மேலும் அறிய

Entertainment Headlines Aug 12: ஜெயிலர் வசூல் தாண்டவம்.. அசோக் செல்வனுக்கு டும் டும்.. சோகத்தில் ரஹ்மான் ரசிகர்கள்... டாப் சினிமா செய்திகள்!

Entertainment Headlines Aug 12: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே விவரமாக காணலாம்.

பதறவைக்கும் நாங்குநேரி சம்பவம்.. சாதி வெறி மண்ணோடு மண்ணாகட்டும்.. திரைத்துறையினர் கண்டனம்..

நாங்குநேரி சம்பவம் தொடர்பாக அரசியல் கட்சியின், திரைத்துறையினர் ஆகியோர் தங்கள் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர். அந்த வகையில் தெருக்குரல் அறிவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது.. மேலும் படிக்க

டாம் க்ரூஸை பின்னுக்கு தள்ளும் கேல் கெடாட்.. இரு நடிகைகள் அட்டகாசம் செய்யும் ஹார்ட் ஆஃப் ஸ்டோன் விமர்சனம்

கேல் கெடாட், ஆலியா பட் இணைந்து நடித்திருக்கும் ஹார்ட் ஆஃப் ஸ்டோன் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகி இருக்கிறது. உலகத்தின் இரண்டு அழகான பெண்கள் ஒரே ஆக்‌ஷன் திரைப்படத்தில் நடித்திருந்து அதை நாம் பார்த்து விமர்சனம் சொல்லாமல் இருந்தால் எப்படி. இதோ அந்த விமர்சனம். மிஷன் இம்பாசிபிள் படத்தின் தயாரிப்பு குழு மற்றும் நெட்ஃப்ளிக்ஸ் இணைந்து வழங்கியுள்ள படம் ஹார்ட் ஆஃப் ஸ்டோன் (heart of stone). கால் கடோட், ஆலியா பட்  ஜேமீ டோர்னன் ஆகியவர்கள் இந்த இப்படத்தில்  நடித்துள்ளார்கள். மேலும் படிக்க

இசைப்புயல் வர்றதுக்கு முன்னாடி மழை வந்துடுச்சு.. மழையால் தடைபட்ட ஏ.ஆர் ரஹ்மான் கான்செர்ட்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சினிமாவில் 30 ஆண்டு நிறைவு செய்வதை முன்னிட்டு சென்னையில் லைவ் கான்செர்ட் இன்று நடைபெற இருந்தது. ”மறக்குமா நெஞ்சம்” என்கிற பெயரில் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த கான்செர்ட்டில் ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்துகொள்ள இருந்த நிலையில்  கனமழை காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் படிக்க

சாதி பெருமை உடை.. சாதி அடையாள கயிறு.. சாதியை ஒழிக்க ஒன்றிணைவோம்.. இயக்குநர் பா.ரஞ்சித் ஆவேசம்

திருநெல்வேலியை அடுத்த நாங்குநேரியில் பிளஸ் 2 மாணவர் மற்றும் அவரது தங்கையை சாதிவெறி காரணமாக அரிவாளால் வெட்டிய சம்பவம் கடந்த இரண்டு நாட்களாக தமிழ்நாட்டையே உலுக்கி வருகிறது. இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பிளஸ் 2 மாணவர்கள் உள்பட 7 பேரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் படிக்க

பாக்ஸ் ஆஃபிஸ் மன்னன் என்பதை நிரூபித்த ரஜினிகாந்த்... 2 நாள்களில் ஜெயிலர் வசூல் இத்தனை கோடிகளா!

ஜெயிலர் படம் வெளியான மூன்றே நாளில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் உலகம் முழுவதும் ரூ.150 கோடியை நெருங்கி உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. நெல்சல் இயக்கத்தில், சன்பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி நடித்திருக்கும் படம் ஜெயிலர். இதில் ரஜினியைத் தவிர ரம்யா கிருஷ்ணன், மோகன்லால், சிவராஜ் குமார், மிர்னா மேனன், தமன்னா, விநாயக், யோகிபாபு, ஜாக்கி ஷெராப், சுனில் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மேலும் படிக்க

”கொடுக்கலன்னா எடுத்துக்கணும் அதான் பவர்..” : கோமாளியின் மொழியில் அதிகாரத்தை விமர்சித்த ஜோக்கர்!

‘குக்கூ’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து ராஜூ முருகன் இயக்கிய திரைப்படம் ‘ஜோக்கர்’. குரு சோமசுந்தரம், ரம்யா பாண்டியன், பவா செல்லத்துரை உள்ளிட்டோர் நடித்த இப்படத்துக்கு, ஷான் ரோல்டன் மனம் உருகும் பாடல்களைக் கொடுத்திருந்தார். தமிழ் சினிமாவில் அரசியல் பேசும் திரைப்படங்கள் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றன. மேலும் படிக்க

கிட்டா வரம்... எஞ்சி உள்ள நாள்கள் என் மக்களுக்காக... 64 ஆண்டு கால திரைப்பயணம் பற்றி கமல்ஹாசன் நெகிழ்ச்சி!

குழந்தை நட்சத்திரமாக 1960ஆம் ஆண்டு களத்தூர் சினிமா படத்தின் மூலம் அறிமுகமாகி, சினிமா தாண்டி படிப்படியாக சினிமாவில் அனைத்தையும் கற்றுத்தேர்ந்து முன்னணி நாயகனாக உருவெடுத்து, இன்று இந்திய சினிமாவில் இத்தனை ஆண்டுகள் அனுபவம் பெற்ற மாபெரும் உச்ச நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் நடிகர் கமல்ஹாசன். மேலும் படிக்க

கல்யாண தேதி சொல்லிவிட்டார் போர் தொழில் அசோக் செல்வன்... யாரை, எங்கு, எப்போது தெரியுமா...

நடிகர் அசோக் செல்வன் பிரபல நடிகர் அருண் பாண்டியனின் மகளை கரம்பிடிக்க இருப்பதாகத் தகவல்கள் வெளியான நிலையில், அசோக் செல்வனின் நெருங்கிய வட்டாரத்தினர் இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். போர் தொழில் படத்தின் வெற்றியின் மூலம் தமிழ் சினிமாவில் மாஸ் நடிகராக உருவெடுத்த நடிகர் அசோக் செல்வன், தற்போது பேச்சுலர் வாழ்க்கையில் இருந்து திருமண வாழ்க்கைக்கு அப்டேட்டாக இருக்கிறார். மேலும் படிக்க

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஓயிட் வாஷ்...
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஓயிட் வாஷ்...
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Christmas Celebration | ’’ஐயோ..ஐயோ..கதறும் பெண்கள்’’தவெக விழாவில் பரபரப்பு | Vijay | Bussy AnandTN Local Body Election | உள்ளாட்சி தேர்தல் கேம் ஓவர்! ஸ்டாலினின் பழைய ப்ளான் குமுறலில் கவுன்சிலர்கள்Surmount Logistics Rewards | ஊழியர்களுக்கு பைக், கார் பரிசுகெத்து காட்டும் நிறுவனம்  அட நம்ம சென்னையில பா!Chennai Food Festival : ’’பீப் ஏன் இடம்பெறல?’’பொங்கி எழுந்த நீலம்! OFF செய்த அரசு?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
Erode East : “காங்கிரஸ்க்கு பதில் இந்த முறை திமுக” ஈரோடு கிழக்கில் போட்டி..?
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
சம்பவம் இருக்கு! 2025ல் விஜய்யின் மாஸ்டர் ப்ளான் - தளபதியின் வியூகம் இதுதான்!
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” -  ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
Donald Trump: முதல் நாள் முதல் கையெழுத்து ”திருநங்கைகளுக்கு உரிமைகள் இல்லை” - ட்ரம்ப் அதிரடி அறிவிப்பு
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஓயிட் வாஷ்...
SA vs PAK : பவுமா பாய்ஸ்சை பந்தாடிய பாகிஸ்தான்! முதல் முறையாக தென்னாப்பிரிக்கா ஓயிட் வாஷ்...
Breaking News LIVE: திமுக அரசு மீது விசிக-வுக்கு எந்த அதிருப்தியும் இல்லை  - திருமாவளவன்
Breaking News LIVE: திமுக அரசு மீது விசிக-வுக்கு எந்த அதிருப்தியும் இல்லை - திருமாவளவன்
"2025ல முடியாதுங்க" குடியரசுத் தின அணிவகுப்பில் தமிழக அரசு ஊர்தி ஏன் பங்கேற்காது?
"பிராமணர்களே மற்றவர்களுக்கு உரிமைகளைப் பெற்றுத் தந்தனர்" புகழ்ந்து தள்ளிய தி.மு.க. எம்.எல்.ஏ.
Year Ender 2024: டேட்டிங் தொடங்கி மோடியின் டீப் ஃபேக், ”செத்துப்போ” சாபம் வரை - 2024ல் AI செய்த 5 நூதன சம்பவங்கள்
Year Ender 2024: டேட்டிங் தொடங்கி மோடியின் டீப் ஃபேக், ”செத்துப்போ” சாபம் வரை - 2024ல் AI செய்த 5 நூதன சம்பவங்கள்
Embed widget