SBI Clerk Recruitment: மிஸ் பண்ணிடாதீங்க; எஸ்பிஐ வங்கி வேலை; 13,735 பணியிடங்களுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
SBI Clerk Recruitment 2024: தேர்வர்கள் ஜனவரி 1ஆம் தேதி வரை எஸ்பிஐ கிளர்க் பணிகளுக்கு, விண்ணப்பிக்கலாம். அதேநேரத்தில் ஜனவரி 7 வரை விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம்.

இந்திய ஸ்டேட் வங்கியில் கிளர்க் பணியிடங்களுக்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடங்கியுள்ளது. இதற்குத் தேர்வர்கள் ஜனவரி 1ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எஸ்பிஐ எனப்படும் இந்திய ஸ்டேட் வங்கியில் கிளர்க் பணி இடங்களுக்கான விண்ணப்பப் பதிவு இன்று (டிசம்பர் 17) தொடங்கியுள்ளது. குறிப்பாக, Junior Associates (வாடிக்கையாளர் ஆதரவு மற்றும் விற்பனை) பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
தேர்வர்கள் ஜனவரி 1ஆம் தேதி வரை இந்தப் பணிகளுக்கு, விண்ணப்பிக்கலாம். அதேநேரத்தில் ஜனவரி 7 வரை விண்ணப்பங்களில் திருத்தங்களை மேற்கொள்ளலாம். அன்று வரை விண்ணப்பக் கட்டணத்தைச் செலுத்தலாம்.
தேர்வு எப்போது?
முதல்நிலைத் தேர்வு அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் நடைபெற உள்ளது. அதில் தேர்வு செய்யப்படுவோருக்கான முதன்மைத் தேர்வு 2025ஆம் ஆண்டு மார்ச் அல்லது ஏப்ரல் மாதங்களில் நடைபெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித் தகுதி என்ன?
- அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் எந்தத் துறையில் வேண்டுமானாலும் பட்டம் பெற்றிருக்கலாம்.
- இறுதி ஆண்டு மாணவர்களும் தற்காலிமாக விண்ணப்பிக்கலாம். எனினும் டிசம்பர் 31 அன்று, பட்டமளிப்பு சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
வயது வரம்பு
ஏப்ரல் 1, 2024 அன்று 20 முதல் 28 வயது வரையில் இருக்க வேண்டும். எனினும் எஸ்சி/ எஸ்டி/ ஓபிசி/ மாற்றுத் திறனாளிகள், பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினருக்கு வயது வரம்பில் குறிப்பிட்ட அளவில் தளர்வுகள் அளிக்கப்படும்.
ஊதியம் எவ்வளவு?
ரூ.26,730 முதல் ஊதியம் அளிக்கப்படும்.
விண்ணப்பக் கட்டணம் எவ்வளவு? (Application Fee)
பொதுப் பிரிவினர்/ ஓபிசி மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய பிரிவினர் 750 ரூபாய் விண்ணப்பக் கட்டணம் செலுத்த வேண்டும். எனினும் எஸ்சி/ எஸ்டி/ முன்னாள் ராணுவத்தினர்/ மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிப்பது எப்படி?
- தேர்வர்கள் https://sbi.co.in/ என்ற இணைய முகவரியைத் தேர்வு செய்ய வேண்டும்.
- அதில், careers என்பதைத் தெரிவு செய்யவும்.
- தொடர்ந்து https://sbi.co.in/web/careers#lattest என்ற இணைப்பை க்ளிக் செய்யவும்.
- அல்லது நேரடியாக https://ibpsonline.ibps.in/sbidrjadec24/ என்ற இணைப்பை க்ளிக் செய்தும் விண்ணப்பிக்கலாம்.
- போதிய விவரங்களை உள்ளிட்டு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.
கிளர்க் வேலைவாய்ப்பு குறித்த முழு விவரங்களைப் பெற https://sbi.co.in/documents/77530/43947057/16122024_JA+2024+-Detailed+Advt.pdf/6b16e166-78df-2cc9-36a0-3680682d6434?t=1734354989415 என்ற அறிவிக்கையை க்ளிக் செய்தும் காணலாம்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

