Entertainment Headlines Aug 17: ரூ.375 கோடி வசூல் செய்த ஜெயிலர்.. சொகுசு கார் வாங்கிய லோகேஷ்.. இன்றைய சினிமா செய்திகள்..!
Entertainment Headlines Aug 17: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாக காணலாம்.
- ரூ.1.70 கோடியில் சொகுசு கார் வாங்கிய லோகேஷ் கனகராஜ்.. இணையத்தில் வைரலாகும் போட்டோ..!
இயக்குநர் லோகேஷ் கனகராஜ், புதிதாக ஒன்றரை கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். 2017ம் ஆண்டு வெளிவந்த மாநகரம் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான லோகேஷ், அடுத்ததாக கார்த்தியுடன் கைதி, விஜய்யுடன் மாஸ்டர், கமல்ஹாசனுடன் விக்ரம் ஆகிய படங்களில் இணைந்திருந்தார். இதன்மூலம் தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநராக மாறினார். தற்போது அவர் விஜய் நடித்துள்ள லியோ படத்தை இயக்கியுள்ளார். இப்படம் அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்க
- பிரம்மாண்டங்களின் காதலன்...30 ஆண்டு பயணம்....இயக்குநர் ஷங்கர் பிறந்தநாள் இன்று
தமிழ் சினிமாவில் 30 ஆண்டுகளாக அசைக்க முடியாத இயக்குநராக இருந்து வரும் இயக்குநர் ஷங்கர் இன்று தனது 60 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடுகிறார். ஜெnடில்மேன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக அறிமுகமானார் ஷங்கர். தொடர்ந்து காதலன், ஜீன்ஸ், முதல்வன், பாய்ஸ், அந்நியன், சிவாஜி, எந்திரன், நண்பன், ஐ, 2.0 என பல படங்களை இயக்கி தமிழ் சினிமாவின் பிரமாண்ட இயக்குநர் என்றழைக்கப்படுகிறார். ஷங்கருக்கு திரையிலகினர், ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.மேலும் படிக்க
- ‘தெறிக்கவிடும் வசூல் வேட்டை’ .. ஜெயிலர் ஒரு வார கலெக்ஷன் எவ்வளவு? .. அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!
ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் படம் ஒரு வாரத்தில் எவ்வளவு கோடி வசூல் செய்துள்ளது என்பதை சன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. படம் வெளியான நாள் முதல் ஹவுஸ்ஃபுல் காட்சிகளாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் சுமார் 3000க்கும் மேற்பட்ட ஸ்க்ரீன்களில் ஜெயிலர் படம் ஓடிக்கொண்டிருக்கிறது. ஒரு வாரத்தில் இப்படம் ரூ.375.40 அதிகமான கோடி வசூலை ஈட்டியுள்ளதாக ன் பிக்சர்ஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் படிக்க
- 50-வது நாளாக திரையரங்கில் வெற்றிகரமாக ஓடும் மாமன்னன்... மாரி செல்வராஜ் போட்ட ட்வீட்
மாமன்னன் திரைப்படம் வெளியாகி 50வது நாளாக படம் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கின்ற நிலையில் மாரி செல்வராஜ் இது குறித்து ட்வீட் செய்துள்ளார். தனது டிவிட்டர் பதிவில், அந்த எல்லைகள் எதுவாக இருந்தாலும் உடைத்தோம். 50-வது நாளை கொண்டாடுகிறோம் என பதிவிட்டுள்ளார். வடிவேலு, உதயநிதி ஸ்டாலின், ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டோரின் நடிப்பில் உருவான திரைப்படம் மாமன்னன் படம் ரசிகர்களிடம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
- ஜார்க்கண்ட் ஆளுநரை சந்தித்த ரஜினிகாந்த்.. புகைப்படங்கள் இணையத்தில் வைரல்
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் சமீபத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது. இத்திரைப்படம் வெளியாவதற்கு முன்பே ரஜினிகாந்த் இமயமலைக்கு புறப்பட்டு சென்றார். நேற்று ஆன்மிக பயணத்தை முடித்துக் கொண்டு திரும்பிய ரஜினிகாந்த், இந்நிலையில் ஜார்க்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை நடிகர் ரஜினிகாந்த் சந்தித்துள்ளார்.மேலும் படிக்க