.
#11YrsOfConquerorBILLA2
— Manobala Vijayabalan (@ManobalaV) July 13, 2023
Only Star in Kollywood to do Helicopter action sequence without body double.pic.twitter.com/xjR1Z0mUbF#AjithKumar
அஜித்தை புகழ்ந்த ஸ்டண்ட் மாஸ்டர்
பில்லா 2 படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரான ஸ்டீஃபன் ரிச்டர் அஜித் பற்றி பேசும் போது, “ நான் ஸ்டண்ட் மேனாக இருந்த காலத்தில் மிகவும் ஆபத்தான ஸ்டண்ட்களை செய்திருக்கிறேன் ஆனால் அஜித் ஒற்றைக் கையில் ஹெலிகாப்ட்ரில் நிற்கும் காட்சியைப் பார்த்து என் ரத்தமே உறைந்துவிட்டது’ என்று கூறினார்
படக்குழு
பில்லா 2 படத்தை இயக்கியவர் சக்ரி டோலெடி. இதில் அஜித் குமார், வித்யுத் ஜம்வால், பார்வதி ஓமனக்குட்டன், ப்ருனா அப்துல்லா, யோக் ஜபி முதலிய நடிகர்கள் நடித்துள்ளார்கள். யுவன் ஷங்கர் ராஜா படத்திற்கு இசையமைத்தார்.