Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
அஜித் குமார் நடித்து வரும் குட் பேட் அக்லி படத்திற்கு தேவிஶ்ரீ பிரசாத் இசையமைத்து வந்த நிலையில் அவரை படத்தில் இருந்து நீக்கியது குறித்த காணம் வெளியாகியுள்ளது
குட் பேட் அக்லி
அஜித் குமார் தற்போது குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். த்ரிஷா இல்லனா நயன்தாரா , மார்க் ஆண்டனி உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்த ஆதிக் ரவிச்சந்திரன் இப்படத்தை இயக்கி வருகிறார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இப்படத்தை தயாரிக்கிறது. கடந்த மே மாதம் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாதில் தொடங்கியது. பின் ஸ்பெயின் , பல்கேரியா உள்ளிட்ட நாடுகளில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. 2025 ஆம் ஆண்டு பொங்கலுக்கு இப்படம் திரையரங்கில் வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது.
தேவிஶ்ரீ பிரசாத் மாற்றம்
குட் பேட் அக்லி படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் நடிகர் அஜித்தின் தீவிர ரசிகர். இப்படத்தை ஒரு ஃபேன்பாயாக இருந்து அஜித் ரசிகர்களுக்கு ஒரு கொண்டாட்டமான படமாக கொடுப்பதில் தீவிர முனைப்பு காட்டி வருகிறார். படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அடுத்தடுத்து வெளியான அஜித்தின் லுக் ஏற்கனவே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகளை உருவாக்கியுள்ளன. இப்படத்திற்கு முதலில் தேவிஶ்ரீ பிரசாத் இசையமைக்க இருப்பதாக தகவல் வெளியானது. தற்போது திடீரென்று இப்படத்தில் இருந்து தேவிஶ்ரீ பிரசாத் நீக்கப்பட்டுள்ளார் . அவருக்கு பதிலாக ஜி.வி பிரகாஷ் குமார் இப்படத்தின் புதிய இசையமைப்பாளராக இணைந்துள்ளார். ஜி.வி இசையமைத்து சமீபத்தில் வெளியான அமரன் மற்றும் லக்கி பாஸ்கர் ஆகிய இரு படங்களும் பெரியளவில் வெற்றிபெற்றுள்ளன. இதனால் அஜித் ரசிகர்கள் மேலும் உற்சாகமடைந்துள்ளார்கள். ஆனால் பாதி படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் ஏன் தேவிஶ்ரீ பிரசாத் படத்தில் இருந்து நீக்கப்பட்டார் என்கிற கேள்வி அனைவரிடமும் இருந்து வருகிறது. இதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.
காப்பியடித்ததால் கடுப்பான ஆதிக் ரவிச்சந்திரன்
குட் பேட் அக்லி படத்தில் சம்பவம் லோடிங் என்கிற ஒரு பாடல் உருவாகி வந்தது. இந்தப் பாடலுக்கான ட்யூனை தேவிஶ்ரீ பிரசாத் ஏற்கனவே தான் இசையமைத்த வால்டர் வீரய்யா படத்தில் இருந்து காப்பியடித்து பயன்படுத்தியுள்ளார். இதனால் கடுப்பான படத்தின் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இசையமைப்பாளரையே மாற்றியுள்ளதாக சமூக வலைதளங்களில் கூறப்படுகிறது. ஏற்கனவே ஒரே பாடலை தெலுங்கு தமிழ் என மாற்றி மாற்றி பயன்படுத்துவதில் தேவிஶ்ரீ பிரசாத் மீது பல விமர்சனங்கள் இருந்த நிலையில் தற்போது அவருக்கு பெரிய படவாய்ப்பு ஒன்று கைவிட்டு போயுள்ளது.
#DeviSriPrasad reused his Song From #WaltairVeerayya "Ponakaalu Loading" in #GoodBadUgly as "Sambavam dhaan Loading"#AdhikRavichandran was so disappointed with DSP's Work & now Music Director gonna be changed.#AjithKumar's #VidaaMuyarchi Final Leg Of SHOOT on DEC pic.twitter.com/UiPUoq9JKr
— Heyopinions (@heyopinionx) November 24, 2024