Entertainment Headlines April 27: சமந்தாவுக்கு கோயில்.. விஜய்யை சந்தித்த விஷால்.. இன்றைய முக்கிய சினிமா செய்திகள் இதோ..!
Entertainment Headlines: சினிமாவில் நடந்த மிக முக்கியமான நிகழ்வுகளை ஏபிபி நாடுவின் பொழுதுபோக்கு தலைப்புச் செய்திகள் காணலாம்.
-
மார்க் ஆண்டனி டீசரை வெளியிடுவது யார்? விஜய்க்காக ஸ்கிரிப்ட் ரெடி செய்த விஷால்..!
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவரான நடிகர் விஷால் நடிப்பில் வெளியாக தயாராக இருக்கும் திரைப்படம் 'மார்க் ஆண்டனி'. ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கும் இப்படத்தில் வில்லனாக எஸ்.ஜே. சூர்யா நடிக்க ஹீரோயினாக நடிக்கிறார் ரித்து வர்மா. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மார்க் ஆண்டனி படத்தின் டீசர் இன்று மாலை 6.30 மணிக்கு வெளியாக உள்ளது. இதனை முன்னிட்டு நடிகர் விஷால், மார்க் ஆண்டனி படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர், நிர்வாக தயாரிப்பாளர் மற்றும் ஒளிப்பதிவாளர் நடிகர் விஜய்யை நேரில் சந்தித்து படத்தின் டீசரை காண்பித்து விட்டனர். மேலும் படிக்க
- 80களில் குஷ்பு.. 2கே வுக்கு சமந்தா... கோயில் கட்டி கோலாகலமாக கொண்டாடவுள்ள ரசிகர்கள்! எங்கு தெரியுமா?
ஆந்திரப் பிரதேசத்தில் நடிகை சமந்தாவுக்கு கோயில் கட்டப்பட்டுள்ள நிலையில், இந்தக் கோயிலின் திறப்பு விழா நாளை (ஏப்.28) நடைபெறுகிறது. ஆந்திரப் பிரதேசம், குண்டூர் அருகே உள்ள பாப்ட்லா மாவட்டம், அலபாடு கிராமத்தைச் சேர்ந்த தெனாலி எனும் ரசிகர், சமந்தாவுக்கு கோயில் கட்டியுள்ளார். நாளை சமந்தா தன் பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில் இந்த சம்பவம் ரசிகர்களிடையே மகிழ்ச்சி பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- திரையரங்குகளில் வெளியாகி ஒரே மாதத்தில் ஓடிடியில் வெளியான ’பத்து தல’
நடிகர் சிம்பு, கௌதம் கார்த்திக், பிரியா பவானி சங்கர் ஆகியோர் நடித்த பத்து தல திரைப்படம் ஓடிடியில் வெளியானது.சில்லுனு ஒரு காதல், நெடுஞ்சாலை படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கத்தில், நடிகர் சிம்பு நடித்த 'பத்து தல' திரைப்படம் கடந்த மார்ச் 30ஆம் தேதி வெளியானது. ஸ்டுடியோ க்ரீன் ஞானவேல் ராஜா இயக்கத்தில் வெளியான பத்து தல திரைப்படம், இயக்குநர் வெற்றிமாறனின் 'விடுதலை'படத்துடன் நேரடியாக மோதியது குறிப்பிடத்தக்கது. மேலும் படிக்க
- கமலைத் தொடர்ந்து ரஜினியுடன் இணையும் சூர்யா? தலைவர் 170க்காக பேச்சுவார்த்தை நடத்தும் டி.ஜே.ஞானவேல்!
நடிகர் ரஜினிகாந்தை வைத்து நெல்சன் திலீப்குமார் இயக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், ரஜினிகாந்த், அடுத்ததாக 'ஜெய் பீம்’ இயக்குநர் டி.ஜே. ஞானவேலுடன் இணையவுள்ளார். இந்த படத்தில் இயக்குநர் டி.ஜே.ஞானவேல் நடிகர் சூர்யாவை நடிக்க வைக்க முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க
- அம்மாடி.. இவ்ளோவா.. தங்கைக்கு வீடு பரிசளித்த ஆலியா பட் : எத்தனை கோடி தெரியுமா?
பாலிவுட்டின் பிரபல நடிகர் ரன்பீர் கபூரை சென்ற ஆண்டு மத்தியில் திருமணம் செய்து கொண்ட நடிகை அலியா பட், ராஹா எனும் பெண் குழந்தைக்கு தாயானார். தொடர்ந்து குழந்தைப் பேறுக்கு பின் மீண்டும் ஃபிட்டாகி, தற்போது நடிப்பு, தயாரிப்பு, பிஸ்னஸ் என அலியா மீண்டும் பிஸியாக இயங்கி வருகிறார். இந்நிலையில் தனது சகோதரி ஷாஹின் பட்டுக்கு அவர் மும்பை பாந்த்ரா பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய அப்பார்ட்மெண்ட்களை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும் படிக்க