Entertainment Headlines: லியோ ரூ.540 கோடி வசூல்.. தங்கலான் டீசர்.. ரத்தம் ஓடிடி ரிலீஸ்.. சினிமா செய்திகள் இன்று!
Entertainment Headlines Oct 31: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
ரத்தத்தால் எழுதப்பட்ட ஒரு இனத்தின் சாட்சியம்... நாளை மாலை வரும் ‘தங்கலான்’ டீசர்.. அப்டேட் தந்த படக்குழு!
பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்துள்ள தங்கலான் திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி வெளியாக இருக்கிறது. பார்வதி திருவோத்து , மாளவிகா மோகனன் உள்ளிட்டவர்கள் நடித்து ஜி.வி பிரகாஷ் குமார் இந்தப் படத்திற்கு இசைமைத்துள்ளார். கோலார் தங்க வயல் சுரங்கத்தை அடிப்படையாக கொண்டு உருவாகியுள்ள இப்படம் ஒரு ஆக்ஷன் கலந்த அசத்தலான பீரியாடிக் திரைப்படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. மேலும் படிக்க
ரூ.1000 கோடியில் அரை கிணறு தாண்டிய லியோ! 12 நாட்களில் வியக்க வைக்கும் வசூல் சாதனை!
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து கடந்த அக்டோபர் 19ஆம் தேதி வெளியான திரைப்படம் லியோ. த்ரிஷா, கெளதம் மேனன், பிரியா ஆனந்த், அர்ஜூன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், மிஸ்கின், இயக்குநர் அனுராக் கஷ்யப், மடோனா செபாஸ்டியன் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். அனிருத் இசையமைத்திருக்கிறார். மேலும் படிக்க
படமாகும் இளையராஜாவின் வாழ்க்கை வரலாறு.. இசைஞானியாக தனுஷ்? உற்சாகத்தில் ரசிகர்கள்!
தமிழ் சினிமாவின் அடையாளங்களில் ஒருவராக விளங்குபவர் இசையமைப்பாளர் இளையராஜா. தேனி மாவட்டம், பண்ணைபுரத்தில் தொடங்கி கோலிவுட்டில் 1970களில் நுழைந்து, தமிழ் சினிமா தாண்டி, இசை ரசிகர்களின் மனங்களில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இன்று வரை ராஜ்ஜியம் நடத்தி வருபவர் இசையமைப்பாளர் இளையராஜா. சினிமா துறைக்குள்ளேயே பல வெறித்தனமான ரசிகர்களைக் கொண்டுள்ள ஜாம்பவான் இசையமைப்பாளரான இளையராஜாவின் வாழ்க்கை வரலாற்றுப் படத்தை எடுக்க பல்வேறு இயக்குநர்களும் பல தருணங்களில் ஆர்வம் காண்பித்தே வந்துள்ளனர். மேலும் படிக்க
எல்லா ஊர்லயும் நம்ம ரூல்ஸ்... மீண்டும் ஒருமுறை திரையரங்குகளில் ரஜினி கமல் ராஜ்ஜியம்.
ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகிய இருவர் இணைந்து நடித்தப் படங்கள் ஒரே நாளில் ரிலீஸாவது என்பது ஒரு திருவிழாவுக்கு நிகராக கொண்டாடப்படும் காலம் இருந்திருக்கிறது. இரண்டு நடிகர்களின் ரசிகர்கள் ஒரே திரையரங்கத்தில் இருப்பது என்பது எந்த நேரம் வேண்டுமானால் வெடிக்கக்கூடிய ஒரு குண்டைப் போல்தான். அப்படி ரஜினி மற்றும் கமல் நடித்து ஒரே நாளில் இதுவரை மொத்தம் 14 படங்கள் வெளியாகி இருக்கிறது. மேலும் படிக்க
ஓடிடியில் வெளியாகும் விஜய் ஆண்டனியின் ‘ரத்தம்' படம்...என்னைக்கு தெரியுமா?
விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த அக்டோபர் 6 ஆம் தேதி வெளியான திரைப்படம் ரத்தம். தமிழ்ப்படம் படத்தை இயக்கிய சி.எஸ்.அமுதன் இந்தப் படத்தை இயக்கினார். விஜய் ஆண்டனி, நந்திதா ஸ்வேதா, மஹிமா நம்பியார், ரம்யா நம்பீசன், நிழல்கள் ரவி, ஜெகன் கிருஷ்ணன் உள்ளிட்டவர்கள் நடித்துள்ளார்கள். கண்ணன் நாராயணன் இந்தப் படத்துக்கு இசையமைத்திருக்கிறார். கோமல் போஹ்ரா, பங்கஜ் போஹ்ரா, தனஞ்சயன் ஆகியவர்கள் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளார்கள். மேலும் படிக்க
எல்.சி யு டைட்டில் ஐடியா...லியோ படத்தில் விஜயின் டைட்டில் கார்ட் குறித்து லோகேஷ் கனகராஜ்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் லியோ திரைப்படம் கடந்த அக்டோபர் 19 ஆம் தேதி வெளியாகியது. விஜய் , த்ரிஷா, பிரியா ஆனந்த்,கெளதம் மேனன் , மேத்யு தாமஸ், சாண்டி மாஸ்டர், மிஸ்கின் , சஞ்சய் தத், அர்ஜூன், மடோனா செபாஸ்டியன் , அனுராக் கஷ்யப் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். மாஸ்டர் படத்தைத் தொடர்ந்து இந்தப் படத்தில் இரண்டாவது முறையாக லோகேஷ் விஜயும் இணைந்துள்ளார்கள். லியோ திரைப்படம் இதுவரை உலகளவில் 500 கோடி வசூல் செய்துள்ளதாக தகவல்கள் கூறப்படுகின்றன. மேலும் படிக்க