Mission Impossible 7: பாக்ஸ் ஆஃபிஸ் அதிருது... கலக்கும் டாம் குரூஸ்... ‘மிஷன் இம்பாசிபிள் 7’ முதல் நாள் இந்திய வசூல் இவ்வளவா!
பிற பாகங்களை விட அசாத்தியமான ஸ்டண்ட் காட்சிகளுடன் ஆக்ஷன் விருந்தாக இப்படம் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
மிஷன் இம்பாசிபிள் 7ஆம் பாகத்தின் முதல் நாள் இந்திய வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது.
டாம் குரூஸ் நடிப்பில் மிஷன் இம்பாசிபிள் 7ஆவது பாகமான டெட் ரெக்கானிங் நேற்று உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியானது.
டாம் குரூஸ் என்றாலே பலருக்கும் நினைவுக்கு வருவது அவர் நடிப்பில் சுமார் 25 ஆண்டுகளுக்கு மேலாக வெற்றிகரமாக வந்து கொண்டிருக்கும் மிஷன் இம்பாசிபிள் சீரிஸ். வெற்றி, தோல்விகளைக் கடந்து, ஆறு பாகங்களைக் கடந்தும் ரசிகர்கள் கொண்டாடி மகிழும் இந்த சீரிஸின் ஏழாவது பாகம் நேற்று வெளியானது.
வழக்கம்போல் IMF (Impossible Mission Force) ஐச் சேர்ந்த ஈத்தன் ஹண்ட் எனும் உளவாளியாக டாம் குரூஸ் இப்படத்தில் தோன்றியுள்ள நிலையில், பிற பாகங்களை விட அதிரடி ஸ்டண்ட் காட்சிகளுடன் ஆக்ஷன் விருந்தாக இப்படம் அமைந்துள்ளதாக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
ஹாலிவுட்டின் மிகப்பெரும் ஆக்ஷன் ஹீரோவாக வலம் வரும் டாம் குரூஸின் இந்தப் படம் உலகம் முழுவதும் வசூல் வேட்டை நடத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இந்தியாவில் தமிழ், தெலுங்கு, ஆங்கிலம், இந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மிஷன் இம்பாசிபிள் படத்தின் முதல் நாள் இந்திய வசூல் நிலவரம் வெளியாகியுள்ளது. அதன்படி, மிஷன் இம்பாசிபிள் திரைப்படம் இந்தியாவில்ல் முதல் நாளில் மட்டும் 12. 5 கோடிகள் வசூலித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்தியாவில் இப்படம் 100 கோடி பாக்ஸ் ஆஃபிஸ் படங்களில் வெகு சில நாள்களில் இணையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
*#MissionImpossible–DeadReckoningPartOne India Net Collection
— Sacnilk Entertainment (@SacnilkEntmt) July 13, 2023
Day 1: 12.3 Cr
Total: 12.3 Cr
India Gross: 14.5 Cr
Details: https://t.co/Sk3dRop8Yp*
க்ரிஸ்ர்டோஃபர் மெக்குரி இயக்கியுள்ள இப்படத்தில் டாம் குரூஸ் உடன் ஹெய்லி அட்வெல், போம் க்ளெமண்டிஃப், ரெபெக்கா பெர்குசன் உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முன்னதாக இப்படத்தின் ஆக்ஷன் காட்சிகளின் மேக்கிங் வீடியோக்கள் வெளியாகி ரசிகர்களை சில்லிடவைத்தன.
61 வயதில் டாம் குரூஸ் டூப் இல்லாமல் ஓடும் ரயிலில் சண்டைபோடுவது, மலை உச்சியில் பைக்கில் சென்று பாராசூட் உடன் குதிப்பது போன்ற காட்சிகள் நெட்டிசன்களை வாயைப் பிளக்க வைத்தன. தக்க பாதுகாப்பு அம்சங்களுடன் நூற்றுக்கணக்கான முறை ரிகர்சல்கள் மேற்கொள்ளப்பட்டு இந்தக் காட்சி படமாக்கப்ப்பட்டுள்ளது.
தன் வாழ்நாளில் தான் மேற்கொண்ட அதி பயங்கரமான ஸ்டண்ட் காட்சி இதுதான் என டாம் குரூஸ் தெரிவித்திருந்தார். இந்த வீடியோக்கள் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில் தற்போது படமும் வெளியாகி அப்ளாஸ் அள்ளி வருகிறது.