Kamal Haasan: கிட்டா வரம்... எஞ்சி உள்ள நாள்கள் என் மக்களுக்காக... 64 ஆண்டு கால திரைப்பயணம் பற்றி கமல்ஹாசன் நெகிழ்ச்சி!
“என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம்" - கமல்
குழந்தை நட்சத்திரமாக 1960ஆம் ஆண்டு களத்தூர் சினிமா படத்தின் மூலம் அறிமுகமாகி, சினிமா தாண்டி படிப்படியாக சினிமாவில் அனைத்தையும் கற்றுத்தேர்ந்து முன்னணி நாயகனாக உருவெடுத்து, இன்று இந்திய சினிமாவில் இத்தனை ஆண்டுகள் அனுபவம் பெற்ற மாபெரும் உச்ச நட்சத்திரமாக உருவெடுத்துள்ளார் நடிகர் கமல்ஹாசன்.
இந்நிலையில் நடிகர் கமல்ஹாசனின் இந்த ஒப்பில்லாத திரைப்பயணத்தைக் கொண்டாடும் வகையில், சினிமா ரசிகர்கள் #64YearsOfKamilsm எனும் ஹாஷ்டேகை ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.
இந்நிலையில் தன் 64 ஆண்டுகால திரைவாழ்வு பற்றியும் தன் ரசிகர்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் நடிகர் கமல்ஹாசன் மனம் நெகிழ்ந்து பதிவிட்டுள்ளார்.
“64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம். வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள்ள நாட்கள் என் மக்களுக்காக. உங்கள் நான்” எனப் பதிவிட்டுள்ளார்.
64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம். வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள நாட்கள் என் மக்களுக்காக.…
— Kamal Haasan (@ikamalhaasan) August 12, 2023