"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
ஐபிஎல் ஏலத்தில் இந்திய சுழற்பந்து ஜாம்பவானும் தமிழக வீரருமான ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது.
இன்றைய ஐபிஎல் ஏலத்தில் ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது. அதேபோல, நியூசிலாந்து அணி வீரர் டேவன் கான்வாயை தங்களுடைய முதல் வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது. அவரை 6.25 கோடி ரூபாய்க்கு வாங்கிய சிஎஸ்கே, அடுத்ததாக ராகுல் திரிபாதியை 3.40 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. சாமர்த்தியமாக செயல்பட்ட சென்னை அணி, ரச்சின் ரவீந்திராவை 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
ஐபிஎல் 2025 சீசனில் ஒவ்வொரு அணி சார்பிலும் பங்கேற்க உள்ள வீரர்களுக்கான மெகா ஏலம் இன்று நடைபெற்று வருகிறது. சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் இரண்டு நாட்கள் நடைபெறும் ஏலத்தில் 577 வீரர்களின் பெயர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
சென்னையின் மாஸ்டர் ஸ்ட்ரோக்:
சென்னை அணி, ஏலத்தில் யாரை வாங்கப்போகிறது என்பது பெரும் எதிர்பார்ப்புகளை கிளப்பியிருந்தன. அர்ஷ்தீப் சிங், சாஹல், முகமது ஷமி, கே. எல். ராகுல் ஆகியோரை வாங்க சென்னை அணி முயற்சி செய்தது. ஆனால், அனைத்தும் தோல்வியில் முடிந்தன.
முதல் அமர்வில் யாரையும் வாங்காமல் இருந்த சிஎஸ்கே இரண்டாவது அமர்வில் வேட்டையை தொடங்கியது. டேவன் கான்வாயை தங்களுடைய முதல் வீரராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. அவரை 6.25 கோடி ரூபாய்க்கு வாங்கிய சிஎஸ்கே, அடுத்ததாக ராகுல் திரிபாதியை 3.40 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது.
சாமர்த்தியமாக செயல்பட்ட சென்னை அணி, ரச்சின் ரவீந்திராவை 4 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுத்தது. இறுதியாக, தமிழக வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 9.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது.
சொந்த மண்ணுக்கு திரும்பும் அஸ்வின்:
தன்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையை சென்னை அணியில் தொடங்கிய அஸ்வின், தன்னுடைய சொந்த மண்ணுக்கு திரும்புகிறார்.
முகமது ஷமியை 10 கோடி ரூபாய்க்கு ஹைதராபாத் அணியும் மிட்செல் ஸ்டார்கை 11 கோடியே 75 லட்சம் ரூபாய்க்கு டெல்லி அணியும் வாங்கியது. ஜாஸ் பட்லரை 15 கோடியே 50 லட்சம் ரூபாய்க்கு ஏலம் எடுத்தது குஜராத் அணி.
வீரர்களின் அடிப்படை விலை ரூ.30 லட்சத்திலிருந்து ரூ.2 கோடி வரை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதிலிருந்து அதிகபட்சமாக 207 வீரர்கள் மட்டுமே ஏலத்தில் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இதையும் படிக்க: கைதூக்கிய CSK.. ஆனா, டெல்லிக்கு ஜாக்பாட்.. குறைவான விலையில் ஏலத்தில் சென்ற கே.எல். ராகுல்!