![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Nani Next Movie:நானி நடிக்கும் ஹாய் நன்னா படம்... கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு..
நானி நடிக்கும் ஹாய் நன்னா படத்தின் வீடியோ கிளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது.
![Nani Next Movie:நானி நடிக்கும் ஹாய் நன்னா படம்... கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு.. Nani Mrunal Thakur film titled Hi Nanna Glimpse video promises beautiful tale of father daughter Nani30 Update Nani Next Movie:நானி நடிக்கும் ஹாய் நன்னா படம்... கிளிம்ப்ஸ் வீடியோவை வெளியிட்டுள்ளது படக்குழு..](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/07/13/0e0e691e83da24cbba758fa84ea2d6931689234679604571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நானி நடிக்கும் 30வது படத்துக்கு ‘ஹாய் நான்னா’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இதற்கான கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
தெலுங்குத் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நானி. தெலுங்கு படம் என்ற பொதுவாக மசாலா பாணியில் இருக்கும் என்பது ரசிகர்களின் கருத்து. ஆனால் நானி, மசாலா பாணி கதைகளை தவிர்த்து தொடர்ந்து நல்ல கதைக்களம் கொண்ட படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். அவர் நடிப்பில் வெளியான ‘ஜெர்ஸி’, ‘கேங் லீடர்’, ‘ஷ்யாம் சிங்கா ராய்’ உள்ளிட்ட படங்கள் பெரும் வரவேற்பை பெற்றவை.
நானி நடிக்கும் 30வது படம் குறித்த அறிவிப்பை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது. இந்த கிளிம்ஸ் வீடியோ படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. மேலும் இந்த வீடியோவில் ப்ளே ஆகும் பின்னனி இசை மனதை வருடுகிறது. ‘ஹாய் நான்னா’ என்று தலைப்பிடப்பட்டுள்ள இப்படத்தை ஷவுர்யுவ் இயக்குகிறார். மிருணாள் தாகூர் நாயகியாக நடிக்கும் இப்படத்தை வைரா எண்டர்டெய்ன்மெண்ட் தயாரிக்கிறது. இப்படத்திற்குஹிஷாம் அப்துல் வஹாப் இசையமைக்கிறார். தெலுங்கு, தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் இப்படம் இந்த ஆண்டு டிசம்பர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தந்தை-மகள் உறவை மையமாகக் கொண்ட நேர்மறையான குடும்பத் திரைப்படமாக இது இருக்கும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். அப்பா-மகள் பாசத்தை திரையில் சொல்ல மொழி ஒரு தடையல்ல என்பதால் அனைத்து மொழி ரசிகர்களையும் இப்படம் எளிதாக சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை மிருணாள் தாக்கூர் சீதா ராமம் படத்திற்கு பின் ஹாய் நன்னா படத்தில் நடிக்கின்றார். இப்படம் குறித்து பேசிய நடிகை மிருணாள் தாக்கூர் , ஹாய் நன்னா படத்தின் கதை, தான் படித்த மிகச்சிறந்த கதைகளில் ஒன்று என்று கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது
மேலும் படிக்க
தேனியில் பிறந்த தேன் நீ; தமிழை வஞ்சித்தால் தே(ள்)னீ; கருப்பு வைரத்திற்கு பிறந்த நாள்!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)