Alia Bhatt : அம்மாடி.. இவ்ளோவா.. தங்கைக்கு வீடு பரிசளித்த ஆலியா பட் : எத்தனை கோடி தெரியுமா?
அலியா மும்பை, மேற்கு பாந்த்ராவில் உள்ள பாலி ஹில்ஸ் பகுதியில் 37.80 கோடி ரூபாய் மதிப்புள்ள அபார்ட்மெண்ட்களை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
![Alia Bhatt : அம்மாடி.. இவ்ளோவா.. தங்கைக்கு வீடு பரிசளித்த ஆலியா பட் : எத்தனை கோடி தெரியுமா? Actress Alia Bhatt Buys Premium House in Bandra Gifts Flats to Sister Shaheen details Alia Bhatt : அம்மாடி.. இவ்ளோவா.. தங்கைக்கு வீடு பரிசளித்த ஆலியா பட் : எத்தனை கோடி தெரியுமா?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/26/8e6f8fa9bcd05d0dcf3f14f8912f021b1682517341313574_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
நடிகை அலியா பட் மும்பை பாந்த்ரா பகுதியில் பல கோடி ரூபாய் மதிப்புள்ள புதிய அப்பார்ட்மெண்ட்களை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
பாலிவுட்டின் பிரபல நடிகர் ரன்பீர் கபூரை சென்ற ஆண்டு மத்தியில் திருமணம் செய்து கொண்ட நடிகை அலியா பட், ராஹா எனும் பெண் குழந்தைக்கு தாயானார். தொடர்ந்து குழந்தைப் பேறுக்கு பின் மீண்டும் ஃபிட்டாகி, தற்போது நடிப்பு, தயாரிப்பு, பிஸ்னஸ் என அலியா மீண்டும் பிஸியாக இயங்கி வருகிறார்.
இந்நிலையில் அலியா மும்பை, மேற்கு பாந்த்ராவில் உள்ள பாலி ஹில்ஸ் பகுதியில் 37.80 கோடி ரூபாய் மதிப்புள்ள அபார்ட்மெண்ட்களை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், தனது சகோதரி ஷாஹின் பட்டுக்கு அலியா பட் இரண்டு அபார்ட்மெண்ட்களை பரிசளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
தனது எடர்னல் சன்ஷைன் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட் ப்ரீமியம் தயாரிப்பு நிறுவனத்துக்காக இந்த அபார்ட்மெண்ட்டை அலியா பட் வாங்கியுள்ளதாகவும், சுமார் 2497 சதுர அடிகளை இந்த அபார்ட்மெண்ட் கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது
பாலிவுட்டில் ’ஸ்டூடண்ட் ஆஃப் த இயர்’ படம் மூலம் அறிமுகமாகி கடந்த 10 ஆண்டுகளாகக் கோலோச்சி வரும் அலியா பட், முன்னதாக ஆர்.ஆர்.ஆர் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவிலும் கால் பதித்தார். அடுத்ததாக ஹாலிவுட்டில் கால் பதிக்க உள்ள அலியா பட், ஹார்ட் ஆஃப் ஸ்டோன்ஸ் எனும் ஹாலிவுட் படத்தில் நடித்து வருகிறார்.
மற்றொரு புறம் நடிகர் ரன்வீர் சிங் உடன் இரண்டாம் முறையாக ஜோடி சேர்ந்து ‘ராக்கி அவுர் ராணி கி பிரேம் கஹானி' படத்தில் அவர் அலியா பிஸியாக நடித்து வருகிறார்.
முன்னதாக Impactful International women 2023 எனும் பட்டியலில் ஒரே இந்தியராக அலியா பட் இடம்பெற்று லைக்ஸ் அள்ளினார்.
அதே போல் சென்ற வாரம் தன் திருமண நாளைக் கொண்டாடிய அலியா ரன்பீருடன் தான் இருக்கு மகிழ்வான தருணங்கள் குறித்த புகைப்படங்களை தன் இன்ஸ்டா பக்கத்தில் பகிர்ந்திருந்தார். அவருக்கு பல்வேறு திரைப்பிலங்களும் வாழ்த்து மழையைப் பொழிந்தனர்.
தங்கள் குழந்தை ராஹாவின் புகைப்படத்தை அலியா இன்னும் இணையத்தில் பகிராமல் பாதுகாத்து வரும் அலியா, முன்னதாக தன் கணவர் ரன்பீர், குழந்தை ராஹா இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்து அதனை டெலிட் செய்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: Ayalaan Glimpse: பறக்கும் தட்டில் இருந்து இறங்கிவரும் சிவகார்த்திகேயனின் ஏலியன் நண்பர்... மாஸ் காட்டும் அயலான் க்ளிம்ப்ஸ் வீடியோ!
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)