மேலும் அறிய

IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?

ஐஐடி சென்னை, ‘கலாச்சாரத் துறையில் சிறந்து விளங்குவோருக்கான மாணவர் சேர்க்கை’யை (Culture Excellence Admission) ஐஐடி-க்களிலேயே முதன்முறையாக அறிமுகப்படுத்த உள்ளது.

நாட்டில் உள்ள ஐஐடி-க்களில் முதன்முறையாக ‘நுண்கலை மற்றும் கலாச்சாரத் துறையில் சிறந்து விளங்குவோருக்கான’ (Fine Arts and Culture Excellence – FACE) மாணவர் சேர்க்கையை 2025-26 கல்வியாண்டு முதல் இளங்கலை பட்டப்படிப்பில் அறிமுகப்படுத்துகிறது. நுண்கலை மற்றும் கலாச்சாரத்தில் சிறந்து விளங்கும் மாணவ-மாணவிகளுக்கு வெகுமதி அளித்து அவர்களை ஊக்குவிப்பதுதான் ஃபேஸ் (FACE) மாணவர் சேர்க்கையின் நோக்கமாகும்.

எத்தனை இடங்கள்?

 2025-26 கல்வியாண்டு முதல், பி.டெக், மற்றும் பிஎஸ் பாடத்திட்டங்களில் ஒவ்வொரு பாடத்திட்டத்திற்கும் தலா 2 இடங்கள் வீதம் ஒதுக்கீடு செய்யப்படும். இதில் மாணவிகளுக்கு ஒரு இடமும், இரு பாலினருக்கும் பொதுவாக மற்றொரு இடமும் ஒதுக்கப்படும் என்று ஐஐடி சென்னை தெரிவித்துள்ளது.

‘ஃபேஸ்’ மாணவர் சேர்க்கைக்காக, ஐஐடி சென்னையில் உள்ள ஒவ்வொரு துறையின் இளங்கலைப் பட்டப் படிப்பிலும் தலா இரண்டு இடங்கள் கூடுதலாக உருவாக்கப்படும். இதில் இந்திய நாட்டினர் மற்றும் ஜேஇஇ (அட்வான்ஸ்ட்) 2025 விண்ணப்பப் பதிவின்போது இந்தியக் குடிமகன்களுக்கு நிகராகக் கருதப்படும் வெளிநாடுவாழ் இந்தியர்/ இந்திய வம்சாவளி விண்ணப்பதாரர்கள் [Overseas Citizen of India/ Person of Indian Origin (OCI/PIO)] ‘ஃபேஸ்’ மாணவர் சேர்க்கைக்கு தகுதி பெறுவார்கள்.

விண்ணப்பிப்பதற்கான தகுதி என்ன?

  • விண்ணப்பதாரர் இந்தியக் குடிமகனாக இருக்க வேண்டும்.
  • விண்ணப்பதாரர் ஜேஇஇ (அட்வான்ஸ்ட்) 2025-க்குத் தகுதி பெற்றிருக்க வேண்டும். 2025 ஜேஇ (அட்வான்ஸ்ட்) பொதுவான தரவரிசைப் பட்டியலில் (Common Rank List – CRL) அல்லது பிரிவு வாரியான தரவரிசைப் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும். தரவரிசைப் பட்டியலில் உள்ள நிலை, தரவரிசைப் பட்டியல்கள் தயாரிக்கப்படும் எந்தப் பிரிவிலும் இருக்கலாம். இதன் மூலம் இடஒதுக்கீட்டுப் பயன்கள் பாதிக்கப்படாமலும், அதே நேரத்தில் கல்வித்தேவை நீர்த்துப் போகாமலும் இருப்பது உறுதி செய்யப்படும்.
  • விண்ணப்பதாரர் ஐஐடி-க்களுக்கான தகுதி அளவுகோலின் அடிப்படையில் பன்னிரண்டாம் வகுப்பில் தேவையான குறைந்தபட்ச மதிப்பெண்களைப் பெற்றிருத்தல் அவசியம்.
  • விண்ணப்பதாரர்கள் .நுண்கலை மற்றும் கலாச்சார செயல்பாடுகளில் சிறந்து விளங்கும் வகையில் பின்வருவனவற்றில் ஏதேனும் ஒன்றில் அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும்.


IIT Madras: ஐஐடி வரலாற்றில் முதல்முறை: கலை, கலாச்சாரத் துறை மாணவர்களுக்கு ஐஐடி சென்னையில் சேர்க்கை!- விண்ணப்பிப்பது எப்படி?

  • அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள வகையின்படி ஒவ்வொரு வேட்பாளருக்கும் அவர்களின் நுண்கலை மற்றும் கலாச்சார சிறப்பின் அடிப்படையில் ஒரு மதிப்பெண் ஒதுக்கப்படும்.
  • பல்வேறு நுண்கலை மற்றும் கலாச்சார நிகழ்வுகள்/ விருதுகள்/ கல்வி உதவித்தொகை ஆகியவற்றில் விண்ணப்பதாரர்களின் செயல்திறன் அடிப்படையில் அவர்கள் பெற்ற மொத்த மதிப்பெண்களின் அடிப்படையில் பிரத்யேக ‘ஃபேஸ்’ தரவரிசைப் பட்டியல் (FACE Ranka List -FRL) தயாரிக்கப்படும்.

தொலைபேசி எண்: 044 22578220

 

கூடுதல் தகவல்களுக்கு - https://jeeadv.iitm.ac.in/face

About the author மாய நிலா

Ramani Prabha Devi writes news under the pseudonym of Maaya Nila. An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.
Read More

தலைப்பு செய்திகள்

NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!
NEET UG 2026: நீட் தேர்வு கலந்தாய்வு எப்போது? தேதிகள், விண்ணப்பிக்கும் முறை, இட ஒதுக்கீடு- இதோ விவரம்!
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
ஃபிஃபா உலகக்கோப்பை இறுதி: பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை- வெளியான அதிரடி அறிவிப்பு!
"முதலில் எங்களை நிரந்தரமாக்குங்கள், அப்புறம் TRB தேர்வு நடத்துங்கள்!" - முதல்வர் விஜய்யின் ஒற்றைப் பேனா முனையில் காத்திருக்கும் எதிர்காலம்!
மீண்டும் மீண்டுமா? திருக்குறளை பாதியில் மறந்த அமைச்சர் விஸ்வநாதன்- பரபரப்பு வீடியோ
மீண்டும் மீண்டுமா? திருக்குறளை பாதியில் மறந்த அமைச்சர் விஸ்வநாதன்- பரபரப்பு வீடியோ

வீடியோ

காங்., கவுன்சிலர் புடவையை இழுத்த திமுக கவுன்சிலர்கள்! வெளியான பகீர் வீடியோ!
மீண்டும் DELIMITATION மசோதா திமுக-வை நாடிய பாஜக? ஸ்டாலின் அவசர ஆலோசனை!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK MLA: காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
காலையிலேயே திமுக எம்.எல்.ஏவை தூக்கிய போலீசார் - கைதுக்கான காரணம் என்ன? தூத்துக்குடியில் பரபரப்பு
Monsoon Session: மழைக்கால கூட்டத்தொடர்..! எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும் முக்கிய பிரச்னைகள்? BJP-க்கு செக்?
மழைக்கால கூட்டத்தொடர்..! எதிர்க்கட்சிகள் கையிலெடுக்கும் முக்கிய பிரச்னைகள்? BJP-க்கு செக்?
DMK MLA Markandeyan : திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசு.! தக்க பாடம் புகட்டப்படும்- கனிமொழி
திமுகவினர் மீது காவல்துறையை ஏவி அடக்கிடப் பார்க்கும் தவெக அரசு.! தக்க பாடம் புகட்டப்படும்- கனிமொழி
Parliament Monsoon Session: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. மத்திய அரசு போடும் திட்டம்.. திமுக நிலைப்பாடு என்ன?..
Parliament Monsoon Session: நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்.. மத்திய அரசு போடும் திட்டம்.. திமுக நிலைப்பாடு என்ன?..
Rohit Sharma: லார்ட்ஸில் சதமடித்து சரித்தரம் படைத்த ரோகித் சர்மா..! ஓய்வு குறித்து விளக்கம் சொன்ன கேப்டன் கில்
லார்ட்ஸில் சதமடித்து சரித்தரம் படைத்த ரோகித் சர்மா..! ஓய்வு குறித்து விளக்கம் சொன்ன கேப்டன் கில்
FIFA Argentina Vs Spain: ஸ்பெயின் சாம்பியன்.. கால்பந்து உலகக் கோப்பை - ஒவ்வொரு அணிக்கான பரிசுத்தொகை, யாருக்கு? எவ்வளவு?
ஸ்பெயின் சாம்பியன்.. கால்பந்து உலகக் கோப்பை - ஒவ்வொரு அணிக்கான பரிசுத்தொகை, யாருக்கு? எவ்வளவு?
Gold rate today : வாரத்தின் முதல் நாளிலே ஷாக் கொடுத்ததா தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் இதோ..
வாரத்தின் முதல் நாளிலே ஷாக் கொடுத்ததா தங்கம், வெள்ளி விலை.! இன்றைய விலை நிலவரம் இதோ..
Cheapest Compact SUV: நாட்டின் மலிவான சப் காம்பேக்ட் எஸ்யுவி - 24KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான சப் காம்பேக்ட் எஸ்யுவி - 24KM மைலேஜ், 5 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
Embed widget