மேலும் அறிய

Leo OTT Release: லீவுலாம் முடிஞ்சது.. இவ்வளவு சீக்கிரமா ஓடிடிக்கு வரும் விஜய்யின் ‘லியோ’... இதுதான் தேதி!

லோகேஷ் யுனிவர்ஸ், அட சொல்ல வைக்கும் விஜய், அதிரடி ஆக்‌ஷன்  விருந்து, அனிருத்தின் பிஜிஎம் என மாஸ் பேக்கேஜாக அத்தனை கமர்ஷியல் அம்சங்களுடனும் கடந்த அக்.19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது.

நடிகர் விஜய் நடிப்பில் திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்று வரும் லியோ திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி பற்றிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கமர்ஷியல் பேக்கேஜ்

முன்னதாக வெளியான விஜய் படங்களுக்கு இல்லாத வகையில் ஹைப், லோகேஷ் யுனிவர்ஸ், அட சொல்ல வைக்கும் விஜய், அதிரடி ஆக்‌ஷன்  விருந்து, அனிருத்தின் பிஜிஎம் என மாஸ் பேக்கேஜாக அத்தனை கமர்ஷியல் அம்சங்களுடனும் கடந்த அக்.19ஆம் தேதி லியோ திரைப்படம் வெளியானது.

எதிர்பார்ப்பை எகிறவைத்த நட்சத்திரப் பட்டாளத்துடன் படத்தின் முதல் பாதி விறுவிறுவென அமைந்திருந்தாலும், இரண்டாம் பாதி மற்றும் ஃப்ளாஷ்பேக் காட்சிகள் விமர்சனங்களைப் பெற்று லியோ திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.

7 நாள் வசூல்

எனினும் முதல் வாரத்தில் வார விடுமுறை, ஆயுத பூஜை, விஜய தசமி விடுமுறை ஆகியவை காரணமாக  திரையரங்குகளில் படம் நல்ல கலெக்‌ஷனை அள்ளியுள்ளது. தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாள,ம், கன்னடம் என பான் இந்தியா திரைப்படமாக வெளியான லியோ திரைப்படம் முதல் நாளிலேயே உலகம் முழுவதும் 148 கோடிகள் வசூலித்ததாக அதிகாரப்பூர்வத் தகவல் வெளியானது.

 முன்னதாக முதல் வார இறுதியில் படம் ரூ. 461 கோடிகளுக்கும் மேல் வசூலித்துள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனமான 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.

ஓடிடி ரிலீஸ் எங்கே, எப்போது?

ஆனால் மற்றொருபுறம் விடுமுறையெல்லாம் முடிந்து படத்தின் வசூல் தொடர்ந்து சரிந்து வருகிறது. எனினும்  இந்த வீக்எண்ட் நாள்களால் விரைவில் லியோ ரூ.500 கோடிகள் வசூலைக் குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், படம் வந்து 10 நாள்கல்கூட கடந்திராத நிலையில், லியோ படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி லியோ படத்தின் ஓடிடி உரிமையை பிரபல ஓடிடி நிறுவனமான நெட்ஃப்ளிக்ஸ் தளம் பெற்றுள்ளதாகவும், அடுத்த மாதம் அதாவது நவம்பர் 17 அல்லது நவம்பர் 21ஆம் தேதி லியோ ஓடிடி தளத்தில் வெளியாகும் எனவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. எனினும் இதுவரை லியோ ஓடிடி ரிலீஸ் பற்றி அதிகாரப்பூர்வத் தகவல்கள் எதுவும் இதுவரை வெளியாகவில்லை.

வெற்றிவிழா

மற்றொருபுறம் லியோ படத்தின் வெற்றிவிழா வரும் நவம்பர் 1ஆம் தேதி சென்னை, நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறுவதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

மேலும், இந்த விழாவில் நடிகர் விஜய் கலந்து கொள்வதால் பாதுகாப்பு கோரி, லியோ தயாரிப்பாளர் லலித்குமார் சென்னை, பெரியமேடு காவல் நிலையத்துக்கு கடிதம் எழுதியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லியோ இசைவெளியீட்டு விழா ரத்தான நிலையில், விஜய் ரசிகர்கள் பட வெளியீட்டுக்கு முன் பெரும் சோகத்தில் ஆழ்ந்தனர். இந்நிலையில், அவர்களை உற்சாகப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள வெற்றிவிழா அறிவிப்புக்கு ரசிகர்கள் ஆரவாரம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் படிக்க: Killers Of The Flower Moon Review: கருப்புத் தங்கத்துக்காக நிகழ்ந்த கொடூரங்கள்.. ‘கில்லர்ஸ் ஆப் தி ஃப்ளவர் மூன்’ பட விமர்சனம்!

Vikraman Wife: 5 ஆண்டுகளாக படுத்தபடுக்கையாக இருக்கும் இயக்குநர் விக்ரமன் மனைவி.. சொத்தை வித்து மருத்துவ செலவு பார்க்கும் சோகம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Parliament Session: 2036ல் ஒலிம்பிக் நடத்த தயார்.. புதிய சட்டங்கள் மூலம் நியாயம்.. குடியரசுத்தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!
Parliament Session: 2036ல் ஒலிம்பிக் நடத்த தயார்.. புதிய சட்டங்கள் மூலம் நியாயம்.. குடியரசுத்தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!
Breaking News LIVE: 50 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட எமெர்ஜென்சி ஒரு கருப்பு நாள் - ஜனாதிபதி பேச்சால் சலசலப்பு
50 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட எமெர்ஜென்சி ஒரு கருப்பு நாள் - ஜனாதிபதி பேச்சால் சலசலப்பு
உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 79,000க்கு மேல் உயர்வு; சுமார் 24,000 வர்த்தகத்தில் நிஃப்டி!
உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 79,000க்கு மேல் உயர்வு; சுமார் 24,000 வர்த்தகத்தில் நிஃப்டி!
Latest Gold Silver Rate: சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’Rahul Gandhi | BJP-க்கு செக் வைத்த ராகுல்..எதிர்க்கட்சி தலைவரின் POWER! எகிறும் எதிர்பார்ப்புMR Vijayabaskar  : MR விஜயபாஸ்கர் தலைமறைவு? தேடுதல் வேட்டையில் தனிப்படை! கரூரில் பரபரப்பு!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Parliament Session: 2036ல் ஒலிம்பிக் நடத்த தயார்.. புதிய சட்டங்கள் மூலம் நியாயம்.. குடியரசுத்தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!
Parliament Session: 2036ல் ஒலிம்பிக் நடத்த தயார்.. புதிய சட்டங்கள் மூலம் நியாயம்.. குடியரசுத்தலைவர் உரையின் முக்கிய அம்சங்கள்!
Breaking News LIVE: 50 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட எமெர்ஜென்சி ஒரு கருப்பு நாள் - ஜனாதிபதி பேச்சால் சலசலப்பு
50 ஆண்டுகளுக்கு முன் கொண்டுவரப்பட்ட எமெர்ஜென்சி ஒரு கருப்பு நாள் - ஜனாதிபதி பேச்சால் சலசலப்பு
உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 79,000க்கு மேல் உயர்வு; சுமார் 24,000 வர்த்தகத்தில் நிஃப்டி!
உச்சத்தில் பங்குச் சந்தை: சென்செக்ஸ் 79,000க்கு மேல் உயர்வு; சுமார் 24,000 வர்த்தகத்தில் நிஃப்டி!
Latest Gold Silver Rate: சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
சட்டென குறைந்த தங்கம் விலை.. மாற்றமில்லா வெள்ளி விலை.. குஷியில் மக்கள்..!
Kalki 2898 AD‌‌ Review: அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
அதிகாலையில் அலைமோதிய கூட்டம்.. பிரபாஸின் “கல்கி ஏடி 2898” படம் எப்படி இருக்கு? - விமர்சனம் இதோ!
TANUVAS: கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? நாளை கடைசி!
TANUVAS: கால்நடை மருத்துவப் படிப்புக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? நாளை கடைசி!
AIADMK Protest: கள்ளச்சாராய விவகாரம்.. சட்டப்பேரவை சஸ்பெண்ட்.. அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் இபிஎஸ் உண்ணாவிரதம்!
கள்ளச்சாராய விவகாரம்.. சட்டப்பேரவை சஸ்பெண்ட்.. அதிமுக எம்.எல்.ஏ.க்களுடன் இபிஎஸ் உண்ணாவிரதம்!
Vijay students meet : நாளை விஜய் பேசப்போகும் அரசியல் என்ன ? கட்சித் துவங்கிய பின் முதல் நிகழ்ச்சி ..! ஏற்பாடுகள் தீவிரம்
Vijay students meet : நாளை விஜய் பேசப்போகும் அரசியல் என்ன ? கட்சித் துவங்கிய பின் முதல் நிகழ்ச்சி ..! ஏற்பாடுகள் தீவிரம்
Embed widget