![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Entertainment Headlines: ஜப்பான் இசை வெளியீட்டு விழா.. லியோ ஓடிடி ரிலீஸ் தேதி.. சினிமா செய்திகள் இன்று!
Entertainment Headlines Oct 28: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
![Entertainment Headlines: ஜப்பான் இசை வெளியீட்டு விழா.. லியோ ஓடிடி ரிலீஸ் தேதி.. சினிமா செய்திகள் இன்று! Entertainment Headlines Oct 28 tamil cinema Leo movie vijay biggboss 7 tamil kamalhaasan Japan Karthi 25 Entertainment Headlines: ஜப்பான் இசை வெளியீட்டு விழா.. லியோ ஓடிடி ரிலீஸ் தேதி.. சினிமா செய்திகள் இன்று!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/10/28/cc40359f699f906e58f1b771932b23c01698493412427574_original.png?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
இன்று நடக்கிறது ஜப்பான் இசை வெளியீட்டு விழா.. ட்ரெய்லர் வெளியாகும் நேரத்தை அறிவித்த படக்குழு..!
நடிகர் கார்த்தி நடித்து ஜப்பான் படத்தின் ட்ரெய்லர் வெளியாகும் நேரத்தை படக்குழு அறிவித்துள்ளதால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி படம் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களிடையே தனக்கென ஒரு இடத்தை பிடித்துள்ள இயக்குநர் ராஜூ முருகன், தற்போது ‘ஜப்பான்’ படத்தை எடுத்து முடித்துள்ளர். ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்தில் கார்த்தி, அனு இம்மானுவேல், சுனில், விஜய் மில்டன், கே.எஸ் ரவிகுமார் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். மேலும் படிக்க
விவேக்குடன் நடிக்க மறுத்த 2 பிரபல ஹீரோக்கள்.. உடனடியாக ஓகே சொன்ன கேப்டன் விஜயகாந்த் - நெகிழ வைத்த சம்பவம்
நடிகர் விஜயகாந்த் பற்றி நேர்காணல் ஒன்றில் மறைந்த நடிகர் விவேக் தெரிவித்த கருத்து இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது. தமிழ் சினிமா ரசிகர்களால் புரட்சிக்கலைஞர், கருப்பு எம்ஜிஆர் என அன்போடு அழைக்கப்படுபவர் விஜயகாந்த். திரைத்துறையினரிடம் கேட்டால் கூட அவர் மாதிரி வருமா? என கேட்கும் அளவுக்கு தன்னலம் பாராது உதவி செய்பவர். மேலும் படிக்க
மணிரத்னம் சொன்னா என்னவேணா செய்வேன்...மும்பை திரைப்பட விழாவில் கமல்ஹாசன் பளிச்!
உலகநாயகன் கமல்ஹாசன் தற்போது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக இருக்கிறார். கூடுதலாக பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கி வருகிறார். விக்ரம் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கமல்ஹாசன் நடிப்பில் வெளியாக இருக்கும் அடுத்த படத்திற்காக ரசிகர்கள் ஆர்வமாகக் காத்திருக்கிறார்கள். படங்களில் நடிப்பது மட்டுமில்லாமல் தனது தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் ஃபிலிம்ஸ் தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். மேலும் படிக்க
லீவுலாம் முடிஞ்சது.. இவ்வளவு சீக்கிரமா ஓடிடிக்கு வரும் விஜய்யின் ‘லியோ’... இதுதான் தேதி!
நடிகர் விஜய் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வரும் லியோ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. முன்னதாக வெளியான விஜய் படங்களுக்கு இல்லாத வகையில் ஹைப், லோகேஷ் யுனிவர்ஸ், அட சொல்ல வைக்கும் விஜய், அதிரடி ஆக்ஷன் விருந்து, அனிருத்தின் பிஜிஎம் என மாஸ் பேக்கேஜாக அத்தனை கமர்ஷியல் அம்சங்களுடனும் கடந்த அக்.19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது. மேலும் படிக்க
விஷ்ணுவ தள்ளிவிட்டது யாரு? குறும்படம் போட ரெடியான கமல்.. களைகட்டும் பிக்பாஸ் எபிசோட்
பிக்பாஸ் வீட்டில் விஷ்ணுவை தள்ளிவிட்டது யாரு என்றும், நீங்கள் ஏன் சத்தியம் செய்யவில்லை எனவும் அக்ஷயாவை பார்த்து கமல்ஹாசன் கேட்கும் ப்ரோமோ வெளியாகி உள்ளது. கமல்ஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் சீசன் 7 கடந்த ஒன்றாம் தேதியில் இருந்து ஒளிபரப்பாகி வருகிறது. இந்த சீசனில் 18 போட்டியாளர்கள் பங்கேற்றிருந்த நிலையில், கடந்த 3 வாரங்களில் அனன்யா, பவா செல்லதுரை மற்றும் விஜய் வர்மா எலிமினேட் ஆகி இருக்கிறார்கள். மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)