Entertainment Headlines: பங்காரு அடிகளார் மறைவுக்கு பிரபலங்கள் இரங்கல்...லியோ வசூல் - இன்றைய சினிமா ரவுண்டப்!
Entertainment Headlines Oct 20: திரையுலகில் இன்று இதுவரை நடந்த நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
பங்காரு அடிகளார் மறைவுக்கு ரஜினிகாந்த், வைரமுத்து உள்ளிட்ட திரை பிரபலங்கள் இரங்கல்
உடல்நலக்குறைவால் நேற்று மறைந்த பங்காரு அடிகளாருக்கு ரஜினி இரங்கல் தெரிவித்துள்ளார். பங்காரு அடிகளாரின் மகன் அன்பழகனை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரஜினி இரங்கல் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதேபோன்று மலேசியாவில் இருக்கும் இசையமைப்பாளர் தேவா, பங்காரு அடிகளார் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும் படிக்க
Leo box office collections Day 1: பாக்ஸ் ஆபீஸை அடித்து நொறுக்கிய லியோ படம்.. முதல் நாள் வசூலே இத்தனை கோடியா..? கொண்டாடும் ரசிகர்கள்
பெரும் எதிர்பார்ப்புகளுக்கிடையே தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான விஜய் நடித்துள்ள லியோ படம் நேற்று உலகம் முழுவதும் தியேட்டரில் வெளியானது. மாஸ்டர் படத்துக்குப் பின் இரண்டாவது முறையாக விஜய்யை வைத்து லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹீரோயினாக த்ரிஷா நடித்துள்ள நிலையில், கௌதம் வாசுதேவ் மேனன், பிரியா ஆனந்த், சஞ்சய் தத், மடோனா செபாஸ்டியன், மன்சூர் அலிகான், இயக்குநர் மிஷ்கின், அர்ஜூன், பிக்பாஸ் ஜனனி, சாண்டி மாஸ்டர்,மேத்யூ தாமஸ், பாபு ஆண்டனி என பல பிரபலங்களும் இணைந்துள்ளனர். மேலும் படிக்க
லியோவின் வில்லனுக்கு இத்தனை கோடி சம்பளமா..? - வெளியான சூப்பர் தகவல்..
லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் ஹீரோவுக்கு பலர் வில்லனாக நடிப்பது வழக்கம். அந்த வகையில் லியோவில், விஜய்க்கு வில்லனாக அர்ஜூன், சஞ்சய் தத், சாண்டி மாஸ்டர், மிஷ்கின் உள்ளிட்டோர் வில்லனாக நடித்து கெத்து காட்டியுள்ளனர். ஆக்ஷனில் பட்டையை கிளப்பும் விஜய்க்கு வில்லனாக அர்ஜூன் மட்டும் நடிக்காமல், பாலிவுட் ஸ்டார் சஜ்சய் தத் நடித்து மிரட்டியுள்ளார். வில்லன்களுடன் மோதும் விஜய்யின் சிறப்பான நடிப்பு தியேட்டர்களில் அப்லாஸ்களை வாங்க வைத்துள்ளது. மேலும் படிக்க
Seetha Raman: சீதா கொடுத்த பதிலடி.. மகாவுக்கு காத்திருக்கும் ஷாக்.. இன்றைய சீதாராமன் சீரியலின் அப்டேட் இதோ..!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் திங்கள் முதல் வெள்ளி வரை தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் சீதா ராமன். இந்த சீரியலின் நேற்றைய எபிசோடில் மக்காவுக்கு சீதா அடுத்தடுத்து பல்பு கொடுத்த நிலையில் இன்று நடக்க போவது என்ன? என்பது குறித்து பார்க்கலாம் வாங்க. மேலும் படிக்க
Ethirneechal : என்ன நடக்குமோ என்ற பயத்தில் ஈஸ்வரி.. தர்ஷினியின் துடுக்கான பதிலடி... நந்தினி கொடுத்த ஷாக்... எதிர்நீச்சல் இன்று..
சன் டிவியில் ஒளிபரப்பாகும் எதிர்நீச்சல் (Ethirneechal) தொடரின் நேற்றைய எபிசோடில் கதிர் வளவனையும், கரிகாலனையும் அழைத்து கொண்டு ஊருக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே செல்வதாக சொல்கிறான். அப்பத்தா வீட்டில் உள்ள அனைவரையும் ஒன்றாக கூட்டி வைத்து மீட்டிங் ஒன்று போடுகிறார். அவர் நடத்த போகும் விழாவில் 40% ஷேர் குறித்த முடிவை அறிவிக்க போவதாகவும் அனைவரும் நிச்சயம் அந்த விழாவில் வந்து கலந்து கொள்ள வேண்டும் என்றும் சொல்கிறார். மேலும் படிக்க